ரெஸ்யூமை பார்த்த உடனே வேலை கிடைக்கனுமா..? இந்த 9 விஷயம் தெரிஞ்ச போதும்!

Posted By: Kani

ரெஸ்யூம் என்பது அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படத்தில் அண்டா ஹா ஹசம். அபு ஹா குகூம் திறந்திடு சீசேம் என்று திருடர்கள் குகையை திறக்கும் மந்திரச்சொல்லுக்கு நிகரானது.

இதை எவ்வாறு எழுதுவது என்பது பெரும்பாலானோருக்கு தெரிந்தாலும் கூட ஒரு பெர்பெக்ட்டான ரெஸ்யூம் எப்படி ரெடி பண்ணுவது என்பது தற்போது வரை பலபேருக்கு குழப்பான ஒன்றாகத்தான் இருந்து வருகிறது.

உங்க கனவு வேலைய கைப்பற்ற ரெஸ்யூமில் சிம்பிளான இந்த பத்து விஷயம் இருந்த மட்டும் போதும்.

9. டிசைன் மேட்டர்ஸ்

டிசைன் மாஸா இருக்கனும் ஆனா அதுவே நமக்கு வேட்டு வச்சிறாம பாத்துக்க வேண்டியது அவசியம். தேவையான இடைவெளிகளுடன், மார்ஜின் குறைஞ்ச பட்சம் 7 இன்ச் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதே போல பாண்ட் சைஸ் 11- க்கு குறையாமல் இருக்க வேண்டும் இல்லாவிடில் நம்ம ரெஸ்யூம பூத கண்ணாடி வச்சி பார்க்கும்படி ஆயிரும்.

8.ஆக்டிவ் காண்டக்ட்

உங்களுடைய தொடர்புகள் (காண்டக்ட் இன்பர்மேஷன்) அது மெயிலாகட்டும், போனாகட்டும் எதுவாக இருந்தாலும் எளிதான முறையில் நிறுவனம் உங்களை தொடர்பு கொள்ளும் வகையில் இருப்பது அவசியம்.

நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதால் சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும். அப்பிடினு மட்டும் சொல்லாம இருந்தலே போதும்.

 

7. ஹைலைட் யுவர் ஸ்கில்ஸ்

வேலை கொடுப்பவர்களையே கன்பியூஸ் பண்ணற அளவுக்கு காய்கறி ரேட் மாறி நமது திறமைகளை அடுக்காம, பொறுப்பா, அந்த வேலைக்கு என்ன தேவையோ அதை மட்டும் ஹைலைட் பண்ணா மட்டும் போதும் இல்லானா நம்ம பெயரை தேடுவதே கடல்லே இல்லையாம் கதையா ஆயிரும் பாத்துக்கோங்க.

6.எக்பீரியன்ஸ்

இந்தப்பகுதியில் உங்களுடைய எக்பீரியன்ஸ் டைட்டிலை ஒரு பகுதியில் கொடுப்பதோடு, எதிர்புறம் புல்லட் சிம்பிள் கொடுத்து பணியின் சிறப்பம்சங்களை பட்டியலிடலாம்.

5. இயர்ஸ் ஆப் எக்பீரியன்ஸ்

ஒரு வேலை எங்கு பார்தோம் என்பதை விட எவ்வளவு காலம் பார்தோம் என்பது மிகமிக முக்கியம்.

இது உங்களின் ஆளுமையை அளவிட அடித்தளம் அமைக்கும். எனவே உங்களின் பணி அனுபத்தின் இறுதியில் அதன் கால அளவை குறிப்பிட மறந்துவிடாதீர்கள்.

 

4. அனுபவம்

உங்களது பணிஅனுபவம் வேறுபட்டதாக இருந்தாலும், அதை விண்ணப்பிக்கும் பணியோடு மறைமுகமாக தொடர்புடையது என்றும் எண்ணும் பட்சத்தில் அதையும் சேர்க்க மறக்க வேண்டாம்.

3. கல்வித்தகுதி

பெரும்பாலும் இப்போ எல்லா வேலைக்கும் டிகிரி என்றாகிவிட்டது. இருந்தாலும் நம்ம ரெஸ்யூமில் கடைசியாக முடித்த டிகிரியை குறிப்பிடலாம். அல்லது விண்ணப்பிக்கும் பணியோடு தொடர்புடைய தகுதியை குறிப்பிடவும், பத்தாம் வகுப்பில் இருந்து குறிப்பிட்டால் அதுக்கே பாதி இடம் போய்விடும்.

2. கோடிட்டு காட்டுதல்

சில பகுதிகளில் சுவரஸ்யத்தை கூட்ட உங்களுடைய பொழுதுபோக்கு மற்றும் சேவைகள் எதேனும் குறிப்பிட்டு இருப்பின் அதை வண்ணம் திட்டி காட்டலாம்.

1. ரெஸ்யூம் அளவு

நமக்கு எவ்வளவுதான் எக்ஸ்பீரியன்ஸ் இருந்தாலும் நம்ம ரெஸ்யூம் சில மணித்துளிகள்தான் படிக்கப்படும் என்பதை மறக்க வேண்டாம். பெரும்பாலும் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் பாத்துகொள்வது நலம்.

English summary
Here’s What the Perfect Resume Looks Like

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia