ஃப்ரீயா படிக்கலாம் எஸ்இஓ! என்ன நீங்க ரெடியா?

நாம் தேடும் தகவல்களைத் துல்லியமாகவும், உடனடியாகவும், இணையதளத்தில் அவற்றை முன்னிலைப்படுத்தி வழங்கும் பணியைச் செய்யக் கூடியவர்கள்தான் எஸ்இஓ நிபுணர்கள்.

By Kani

ஒரு காலத்தில் இமெயில் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட இணையதளங்கள், தற்போது மளிகை பொருட்களில் இருந்து மருந்து பொருட்கள் வரை விற்பனை செய்யும் சந்தையாகி வருகிறது.

அவ்வப்போது சலுகைகளை வழங்கி வரும் நிறுவனங்கள் வெகு விரைவில் வெள்ளிக்கிழமை சந்தை, சனிக்கிழமை சந்தை என கூவிக், கூவி விற்றாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை.

ஃப்ரீயா படிக்கலாம் எஸ்இஓ! என்ன நீங்க ரெடியா?

இணையத்தில் நாம் தேடும் தகவல்களை கூகுள், பிங், யாஹூ போன்ற தேடு பொறிகள் வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டு பின் நமக்கு காட்டப்படுகிறது.

அப்படித் தேடும் போது நம் நிறுவனத்தின் தகவல்தான் தேடுபவர்களுக்கு முதலில் தர வேண்டுமென பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இது எப்படி சாத்தியம்.

இதை சாத்தியப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் எஸ்இஓ எனப்படும் சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷன்.

நாம் தேடும் தகவல்களைத் துல்லியமாகவும், உடனடியாகவும், இணையதளத்தில் அவற்றை முன்னிலைப்படுத்தி வழங்கும் பணியைச் செய்யக் கூடியவர்கள்தான் எஸ்இஓ நிபுணர்கள்.

இந்த எஸ்இஓ பயிற்சியை பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் பயிற்றுவித்து வருகின்றன.

இருந்தாலும் இலவசமாக கிடைப்பதை விடுவானேன் என்று உங்களுக்காக சிறந்த எஸ்இஓ பயிற்சி வழங்கும் 9 நிறுவனங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மோஸ்:

இதில் எஸ்இஓ-வில் பிள்ளையார் சூழி போடுவதில் இருந்து எண்ட் கார்டு போடுவது வரை 10 பாடங்களாக தொகுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஹவ் டூ சர்ச் ஒர்க்:

கூகுள் எஸ்இஓ-வின் அடிப்படையான சர்ச் இன்ஜின் எவ்வாறு இயங்குகிறது என்ற அடிப்படையில் இருந்து சர்ச் இன்ஜின் கோடிங் மூலமாக தேடுவதற்காக எவ்வாறு வடிமைக்கப்பட்டுள்ளது என்பது வரை, அதன் முழு சாரம்சங்களையும் விளக்குகிறது.

செர்பஸ்டட் அகாடமி:

இங்கு எஸ்இஓ-வின் நுட்பங்கள் சுமார் 11 வகையான பாடத்திட்டமாக பிரித்து பயிற்றுவிக்கப்படுகின்றன.

எஸ்இஓ-வின் முக்கியமான வேலை என்ன? என்பதில் தொடங்கி வினாடி, வினா அமைப்பில் கேள்விகள் கேட்கப்பட்டு இறுதியில் சான்றிதழ் பெறும் படி இந்தப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்இஓ குறித்து தலை முதல் கால் வரை அனைத்தும் கற்க இயலும்.

வேர்ட்ஸ்ட்ரீம்'ஸ் எஸ்சிஓ பேசிக்:

இது முழுவதும் எஸ்இஓ-வின் சுட்டிக்குட்டீஸ்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆரம்பகட்டத்தில் உள்ளவர்கள் எளிதில் புரியும் படியாக ஸ்டெப் பை ஸ்டெப்பாக எடுத்துக்காட்டுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக பார்க்கும் யார் வேண்டுமானலும் புரிந்து கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பு.

கூகுளின் டிஜிட்டல் மார்கெட்டிங் சேலஞ்ச்:

இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் கோர்ஸ் நிச்சயமாக நாம் மேற்கொள்ளும் தொழிலுக்கு பல பயனுள்ள டிப்ஸ், தீர்வுகளை கொடுக்கும் என்றால் மிகையாகாது.

இது கூகிளில் விளம்பரங்கள் எவ்வாறு காட்டப்படுகின்றன. மேலும் கூகுள் அனாலிடிக்ஸ், எஸ்சிஓ / எஸ்இஎம் போன்ற நுட்பங்களை தெளிவாக விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோர்ஸ்எரா:

எஸ்சிஓ-வை உண்மையாகவே கற்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்களுக்கான தளம் இது. இதில் ஆரம்பம் முதல் மூழ்கி முத்து எடுக்கும் வித்தை வரை கற்றுக்கொள்ள முடியும்.

எஸ்சிஓ கைடு:

முழுவதும் நம்பகத்தன்மை வாய்ந்த எஸ்சிஓ தகவல்களை கொண்ட தளம். 9 பாடப்பிரிவாக பிரித்து இது பயிற்றுவிக்கப்படுகிறது. இயற்கையாக பயனர்களை எவ்வாறு வரவழைப்பது என்பதில் இருந்து ஆன் பேஜ் எஸ்இஓ, ஆப் பேஜ் எஸ்இஓ என அனைத்து நுட்பங்களும் இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது.

எஸ்சிஓ அட்வான்ஸ் கைடு:

ஜாலியா படிக்கும் வகையில் படங்களுடன்( இன்போ கிராபிக்ஸ் ) வடிவமைக்கப்பட்டுள்ளது. 9 பாடப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சுவாரஸ்யமாக படிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹஸ்பாட் அகாடமி:

எஸ்சிஓ நிபுணர்களால் விடியோ வடிவில் பாடமாக நடத்தப்படுகிறது. முடியாது என்ற ஒன்று இல்லை என்பதை வழிமொழியும் விதமாக இந்த பாடப்பிரிவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, இறுதியில் சான்றிதழும் வழங்குகின்றனர் என்பது இதன் தனிச்சிறப்பு.

எஸ்இஓ புரஃபெஷனலா நீங்கள்? கோவையில் வேலை ரெடி!எஸ்இஓ புரஃபெஷனலா நீங்கள்? கோவையில் வேலை ரெடி!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Guide to 9 Best Free Online SEO Courses
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X