காலங்கடந்து #MeToo போடுறதுக்கு பதிலா அலுவலகத்துல பெண்கள் இப்படியும் நடந்துக்கலாமே!

வளர்ந்து வரும் விலைவாசி உயர்வு, பொருளாதாரம் என ஒரு குடும்பத்தில் அனைவருமே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், இன்றைய காலகட்டத்தில் ஆணும், பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகும்.

காலங்கடந்து #MeToo போடுறதுக்கு பதிலா அலுவலகத்துல பெண்கள் இப்படியும் நடந்துக்கலாமே!

 

இத்தகைய சூழ்நிலையில், சக ஆண் பணியாளர்களிடம் இருந்து பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்றுதான் இன்று பார்க்கப் போகிறோம். இங்கே குறிப்பிடப்பட்டுள்ளதை பின்தொடர்ந்தீர்கள் என்றால் மீடூ விவகாரத்தில் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம்.

ஆடையில் கவனம்

ஆடையில் கவனம்

அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் ஆடைச் சுதந்திரம் தற்போது அதிகரித்துள்ளது என்றே கூறலாம். ஆனால், பொது இடங்களில் அந்த ஆடைச் சுதந்திரத்திலும் கட்டுப்பாடாக இருக்க வேண்டியது அவசியம். நாம் அணியக் கூடிய உடைகள் சக பணியாளர்களின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. இதனைத்தான் ஆள் பாதி ஆடைபாதி என்கிறோம். மாடர்ன் உடை அணிந்தாலும் அதனை நேர்த்தியாக உடுத்துங்கள்.

இட்ஸ் மை பர்சனல்..!

இட்ஸ் மை பர்சனல்..!

இது ஆண், பெண் என அலுவலகத்தில் இருபாலினத்தவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றுதான். குறிப்பாக பெண்கள். உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் உங்களுடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர்கள். பல பிரச்சனைகளின் ஆரம்பமே இங்கேதான் ஆரம்பிக்கிறது. குடும்ப விஷயங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்டால் அவர்களே உங்களது குடும்பம் போல் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வர்.

இதுதான் தவறான செயல்
 

இதுதான் தவறான செயல்

அலுவலகத்தில் ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல. அதற்காக எல்லாவற்றுக்கும் கைகொடுப்பது, தொட்டுப் பேசுவது கூடாது. உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள். உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.

இடம், பொருள், ஏவல்

இடம், பொருள், ஏவல்

அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே. அங்கே உங்களது தனிப்பட்ட விருப்பங்களுக்கும், குடும்ப பிரச்சனைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை முதலில் உணரவேண்டும். குறிப்பாக, nவலை தொடர்பான அலுவலக விசயங்களை அலுவலகத்திலேயே முடித்துவிடுங்கள்.

கிசு.. கிசு..

கிசு.. கிசு..

அலுவலகத்தில் சக பணியாளருடன் எந்நேரமும் கிசுகிசு என தாழ்வான குரலில் பேசுவதைத் தவிர்த்துவிடுங்கள். இது பிற பணியாட்களுக்கும், கேட்பவர்களுக்கும், தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தி விடும்.

தோற்றம்

தோற்றம்

ஒருவரை சந்திக்கும்போது உங்களது தோற்றம் மட்டுமல்ல, நடந்துகொள்ளும் விதமும்தான் உங்கள் மீதான இமேஜை அவரிடம் உருவாக்கும். நீங்கள் செய்யக் கூடிய வேலையும், அனுபவமும் மட்டுமே எல்லா நேரங்களிலும் நன்மதிப்பை பெற்றுத் தந்துவிடுவதில்லை. அனைவரிடத்திலும் நீங்கள் நடந்து கொள்ளும் விதமே உங்களுடைய மதிப்பை தீர்மானிக்கும்.

தேவையின்றி வேண்டாம்

தேவையின்றி வேண்டாம்

சக பணியாளர்களிடம் உங்களுடைய பர்சனல் போன் நம்பரைப் பகிராமல் இருப்பது நல்லது. மேலும், அலுவலகத்தை விட்டு வெளியேறிய பிறகு உடன் பணியாற்றுவோரிடம் இருந்து வரும் அழைப்பையும் தவிர்த்துவிடலாம். இவை தேவையற்ற பிரச்சனைகளை உங்களுக்கு ஏற்படுத்தி விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

நல்லவங்களா, கெட்டவங்களா ?

நல்லவங்களா, கெட்டவங்களா ?

அனைவருக்குமே லுவலகத்தில் ஒரு பெஸ்ட்டி இருப்பது வழக்கம். எப்போதுமே அந்த நண்பருடன் தான் பேசுவோம், சுற்றுவோம், பணிகளைப் பகிர்ந்து கொள்வோம். அவ்வாறு நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் உண்மையில் உங்களிடம் நேர்மையாக நடந்து கொள்கிறாரா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

புகார் அளியுங்கள்

புகார் அளியுங்கள்

ஒருவேலை சக பணியாளர்களிடம் இருந்தோ அல்லது மூத்த அதிகாரியிடம் இருந்தோ உங்களுக்குப் பிரச்சனை வருகிறது என்றால் உடனே புகார் அளித்துவிடுங்கள். காலம் தாழ்த்தி நீங்கள் செய்யக் கூடிய புகார் பயனற்றது ஆகும்.

ஆபீசுல இத மட்டும் டிரை பண்ணி பாருங்க, எல்லாரும் உங்கள சுத்தி சுத்தி வருவாங்க!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
How To Deal With Workplace Bullying And Harassment
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X