மத்திய அரசின் திட்டங்களும் அதன் பயன்களும் நன்றாக தெரிந்திருப்பவர்களால் எளிதாக தேர்வை வெல்ல முடியும். நீங்கள் எந்த அளவிற்கு நன்றாக தேர்வுக்கு அரசின் நலத்திட்டங்களை படிக்கிறிங்களோ அந்த அளவிற்கு அதிக மதிப்பெண்கள் பெறலாம்.

உங்களுக்கான அரசின் திட்டங்கள் குறித்து அறிவிப்பகளை முறையாக தெரிந்து கொள்வோரால் எளிதாக தேர்வை வெல்ல முடியும். மத்திய அரசின் திட்டங்களை ஒவ்வொன்றாக அறிந்து கொண்டு அது குறித்த அப்டேட்கள் கைவசம் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும். அது தொடர்பான கேள்விகள் நிறைய கேட்க வாய்ப்புகள் உண்டு.
நியூ டிஜிட்டல் கல்வியறிவு மிஷன்
2016 முதல் 2019 வரை ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் உள்ள 6 கோடி கிராம குடும்பங்கள் புதிய டிஜிட்டல் திட்டத்தின் பயன்பெறும் வகையில் டிஜிட்டல் மிஷன் திட்டத்தை அறிமுகம் செய்தது மத்திய அரசு.
திஷா:
நாட்டிலுள்ள சில மாவட்டங்களை தேர்ந்தெடுத்து 50 லட்சம் மக்கள்களுக்கு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் அடுத்த மூன்றாண்டுகளுக்கு கம்பியூட்டர் பயிற்சி அளிக்கும் திட்டமே டிஜிட்டல் சக்ஷர்தா அபியான் திட்டம் என அழைக்கப்படுகின்றது.
முதன் முதலாக 2014 ஆம் ஆண்டில் ஜார்கண்ட் மாநிலத்தில் முதன் முதலாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது.
டிஜிட்டல் லிட்ரசி எனப்படும் கல்வியறிவுத் திட்டம் :
கம்பியூட்டர், தனிநபர் கம்பியூட்டர் பயன்பாடு, ஸ்மார்ட் போன்கள் மற்றும் இணைய பயன்பாடு உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை கையால்வதற்கு தேவையான அடிப்படை அறிவே டிஜிட்டல் கல்வியறிவு என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
ராஷ்டிரிய கிராம் ஸ்வராஜ் அபியான் :
ஊரகப் பகுதியின் முழு மேமாட்டை வெகு விரைவில் செய்ய மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டமே ராஷ்டிரிய கிராம் ஸ்வராஜ் திட்டம் ஆகும்.
நிலையான தொடர்ந்து இலக்குகளை அடைந்து முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து பஞ்சாயத்து அமைப்புகள் தங்களின் நிர்வாகத்தை மேம்படுத்தி சுயமாக அமைத்து கொள்வதே திட்டத்தின் நோக்கம் ஆகும்.
14வது நிதி ஆணையத்தின் பரிந்துறையின்படி கிராமபஞ்சாயத்து மற்றும் நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கான மானிய உதவித் தொகை பெற 287 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிதிட்டத்திற்கு ரூபாய் 38,500 கோடி ஒதுக்கீடு செய்தது.
தீனதயாள் உபாத்தியா கிராம ஜோதி திட்டம் :
மத்திய அரசு ஜூலை 25, 2015 அன்று பீகார் தலைநகர் பாட்னாவில் தீனதயாள் உபாத்தியா கிராம ஜோதி யோஜ்னா திட்டத்தை அறிமுகப்படுத்தியது . ஏற்கனவே செயல்ப்படு வந்த ராஜீவ் காந்தி கிராமின் விக்கைகரன் யோஜனா திட்டத்தை தீன்தயால் திட்டம் தன்னுடன் இணைத்தது.
இத்திட்டத்தின் நோக்கமானது மத்திய நிதிநிலை கிராம ஜோதி திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளுக்கு தேவையான மின் வசதியை 24*7 என்ற அடிப்படையில் இடைவிடாமல் வழங்குவதனை உறுதி செய்துள்ளது இதுவே திட்டத்தின் நோக்கம் ஆகும்.
வேளாண் க்ரிஷி விகாஸ் யோஜ்னா எனப்படும் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம்:
கரிம வேளாண்மை எனப்படும் இயற்க்கை வேளாண்மை முறையை ஆதரிக்கவும், மேம்படுத்தவும் மண் வளத்தை ஒழுங்கு செய்து விவசாயம் செய்வதே திட்டத்தின் நோக்கம் ஆகும். இதன் மூலம் வேளாண் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி பாரம்பரிய வேளாண்மையை நன்கு வளப்படுத்தி விவசாயிகளுக்கு அதிக மகசூல் வரச்செய்து அவர்களுக்கு நல்ல பொருளாதார வசதியும் இரசாயண உரங்களை நாடி நிக்கும் போக்கும் குறையும் என்பது திட்டத்தின் நோக்கம் ஆகும்.
மேலும் மழையை மட்டுமே நம்யிருக்கும் நிலப்பகுதிகளில் குளங்களும், கிணறுகள் உருவாக்குதல்
நகர்ப்புற கழிவுகளை சேகரித்து ஸ்வஸ்பாரத் திட்டத்தின் கீழ் தொகுப்பாக மாற்றுவதற்கான முறைகள் மற்றும் உரங்கள் பெற மாதிரி சில்லரை உரக்கடைகள் நிறுவுதல்
கால்நடைகளின் நலன் காத்து பசுதான சஞ்சீவதானி, விலங்கு சுகாதார அட்டை, இ- பசுதான மார்ட்கள் அமைத்து தருதல் இதன் முக்கிய கொள்கையாகும்.
கேள்வி தொகுப்புகள் :
மத்திய அரசின் திட்டங்களை தொகுத்து கொடுத்துள்ளோம் அதன்படி அவற்றில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை அறிந்து கொள்வோம்.
1. தீனதயாள் உபாத்தியா கிராம ஜோதி திட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது ?
2. பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் நோக்கம் என்ன?
3. ராஷ்டிரிய கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் நோக்கம் என்ன?
4. திஷா திட்டத்தின் கீழ் எத்தனை லட்ச மக்கள் பயன்பெறுவார்கள்?
5. ராஜீவ் காந்தி கிராமின் விக்கைகரன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு எந்த திட்டத்துடன் இணைத்தது?
சார்ந்தபதிவுகள் :


Click it and Unblock the Notifications












