அலுவலகத்தில் ஒரே டார்ச்சரா இருக்கா ? இனிமேல் இதை மட்டும் டிரை பண்ணி பாருங்க.!!

அலுவலகத்தில் நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் பிரச்சனைகளும் உங்களைத் தேடி வரும். அந்தமாதிரியான சூழலில் உங்களை எப்படியெல்லாம் பாதுகாத்துக் கொள்ளலாம் தெரியுமா ?

அலுவலகச் சூழலில் பிறரிடம் இருந்து தொந்தரவுகள் அதிகரிப்பது என்பது தவிர்க்க முடியாத விசயம் தான். என்னதான் நாம் உண்டு, நம் வேலை உண்டு என செயல்பட்டாலும் சில நேரங்களில் உங்கள் உடனிருப்போரே சில செயல்களின் மூலம் உங்களது வேலையை பாதித்துவிடுவார்.

அலுவலகத்தில் ஒரே டார்ச்சரா இருக்கா ? இனிமேல் இதை மட்டும் டிரை பண்ணி பாருங்க.!!

ஒருவேலை நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இன்னும் கூடுதலாகவே பிரச்சனைகளும் உங்களைத் தேடி வரும். அந்தமாதிரியான சூழலில் உங்களை எப்படியெல்லாம் பாதுகாத்துக் கொள்ளலாம் தெரியுமா ?

வெளியில் காட்டாதீர்கள்..!

வெளியில் காட்டாதீர்கள்..!


அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் போது நீங்கள் கையாளவேண்டி முதல் அம்சமே இதுதான். எந்த சூழ்நிலையிலும் உங்களது பலவீனத்தை வெளியில் காட்டாதீர்கள். ஒருவேலை நீங்கள் தொந்தரவுகளுக்கு அஞ்சி விட்டீர்கள் என்றால் அது உங்களது வேலையையும் பாதிக்கும். உங்கள் மீதான மதிப்பையும் கெடுத்துவிடும்.

கூடுதலாகச் செயல்படுங்கள்..!

கூடுதலாகச் செயல்படுங்கள்..!


பிரச்சனைகளைக் கண்டு துவண்டுவிடால் இன்னும் கூடுதலாக பணியாற்றுங்கள். உங்களது இலக்கை மட்டும் நோக்கிச் செயல்படுங்கள். விரைவாக இலக்கினை அடைந்துவிடுங்கள். உங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோரையே இது அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிடும்.

சரியான முடிவு..!
 

சரியான முடிவு..!


இதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களுமே மிக முக்கியமானதாகும். எந்த முடிவு எடுத்தாலும் பல முறை சிந்தித்து செயல்படுங்கள். சிறிய தவறு கூட உங்களைக் கீழ் இறக்கிவிடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

உங்களுக்காக ஒருவர்..!

உங்களுக்காக ஒருவர்..!


நம்பிக்கைக்கு உரிய ஒரு பணியாளரை, நண்பரைத் தேர்வு செய்யுங்கள். அவர் நீங்கள் பணியாற்றும் நிறுவனத்திலேயே கூடுதல் பொறுப்புள்ளவராக இருந்தால் மிகவும் நன்று. அன்றாடம் உங்களுக்கு வரும் பிரச்சனைகளை அவரிடம் தெரிவித்து விடுங்கள். ஏனெனில் உங்கள் மீது தவறான புகார் வரும் போது அவரே உங்களுக்குக் கைகொடுப்பார்.

மதிப்பளியுங்கள்..!

மதிப்பளியுங்கள்..!


உங்களது அணித் தலைவர்தான் உங்களுக்குக் கடுமையான தொந்தரவுகள் தருபவராக இருந்தாலும் அவர் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். உங்களுக்கு என ஒதுக்கும் பணியை சிறப்பாகச் செய்து காட்டுங்கள்.

எதிர்பார்ப்பை அறிந்துகொள்ளுங்கள்..!

எதிர்பார்ப்பை அறிந்துகொள்ளுங்கள்..!


ஏதேனும் ஒன்றை எதிர்பார்த்துத்தான் உங்களுக்கு இடையூறுகளே ஏற்படுத்தப்படும். அது என்னவென்று அறிந்து செயல்படுங்கள். முடிந்தால் அவர்களது தேவையை பூர்த்தி செய்து கொடுங்கள்.

விட்டுக்கொடுக்காதீர்..!

விட்டுக்கொடுக்காதீர்..!


உங்களுக்கு என மூத்த அதிகாரி ஒதுக்கிய பணியை எக்காரணத்தைக் கொண்டும் பிறருக்கு விட்டுக் கொடுக்காதீர்கள். மேலும், நீங்கள் செய்யும் வேலையில் தொடர்பற்ற குறைகள் உள்ளன போன்ற தேவையற்ற குறைகள் உங்கள் மீது சுமத்தப்பட்டாலும் உங்களது பணியை விட்டுக் கொடுக்காதீர்கள். அது உங்களுடைய சுயமரியாதையையே விட்டுக்கொடுப்பதற்குச் சமமாகும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
How To Deal With The Most Uncomfortable Work Situations
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X