குறைந்த செலவில் 'மண்ணை' ஆளும் சிறந்த படிப்பு!

Posted By: Kani

பூமியில் உள்ள காந்த, மின், மற்றும் நில அதிர்வு முறைகளைப் பற்றி அறிந்துகொள்ள பயன்படும் படிப்பே புவி இயற்பியல். இந்த வகையான படிப்பை படிப்பவர்கள் பெரும்பாலான நேரங்களை வெளியில் செலவிட வேண்டியிருக்கும்.

சிலர் கம்யூட்டரில் கண்டுபிடிப்புகள் குறித்து கணக்கிடுவது, இது தொடர்பான வரைபடங்களை உருவாக்குவது, மதிப்பீடு செய்வது போன்ற பணிகளை மேற்கொள்வர். மற்றும் சிலர் எண்ணெய், இரும்பு, தாமிரம் மற்றும் பல கனிமங்களின் பரிணாம வளர்ச்சியை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபடுவர்.

இந்தவகையான படிப்புகளை படிப்பதன் மூலம் இயற்கை வளங்களை கையாளுதல், பாதுகாத்தல், இயற்கை சீற்றங்களை முன்பே அறிதல் மற்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். எப்போதும் வேலைவாய்ப்பு மிகுந்த இத்துறையில் உள்ள கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்து பார்க்கலாம்.

படிப்புகள்/பிரிவுகள்:

 • சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Environmental Protection)
 • புவி இயற்பியல் களப்பணி (Geophysical Survey)
 • எடை அளவியல் (Gravimetric)
 • புவி வெப்ப ஆற்றல் (Geothermal Energy)        
 • நிலநடுக்கப் பொறியியல் (Earthquake Engineering)
 • காந்தவியல் (Magnetism)
 • கதிரியக்கம் (Radioactivity)
 • அலைமாலை அளவியல் (Gamma Spectrometry)
 • பாய்ம இயக்கவியல் (Fluid Dynamics)
 • கனிம இயற்பியல் (Mineral Physics)

மேற்கண்ட பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் பிஎஸ்சி, பிடெக், பிஎஸ், எம்எஸ்சி, பிஎச்டி, எம்டெக், எம்எஸ், டிபில், டிஎஸ்சி போன்ற பிரிவுகளில் பட்டம், ஆராய்ச்சி, பட்டயப்படிப்புகளை பயில முடியும்.

 சிறந்த கல்வி நிறுவனங்கள்

 • மனோன்மணியம் சுந்தரனார் யுனிவர்சிட்டி, திருநெல்வேலி.
 • டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் யுனிவர்சிட்டி, ஆந்திரா.
 • இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மும்பை, கோரக்பூர், ரூர்கி
 • பனாரஸ் ஹிந்து யுனிவர்சிட்டி, வாரணாசி
 • நேஷனல் ஜியோபிசிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், ஹைதராபாத்
 • இண்டியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ், தன்பாத்
 • ஆந்திரா யுனிவர்சிட்டி, விசாகப்பட்டினம்
 • உஸ்மானியா யுனிவர்சிட்டி, ஹைதராபாத்

இந்தத்துறையில் பயிலும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உலகம் மழுவதும் சில ஆராய்ச்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

ஆராய்ச்சி அமைப்புகளின் பட்டியல்:

 • தி பிரிட்டிஷ் ஜியோபிசிக்கல் சொசைட்டி, இங்கிலாந்து
 • ஜியாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா, அமெரிக்கா
 • தி கனடியன் சொசைட்டி ஃபார் ஜியோபிசிக்ஸ், கனடா
 • அமெரிக்கன் ஜியோபிசிக்கல் யூனியன், அமெரிக்கா
 • ஆஸ்திரேலியன் சொசைட்டி ஜியோபிசிசிஸ்ட், ஆஸ்திரேலியா
 • பிரிட்டிஷ் ஜியோபிசிக்கல் அசோசியேஷன், இங்கிலாந்து
 • சௌத் ஆப்பிரிக்கன் ஜியோபிசிக்கல் அசோசியேஷன், ஜாம்பியா
 • சொசைட்டி ஆஃப் பெட்ரோலியம் ஜியோபிசிசிஸ்ட், இந்தியா
 • இரானியன் ஜியோபிசிக்கல் சொசைட்டி, ஈரான்
 • ஜியாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் நியூசிலாந்து, நியூசிலாந்து

இத்துறையில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்க மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

உதவித்தொகைகளின் விபரம்:

 •  இன்ஸ்பையர் ஃபெல்லோஷிப், டி.எஸ்.டி, புதுதில்லி
 •  யங் சயின்டிஸ்ட் அவார்டு, டி.எஸ்.டி, புதுதில்லி
 •  ஃபெல்லோஷிப் ஃபார் ஓ.பி.சி, யு.ஜி.சி, புதுதில்லி
 •  ராஜிவ்காந்தி ஃபெல்லோஷிப், யு.ஜி.சி, புதுதில்லி
 •  ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ, சி.எஸ்.ஐ.ஆர், புதுதில்லி
 •  மௌலானா ஆசாத் ஃபெல்லோஷிப் ஃபார் மைனாரிட்டி, யு.ஜி.சி, புதுதில்லி
 •  இந்திராகாந்தி ஃபெல்லோஷிப், யு.ஜி.சி, புதுதில்லி
 •  கேட் (GATE) ஃபெல்லோஷிப், இந்திய அரசு
 •  ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ, ஐ.சி.ஏ.ஆர், புதுதில்லி
 •  ஸ்காலர்ஷிப் ஃபார் ஹையர் எஜுகேஷன், டி.எஸ்.டி, புதுதில்லி

வேலைவாய்ப்புகளை வழங்கும் அரசு நிறுவனங்கள்:

 •  மினிஸ்ட்ரி ஆஃப் கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்ட்டிலைசர்ஸ் 
 •  மினிஸ்ட்ரி ஆஃப் கோல் 
 •  மினிஸ்ட்ரி ஆஃப் டிஃபென்ஸ் 
 •  மினிஸ்ட்ரி ஆஃப் எர்த்சயின்சஸ் 
 •  மினிஸ்ட்ரி ஆஃப் மைன்ஸ் சயின்சஸ் 
 •  மினிஸ்ட்ரி ஆஃப் நியூ அண்டு ரிநியூவெபிள் எனர்ஜி 
 •  மினிஸ்ட்ரி ஆஃப் பெட்ரோலியம் அண்டு நேச்சுரல்கேஸ் 
 •  மினிஸ்ட்ரி ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி 
 •  மினிஸ்ட்ரி ஆஃப் ஸ்டீல் அண்டு டெக்னாலஜி 

இந்தத்துறையில் வெற்றிகரமாக படிப்பை முடிக்கும் பட்சத்தில் அரசாங்க வேலை முதல் பல்வேறு வகையான முண்ணனி நிறுவனங்களில் ஆசிரியர் வேலை வரை கைநிறைய சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இந்த வகையான படிப்பை முடிக்கும் பட்சத்தில் சயின்டிஸ்ட், ரிசர்ச் ஃபெல்லோ, ஜூனியர் சயின்டிஸ்ட், ரிசர்ச்சர், எக்ஸ்ப்ளோரர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னிக்கல் ஆபீசர், பேராசிரியர், குவாலிட்டி இன்ஸ்பெக்டர், சீனியர் ரிசர்ச்சர் போன்ற பணியிடங்களில் பணியமர்த்தப் படுவார்கள். 

சம்பளம்:

ஆரம்பக்கட்டத்தில் ரூ 35,000 முதல் பெறலாம். அனுபவம் பெற,பெற சம்பள விகிதமும் அதற்கேற்றார் போல் கூடும், தோராயமாக ரூ.50,000 முதல் ரூ.2,25,000 வரை பெறலாம். வெளிநாடுகளில் இத்தகைய படிப்பு முடித்தவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதுடன் கைநிறைய ஊதியம் வழங்குகிறது. 

இந்த பூமி சுற்றும் வரை இந்த வகையான படிப்பிற்கு வேலை வாய்ப்பு இருந்து கொண்டே இருக்கும், இதைப்பயில அடிப்படை தகுதி ஆராய்ச்சி எண்ணம் இருத்தல் வேண்டும். மற்றும் உயிரினங்கள் மீதும், கனிமவளங்கள்,கண்டுபிடிப்புகள் மீதும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு ஏற்ற துறை.

English summary
Become a Geophysicist... A What?

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia