டீச்சருக்கு நீங்க செல்ல பிள்ளை ஆகனுமா? அப்ப ஆசிரியர் தினத்துக்கு இப்படி வாழ்த்து சொல்லி பாருங்க!

இந்தியாவில் ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதை நினைவுகூரும் விதமாகவும், ஆசிரியர்களைப் போற்றும் விதமாகவும் நாடு முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

 
டீச்சருக்கு நீங்க செல்ல பிள்ளை ஆகனுமா? அப்ப ஆசிரியர் தினத்துக்கு இப்படி வாழ்த்து சொல்லி பாருங்க!

ஆசிரியர் தினமான இன்று நம் ஆசிரியர்களை எப்படியெல்லாம் வாழ்த்தலாம்? அவர்களிடம் நாம் எதிர்பார்ப்பது என்ன? வகுப்பில் ஆசிரியர்களிடம் நற்பெயரை பெறுவது எப்படி உள்ளிட்ட காரணிகளை இங்கே காணலாம் வாங்க.

ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம்

ஒரு நாட்டின் எதிர்காலம் அந்த நாட்டில் உள்ள மாணவர்கள் கையில் தான் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. அவ்வாறான மாணவர்களை உருவாக்கும் முழு பொறுப்பும் ஆசிரியன் கையில் உள்ளது. ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலத்தை வெற்றிகரமாக உருவாக்குவதில் ஆசிரியர்கள் பங்கு மிகவும் முக்கியமானது.

எதற்காக ஆசிரியர் தினம்?

எதற்காக ஆசிரியர் தினம்?

சமூகத்தில் ஆசிரியர்களின் முக்கிய பங்கை நினைவுபடுத்தும் விதமாக உலகம் முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் இதற்கான தேதிகள் மாறுபடலாம். உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
 

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1962 இல் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அதோடு அவர் ஒரு தீவிர கல்வியாளராகவும், புகழ்பெற்ற சிறந்த ஆசிரியராகவும் செயல்பட்டார். எப்போதும் ஆசிரியர்கள் சிறந்த மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும் என்று எஸ். ராதாகிருஷ்ணன் நம்பினார்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

ஆசிரியர் தினத்தன்று, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி ஆசிரியர்களை மகிழ்விப்பர். ஆசிரியர்களுக்கு நடன போட்டி, பாட்டு போட்டி, விளையாட்டு போட்டி என்று பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறும்.

கொரோனாவில் முடங்கிய கொண்டாட்டம்

கொரோனாவில் முடங்கிய கொண்டாட்டம்

இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நம் நாடு மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் நீண்ட மாதங்களுக்கு பிறகு தற்போது தான் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தினம் கொண்டாடுவதற்கான சூழ்நிலை இல்லாமல் போய்விட்டது.

ஆசிரியர்களுக்கு இப்படி வாழ்த்து சொல்லி பாருங்க!

ஆசிரியர்களுக்கு இப்படி வாழ்த்து சொல்லி பாருங்க!

கொரோனா தொற்றால் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில் இந்த ஆசிரியர் தினத்தன்று உங்கள் ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில மேற்கோள்கள், செய்திகள் மற்றும் மெசேஜ்களை பார்க்கலாம் வாங்க!

நேசிக்க கற்றுக் கொடுத்த ஆசிரியர்

நேசிக்க கற்றுக் கொடுத்த ஆசிரியர்

 • நீங்கள் இந்த உலகத்திற்கே ஆசிரியராக இருக்கலாம். ஆனால் உங்கள் மாணவராகிய எனக்கு நீங்கள் ஹீரோ.
 • கற்பிப்பதை மட்டுமே விரும்பும் நீங்கள் (ஆசிரியர்கள்), மாணவர்களுக்கும் கற்றலை நேசிக்க கற்றுக்கொடுக்கிறார்கள்.
 • சிறந்த ஆசிரியராக இருக்க செய்முறை எதுவும் தேவையில்லை. இதுதான் இந்த சேவையை மிகவும் தனித்துவமாக்குகிறது.
 • ஆசிரியரின் நோக்கம்

  ஆசிரியரின் நோக்கம்

  • ஒரு ஆசிரியரின் நோக்கம் தங்களைப் போலவே மாணவர்களையும் உருவாக்குவது அல்ல, மாறாக தங்கள் சொந்த உருவத்தை உருவாக்கக்கூடிய மாணவர்களை வளர்ப்பது. உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
  • ஆசிரியர்கள் இல்லாதிருந்தால், இங்கு எந்த தொழில்களுமே இருந்திருக்காது. ஆசிரியர்களே இந்த உலகின் ஆணிவேர்.
  • அன்புள்ள ஆசிரியர்களே, நாங்கள் கனவு காண்பதற்கான காரணத்தையும், அதனை அடைவதற்கான நம்பிக்கையையும், உறுதியையும் கொடுத்திருக்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் நன்றி. இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
  • வார்த்தைகளே இல்லை

   வார்த்தைகளே இல்லை

   • ஆசிரியரான உங்களை வாழ்த்த எந்த வார்த்தைகளும் இல்லை. உங்களைப் போன்ற ஒரு ஆசிரியருக்கு நான் மாணவனாக அமைந்ததற்குக் கடவுளுக்கு உண்மையில் நன்றி கூறுகிறேன்.
   • மாணவர்களாகிய எங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் ஆசிரியருக்கு நன்றி. எங்கள் நண்பராகவும், ஆசிரியராகவும் எங்களுடன் பயணித்த உங்களுக்கு நாங்கள் அனைவரும் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
   • நீங்கள் ஒரு ஆசிரியராக எங்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்கள், பெற்றோரைப் போல எங்களைப் பாதுகாத்தீர்கள், வழிகாட்டியைப் போல எங்களை வழிநடத்திச் சென்றீர்கள். எனது மிகவும் பிரியமான ஆசிரியருக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Happy Teachers Day: Happy teachers day tamil kavithai quotes, and Status
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X