டிஎன்பிஎஸ்சி தேர்வில் இத டிரை பண்ணி பாருங்க, நீங்கதான் டாப்பு!

போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

By Kani

முயற்சி திருவினையாக்கும்... ஓய்வில்லாத அலைகளே பாறைகளை மணல் துகள்களாக மாற்றுகின்றன. முடியும் என்று நினைத்தால் மட்டும் போதாது அதற்கான சரியான முயற்சியும், பயிற்சியும் மேற்கொண்டால் ஒழிய வெற்றி சாத்தியப்படாது.

நம்மால் முடியாது என்று பின் வாங்கும் ஒவ்வெரு விஷயமும் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் செயல்படுத்திகொண்டுதான் இருக்கிறார் என்பதை மறக்காதீர்கள்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் இத டிரை பண்ணி பாருங்க, நீங்கதான் டாப்பு!

முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறோம். வயது வரம்பு முடியப்போகிறது. அரசு வேலை உடனே வேண்டும் ? என்ன செய்வது? பலமுறை முறை தேர்வு எழுதியும் வேலை வாங்க முடியவில்லை, சொற்ப மதிப்பெண்களில் வெற்றிகான வாசல் கதவு அடைக்கப்படுகிறது என்று கவலை கொள்பவரா?

கவலையை விடுங்கள் அடுத்து வரும் முதல் முயற்சியிலேயை வெற்றி பெறுவதற்கான எளிதான வழிமுறைகளைக் காண்போம்.

தீர்மானம்:

தீர்மானம்:


போட்டித் தேர்வென்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவதே. மனதை ஒரு நிலைப்படுத்தி நாம் என்னவாக வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். தீர்மானித்த பின்பு, அதற்கான செயல்களில் இறங்க வேணடும். முழுமனதோடு படிக்க தொடங்க வேண்டும். எடுத்துக்காட்டாக நான் அரசு அலுவலராக விரும்புகிறேன் என்று நீங்கள் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும். யார் வீட்டில்தான் பிரச்னை இல்லை. குழப்பங்களில், பிரச்னைகளில் மனதை தளர விடக்கூடாது.

கணிப்பு:

கணிப்பு:


வெற்றி பெற்றால் மட்டுமே இந்த உலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும். ஒரு மதிப்பெண்ணில் கோட்டை விட்டவரை பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஒரு மதிப்பெண் பெற்றிருந்தால் இப்போ நான் எங்க இருப்பேன் தெரியுமா? என்று நாம் மட்டும்தான் புலம்ப முடியும் கேட்பதற்கு எதிரில் யாரும் இருக்க மாட்டார்கள்.

"வெற்றி பெறும் வரை குதிரையை போல் ஓடு . வெற்றி பெற்ற பின் குதிரையை விடவும் வேகமாக ஓடு" என்பது பழமொழி. ஓடிக்கொண்டே இருங்கள்.

 

படிக்காமல் விடையளிக்கலாம்:

படிக்காமல் விடையளிக்கலாம்:


ஒரு சாதாரணமான போட்டி தேர்வாளரால் படிக்காமல் டிஎன்பிஎஸ்சி தேர்வில் 200க்கு 100 முதல் 120 கேள்விகளுக்கு சரியாக விடையளிக்க முடியும். தேர்வுக்கு படித்து வரும் தேர்வாளரால் 140 கேள்விகள் வரை விடையளிக்க முடியும்.

ஏனென்றால் டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல, எல்லாமே நேரடி வினாக்கள். அனைத்து கேள்விகளுமே நம் பள்ளி பருவத்தில் படித்தது. கணித வினாக்களுக்கு படிக்காமலேயே 25க்கு 15 வினாக்களுக்கு விடையளிக்க முடியும்.

 

கணித வினாக்களுக்கு விடையளிப்பது எப்படி?

கணித வினாக்களுக்கு விடையளிப்பது எப்படி?


குரூப் 2 தேர்வில் கணித வினாக்களை பொறுத்த வரை 15 வினாக்கள் படிக்காமல் விடையளிக்க முடியும். பயிற்சியின் மூலம் கூடுதலாக 5 வினாக்கள் விடையளிக்க இயலும். மீதமுள்ள 5 வினாக்கள் கடினமாக இருக்கும். கூடுதல் பயிற்சி, அனுபத்தின் மூலம் அந்த 5 மதிப்பெண்களை பெற முடியும்.

மொழிப்பாடங்களுக்கு ஏன் முக்கியத்துவம்?

மொழிப்பாடங்களுக்கு ஏன் முக்கியத்துவம்?


மொழிப்பாடங்களைப் பொறுத்தவரை 100 கேள்விகள் என்பதால் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நேரடியாக பதில் அளிக்கும் வண்ணம் கேள்விகள் அமையும். எனவே உங்களுக்கு விடை தெரிந்து இருந்தால் அந்த நூறு மதிப்பெண்களை எளிமையாக பெற்று விடலாம்.

பொருத்துக வினாக்களை பொறுத்தவரை நான்கில் ஒன்றோ அல்லது இரண்டோ நமக்கு தெரிந்து இருக்கும். எனவே இதனை எளிமையாக பொருத்தி பார்த்து விடையளிக்க முடியும்.

படிக்காமல் ஒருவரால் மொழிப்பாடத்தில் 50 முதல் 60 வினா வரை விடையளிக்க முடியும். இது எப்படி சாத்தியம் என்றால், அவருக்கு தீர்க்கமாக தெரிந்த வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க போகிறார் எனவே எந்த வித குழப்பமும் இல்லாமல் விடையளிக்க முடியும்.

அரைகுறையாக படித்தவர் சரியான பயிற்சி இன்மையால் இதுவா அதுவா என குழம்பி தவறாக விடையளிக்கிறார். இப்படி விடும் ஒரு மதிப்பெண்தான் அவரின் தலை எழுத்தை தீர்மானிக்கிறது. பயிற்சி மற்றும் குழுவாக படிப்பதன் மூலமாக இவற்றை சரி செய்ய இயலும்.

 

எவ்வளவு மதிப்பெண் வெற்றியை தீர்மானிக்கிறது?

எவ்வளவு மதிப்பெண் வெற்றியை தீர்மானிக்கிறது?


இந்த கேள்விக்கு சரியான பதில் கேள்வித்தாளின் கடினத்தன்மையினைப் பொறுத்தது. கேள்வித்தாள் கடினமாக இருக்கும் பட்சத்தில் 160 கேள்விகளுக்கு மேல் சரியாக விடையளித்தால் வெற்றிவாய்ப்பினை பெறலாம்.

கேள்வித்தாள் எளிமையாக இருக்கும் பட்சத்தில், விடையளிக்க வேண்டிய கேள்விகளின் எண்ணிக்கை 180 ஆக உயருகிறது. நாம் இப்போது கேள்விகளின் அடிப்படையில் மட்டும் விளக்கி வருகிறோம். மதிப்பெண் அடிப்படையில் குழம்ப வேண்டாம்.

200 கேள்விகளுக்கு எத்தனை கேள்விகள் சரியாக விடையளிக்க முடியும் என்பதை விரிவாக காண்போம்:

சராசரியாக 100 மொழிப்பாட கேள்விகளுக்கு 60 முதல் 70 கேள்விகள் வரை சரியாக பதில் அளிக்கலாம். இதுவே 90க்கு மேல் அதிகரிக்குமானால் வெற்றியை எளிதாக தட்டிப்பறிக்க முடியும்.

உங்களின் வெற்றியானது பொது வினாக்களுக்கு எப்படி விடையளிக்க போகிறீர்கள் என்பதை பொறுத்துதான் அமையும்.

 

பொது அறிவை பயன்படுத்துங்கள்!

பொது அறிவை பயன்படுத்துங்கள்!


தேர்வு கடினமோ, எளிதோ பொது அறிவுப்பகுதியில் 80 கேள்விகளுக்கு சரியாக விடையளிக்க வேண்டும். இந்த யுக்தி சாத்தியமானால்,90+80=170 ஒரு நல்ல மதிப்பெண்ணை பெற முடியும் இதன் மூலம் அரசு வேலைக்கனவு சாத்தியமாகும்.

இதுவே கேள்வி எளிமையாக கேட்கப்பட்டுள்ளது என்றால் 95+85=180 இது வெற்றியை மேலும் எளிமையாக்கும். 170 என்பது போதுமான ஒன்று.

போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்ச்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

அப்புறம் என்ன தேர்வில் வெற்றிவாகை சூட வேண்டியது மட்டுமே பாக்கி, நன்றே செய் இன்றே அதுவும் செய், தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
How to crack TNPSC group 2 in a single attempt
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X