ஃபேஸ்புக்'குல அக்கவுண்ட் இருக்கா? ஒரு போஸ்ட்டுக்கு லட்ச ரூபாய் ஊதியம்!

நம்ம அப்பா அம்மா ஒரே எடத்துல 10 வருஷம் வேலை செஞ்சுருக்கலாம். ஆனா நாம ஒரே கம்பெனில, ஒரே துறைல பல வருஷம் இருக்கறது சாத்தியம் இல்ல. இதுல நல்ல விஷயம், நீங்க இருக்கவேண்டிய அவசியமும் இல்ல. இந்த காலத்துல, துறை மாற்றத்தையும் தைரியமா செய்யறாங்க. நல்ல பணம் கிடைக்குதுனா கொஞ்சம் கஷ்டபட மக்கள் தயாரா இருக்காங்க.

ஃபேஸ்புக்'குல அக்கவுண்ட் இருக்கா? ஒரு போஸ்ட்டுக்கு லட்ச ரூபாய் ஊதியம்!

 

எந்த துறைக்குள்ள நுழையணும்னு நீங்க விரும்பறீங்களோ, அதுக்கு ஏத்தமாதிரி சில திறமைகள் தேவை. ஆனா எந்த படிப்பு படிச்சவங்களும், வேலை தெரிஞ்சுருந்தா எந்த வேலை செய்யறதுக்கும் வாய்ப்புகள் இருக்கு. டாக்டர் மட்டும் விட்டுருங்க. அதுக்கு வாய்ப்புகள் இல்ல. சரி இப்போ வேலை எங்க செஞ்சா நல்ல சம்பாதிக்க முடியும்? பாக்கலாமா?

டேட்டா சைன்டிஸ்ட் :

டேட்டா சைன்டிஸ்ட் :

டேட்டா சைன்டிஸ்ட் (தரவு விஞ்ஞானி) என்பது அதிக சம்பளம் தரும் வேலை மட்டுமல்ல, வெவ்வேறு கிளைகளை கொண்ட வேலையும் கூட. ஒரு ஆண்டிற்கு 30 லச்சத்தில் ஆரம்பித்து, 70 லச்சங்கள் வரை இதன் வரம்பு உள்ளது. தரவு பொறியியல் , தரவு ஆராய்ச்சி, தரவு காட்சிப்படுத்தல் என பல கிளைகள் இதில் உள்ளன. எப்படியும் துறைக்கு சமந்தமா ஒரு கிளைய நீங்க இதுல தேர்ந்து எடுக்க முடியும். இன்ஜினியரிங் படிச்சிருக்கேன், கிராஃபிக்ஸ் வடிவமைப்பாளர் நான், தொழில் செய்யறேன், இப்பிடி எதுவா இருந்தாலும், எந்த கிளைய தேர்ந்து எடுக்கணும்னு தெரிஞ்சுட்டா நீங்க இதுல நுழையலாம்.

எப்ப வேணாலும் கத்துக்கலாம்

எப்ப வேணாலும் கத்துக்கலாம்

தற்போதைக்கு இந்த துறை கொஞ்சம் கொஞ்சம் வளர்ச்சி அடைஞ்சுட்டு வரதால, இப்போவே நீங்க வேலைல இருந்தா எதிர்காலம் கண்டிப்பா அருமையா இருக்கும். நான் பேசுன ஒரு டேட்டா விஞ்ஞானி சொன்ன விஷயம், உங்களால உங்க நிறுவனத்துக்கு என்ன செய்ய முடியும்னு தெரிஞ்சா, (முக்கியமா அவுங்களுக்கு என்ன வேணும்னு தெரியாத நேரத்துல) அது உங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பா அமையும்னு சொன்னாரு. உங்களுக்கு அதுக்கான பின்னணி இருந்தா மட்டும் போதும். அப்படியே இல்லைனாலும், பகுதி நேரமா நீங்க உங்கள படிச்சு தயார் செய்துக்கலாம். வேலைய விட்டுட்டு, கல்லூரி போய்தான் நீங்க கத்துக்கணும்னு அவசியம் இங்க இல்ல.

சோசியல் மீடியா மேலாளர் (சமூக ஊடக மேலாளர்):
 

சோசியல் மீடியா மேலாளர் (சமூக ஊடக மேலாளர்):

ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட், பேஸ்புக், பின்டிரஸ்ட் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தெரியுமா? உங்களை ஒரு பிராண்டாக வளர்க்க, மற்றும் உங்களுக்கு சரியான அளவு ரசிகர் வட்டத்தை உருவாக்கும் வித்தை தெரியுமா? படிச்ச உடனே என்ன இருக்கு உள்ளன்னு யோசிக்க வெக்கற அளவுக்கு கடுகு சைஸ்ல ஆனா காரம் குறையாம உங்களால எழுத முடியுமா? அப்போ இந்த வேலை செய்ய நீங்க சம்பளம் வாங்க தயார் ஆகலாம்.

லட்சங்களில் ஊதியம்

லட்சங்களில் ஊதியம்

எல்லா சமூக ஊடக மேலாளரும் அதிகமான சம்பளம் எடுத்த உடனே வாங்கறது இல்ல. ஆனா பெரிய சந்தைகள்ல சம்பளம் எப்பிடியும் சில லச்சங்கள தாண்டும். இந்தத் துறைல வேலை தெரிஞ்ச ஆட்களுக்கு தேவை அதிகமா இருக்கு. பல பெரிய நிறுவனங்கள், சமூக வலைத்தளங்கள் இல்லாம அவுங்க இல்லைன்னு இப்போதா புரிஞ்சுட்டு இருக்காங்க.

என்னென்ன தகுதியகள் ?

என்னென்ன தகுதியகள் ?

  • இந்த துறைல காலடி எடுத்து வைக்க முதல் படி, உங்க கணக்குகள் அந்த சமூக வலைத்தளங்கள்ல கெத்தா இருக்கற மாதிரி பாத்துக்கறது. (லைக்ஸ், ஷேர்ஸ், பாலோயர்ஸ் அதிகமா இருக்கணும். வேற என்ன!!)
  • அடுத்து, இப்போ இருக்கற நிறுவனங்கள் என்ன செய்யறாங்க? அவுங்க என்ன செய்யணும்னு தெரிஞ்சுருக்கணும்.
  • கொஞ்ச காலத்துக்கு நீங்களாவே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கண்ணக்குகளை இந்த சமூக தளங்கள்ல நிர்வாகிக்க முயற்சி பண்ணுங்க. அங்க நீங்க கத்துக்கற விஷயங்கள வெச்சு, அடுத்த வேலைகளுக்கு நீங்க முயற்சிக்க முடியும்.
நிதிதிரட்டல்

நிதிதிரட்டல்

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் இயங்க கண்டிப்பா பணம் அவசியம். அப்படி இருக்க, அவுங்களுக்கு அந்த அளவுக்கு பணம் சேகரிச்சு குடுக்க முடிஞ்சா, அவுங்களுக்கு நல்ல பலன் கிடைக்க வாய்ப்புகள் இருக்கு. வெளிநாடுகள்ல இதுக்கு தனியே ஒரு சங்கமே இருக்கு. சாதாரணமா அதுல வேலை பாக்கற ஒருத்தர் ஒரு மாசத்துக்கு 65000 அமெரிக்கா டாலர்கள் ஆரம்ப கட்டத்துல சம்பாதிக்க இயலும். ஆனா நம்ம நாட்டுல இந்த துறை எவண்ட் ஆர்கனைசர்னு வளந்து நிக்குது.

நீங்களும் முயற்சிக்கலாம்

நீங்களும் முயற்சிக்கலாம்

இந்த துறையை பொறுத்த வரைக்கும், நிதியுதவி செய்ய மத்தவங்கள சம்மதிக்க வைக்கணும். அதனால கண்டிப்பா உங்களுக்கு விற்பனைல கொஞ்சம் அனுபவம் இருந்தா நல்லது. கொஞ்சம் அனுபவம் இருந்தா, யார் நிதியுதவி செய்யறாங்களோ அவுங்ககிட்டையும் நீங்க வேலை பாக்க முடியும். மத்தவங்க கிட்ட சுலபமா பழகற குணம் இருந்தா, சிபாரிசு செய்ய முடியும்னா, அந்த அளவுக்கு உங்களுக்கு நட்பு வட்டம் இருக்குன்னா, கண்டிப்பா இந்த துறைல நீங்க முயற்சி செய்யலாம்.

மென்பொருள் பொறியாளர் :

மென்பொருள் பொறியாளர் :

இந்த தலைப்ப பாத்த உடனே உங்க மனசுல ஓடற விஷயம், இது எங்களுக்கு தெரியாதாகிறது தான். ஏன்னா தமிழ்நாட்டுல அவளோ சாப்ட்வேர் என்ஜினியர் இருக்காங்க. ஆனா நாங்க சொல்ல வர விஷயம், இன்ஜினியரிங் படிச்சவங்கதான் சாப்ட்வேர் துறைல சாதிக்க முடியும்கறது இல்லைன்றத. இன்ஜினியரிங் படிச்சு ஐடீ-ல போனா லச்சத்துல சம்பாதிக்கலாம்னு யாராவது சொன்ன நம்பாதீங்க. ஏன்னா அங்க தேவைப்படற திறமைகள் வேற.

இதெல்லாம் உங்க கிட்ட இருக்கா ?

இதெல்லாம் உங்க கிட்ட இருக்கா ?

என்ஜினியரா இருந்தாலும், வெளில வந்து கோடிங், கோடிங் லாங்குகவேஜ் தெரியணும், நல்லா பேச கூடிய திறமை இருக்கணும். இருந்தா வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கு. ஆனா எந்த பின்னணில இருந்தும் முயற்சி செஞ்சா நீங்க இந்த துறைல நுழைய முடியும். சில நேரத்துல நீங்க நிறுவனத்துல சேந்ததுக்கு அப்பறம் கூட அவுங்களே உங்களுக்கு சொல்லிகுடுத்து வேலை வாங்கிப்பாங்க. அதனால நீங்க செய்யவேண்டியது, அந்த துறைல நுழையுனுமான்னு யோசிச்சு, அடுத்து அதுக்கு தேவையான திறமைகள வளத்துக்கறது.

சந்தை ஆய்வாளர் :

சந்தை ஆய்வாளர் :

போட்டிமிகுந்த இந்த உலகத்துல வாடிக்கையாளருக்கு என்ன தேவைங்கறத தெரிஞ்சுக்க அதிகமான அவசியம் இருக்கு. உங்களுக்கு அதிக அளவுல தகவல்கள படிக்க தெரிஞ்சு, அது பத்தின அறிக்கைகள் எழுத தெரிஞ்சிருந்தா இந்த வேலைல வாய்ப்புகள் இருக்கு. வெளிநாடுகள்ல இந்த துறைல சாதாரணமா 85000 $ வரைக்கும் சம்பாதிக்க வாய்ப்புகள் இருக்கு. அப்போ வெளிநாட்டு நிறுவனம் இங்க வந்து சந்தை பத்தி தெரிஞ்சுக்க விரும்புன நீங்க அந்த அளவு சம்பாதிக்க முடியும். பாத்துக்குங்க.

நிதி ஆலோசகர் :

நிதி ஆலோசகர் :

வாழ்க்கைல அனுபவம் அதிகம் இருக்குனா கண்டிப்பா நீங்க முயற்சி செய்ய வேண்டிய துறை. அதைவிட முக்கியம், நீங்க கவனிக்க வேண்டிய ஆய்வு ஒண்ணு இருக்கு. நிதி ஆலோசகர் சங்கம் நடத்துனது. அதுல 88% துக்கு மேல நிதி ஆலோசகர்கள், துவக்கத்துல வேற துறைல இருந்துட்டு அப்பறம் இந்த துறைக்குள்ள வந்தாங்கன்னு தெரியவந்துருக்கு. எம்பிஏ படிச்சவங்க, பொருளாதாரம் படிச்சவங்கதான் இந்த துறையில வரணும்னு அவசியம் இல்ல.எந்த படிப்பு இருந்தாலும் வரலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Highest Paying Jobs or Careers in the World
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more