சிறப்பு வழிகாட்டி ஆசிரியராகனுமா நீங்க,,,

Posted By:

ஆசிரியர்களான நீங்க சிறப்பு வழிகாட்டி ஆசிரியராக மாணவர்கள் மனதில் இடம்பிடிக்க அர்பணிப்பு உடையவராக இருந்தால் போதும். அதுவே உங்களை சிறப்பு வழிகாட்டியாக மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் .

 ஆசிரியர்களான நீங்க சிறப்பு வழிகாட்டியாக  அர்பணிப்பு உடையவராக இருந்தால்போதும்

நீங்கள் பள்ளி, கல்லுரி ஆசிரியராக இருந்தாலும் மாணவர்களின் செய்யும் தவறை அனுமதியுங்கள் ஆனால் பக்குவமாய் மாணவர்கள் உணரும்படி மற்ற மாணவர்கள் முன் அவமதிக்காம்ல உணர்த்துங்கள் அது பெரிய ஒரு சிறப்பான போக்காகும். இது மாணவர்கள் மீண்டும் அத்தவறை என்றும் செய்ய வைக்காது .
மாணவபோக்கு என்பது வயதிற்கேற்ப மாறுபடும் அதனை  ஆசிரியர்கள் என்றும் உணர வேண்டும். அதுவும் டீன் ஏஜ்களான வளர்பருவ மாணவர்களை கையாளும் ஆசிரியர்கள் சற்று கவனமுடன் செயல்படுதல் நலம் பயக்கும். இந்த வயது கோவம் , அறியாமை நிறைந்த மாணவபருவத்தின் உடல் மனமாற்றங்கள் ஏற்படும் பருவம் இதனை உளவியல் ரீதியாக கையாள வேண்டும் . இந்த பருவத்தில் அன்பு , கருணையுடன் நடத்துங்கள் , கடுமையான தண்டனையை விட கட்டுக்கோப்பாக கொண்டுசெல்லுங்கள் .

 ஆசிரியர்களான நீங்க சிறப்பு வழிகாட்டியாக  அர்பணிப்பு உடையவராக இருந்தால்போதும்

வளர்பருவம் , கல்லுரி மாணவர்களிடையே கவன குறைவு, புதிய புதிய ஆசைகள் மற்றும் கூடா நட்பு, கெட்ட பழக்க வழக்கங்கள் , ஊடகங்களின் தாக்கமென மாணவ பருவம் பல்வேறு இடையூறுகளை சந்திக்கும் அத்தகைய இடையூறுகளை பெற்றோர்களின் மறைமுக தலையீடு மூலம் பக்குவமாய் அவர்களை மீட்டெடுக்கும் பொறுப்பை உங்களிடம் இருந்தால் நீங்களே சிறப்பான வழிகாட்டியாவீர் .

மாணவ சிறப்புத்தன்மை கல்வியில் அளவோடும் விளையாட்டு, கலையில் அதிகமாய் இருந்தால் அவர்களை படிக்க மட்டுமே கட்டாயபடுத்து போக்கைவிட்டு அவர்களின் படிப்பு பாதிக்காமல் அவர்களின் மற்ற சிறப்பு திறமையை வெளிகொணர ஆதரவளியுங்கள் அவர்களின் துறை , அவர்களுக்கான வாய்பை அறிமுகப் படுத்துங்கள் தொடர்ந்து மெறுகேற்றுங்கள் நீங்கள் அவர்கள் வாழ்வில் நிச்சயம் தவிர்க்க முடியாதவராக இருப்பிர்கள் .

அர்ஜீனனின் வில்திறமை கண்டுதான் துரோணர் பயிற்சிகொடுத்தார், பீமரின் திறமை கதாயுதத்தில் இருந்தால் அவருக்கு கதாயுதம் கற்பிக்கபட்டது . மாணவரின் திறன் அறிந்து ஊக்குவியுங்கள் ஆசிரியரே நீங்கள் வகிக்கும் பொறுப்பு என்பது அளவிட முடியாத ஒரு துறையாகும் அதனை மனதில் கொள்ளுங்கள் சிறப்பாக செயல்படுங்கள் .


English summary
Above article explained about Teachers guidance and its gave special tips to teachers

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia