தோனியோட சொந்த ஊர் சென்னையா..!? எப்படி...?

அரசு வேலைக்கான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலையின்மை ஒருபுறம், மறுபுறம் வாய்ப்புகள் இருந்தும், இதற்கான தகுதியும், திறமையும் உள்ளவர்களை கண்டறிவது மிகப்பெரிய சவலாக உள்ளது. தெளிவான குறிக்கோளும், இடைவிடாத பயிற்சியும், முயற்சியும் நிச்சயம் அரசுதேர்வுகளில் வெற்றியை பெற்றுத்தரும்.

தோனியோட சொந்த ஊர் சென்னையா..!? எப்படி...?

 

அதோடு, எளிதில் கண்டறியப்படாத சில அசாத்தியமான கேள்வி பதில்களையும் தெரிந்து வைத்திருப்பது கூடுதல் சிறப்பு தானே. அந்த வகையில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு...

1. ஹாரி பாட்டர் கதையை எழுதிய எழுத்தாளர் பெயர் என்ன?

1. ஹாரி பாட்டர் கதையை எழுதிய எழுத்தாளர் பெயர் என்ன?

விடை: ராவ்லின்

விளக்கம்: கணவனை பிரிந்து வறுமையில் வாடிய ஜே.கே.ராவ்லின் என்ற இங்கிலாந்து பெண், தனது கற்பனையை நாவலாக எழுதினார். ஹாரி பாட்டர் என்ற பெயரில் வெளிவந்த இந்த நாவல் பெரும் புகழையும் பணத்தையும் ராவ்லினுக்கு பெற்று தந்தது. இந்த வரிசையில் வந்த நாவல்களும், சினிமா படங்களும் வசூலில் சாதனை படைத்தன. இதனால் உலக கோடீஸ்வரர்களில் ஓருவரானார் ராவ்லின்.

2. ஹிராகுட் அணை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

2. ஹிராகுட் அணை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

விடை: ஒடிஸா

விளக்கம்: ஒடிசாவின் மகாநதிக்கு குறுக்காக 1957 ல் கட்டப்பட்ட இந்த அணையானது உலகின் மிக நீளமான மண்ணால் கட்டப்பட்ட அணைகளில் ஒன்றாகும்.

ஹிராகுட் அணையின் நீளம் 16 மைல் (26 கிமீ) ஆகும். உலகின் மிக நீளமான முழுக்க முழுக்க மனித சக்தியால் கட்டப்பட்ட அணையாக திகழ்கிறது.

3. தமிழ்நாட்டின் இரும்பு நகரம் எது?
 

3. தமிழ்நாட்டின் இரும்பு நகரம் எது?

விடை: சேலம்

விளக்கம்: தமிழகத்தின் நான்காவது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கஞ்சமலை, தீர்த்தலை ஆகிய மலையில் இரும்புத் தாது உள்ளது. இம்மலையில் சுமார் 45 கோடி டன் எடையுள்ள இரும்புத் தாது உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

சேர்வராயன் மலைப் பகுதியில் அலுமினியம் தயாரிப்பதற்கு அவசியமான பாக்சைட் என்ற தாது அதிக அளவில் கிடைக்கின்றது. இதனால் இது இரும்பு நகரம் என அழைக்கப்படுகிறது.

4. புக்கர் விருது வழங்கப்படும் துறை எது?

4. புக்கர் விருது வழங்கப்படும் துறை எது?

விடை: பத்திரிகை

விளக்கம்: உலக அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது "மேன் புக்கர் பரிசு". இந்த விருது கடந்த 1969-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

லிங்கன் இன் தி பார்டோ என்ற புத்தகத்துக்காக 2017-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் சாண்டர்ஸ் வென்றுள்ளார்.

1997ல் - இந்திய எழுத்தாளரான அருந்ததி ராய் 'த காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்' என்ற நாவலுக்காக இந்த புக்கர் விருதைப் பெற்றார்.

5. லிபியா நாட்டின் தலைநகரம் எது?

5. லிபியா நாட்டின் தலைநகரம் எது?

விடை: திரிபோலி

விளக்கம்: வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு. இதன் வட எல்லையாக மத்திய தரைக்கடலும் கிழக்கில் எகிப்து, தென்கிழக்கில் சூடான், தெற்கில் சாட், நைஜர் ஆகியனவும், மேற்கில் அல்ஜீரியா, துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகர் திரிபொலி.

மிகப்பெரும் பரப்பைக் கொண்டுள்ள லிபியா, ஆப்பிரிக்காவின் பெரிய நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தையும், உலக நாடுகளின் வரிசையில் பதினேழவதாகவும் உள்ளது.

6. தமிழ்நாட்டில் பாயும் மிக நீண்ட ஆறு?

6. தமிழ்நாட்டில் பாயும் மிக நீண்ட ஆறு?

விடை: காவேரி

விளக்கம்: காவிரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது.

இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.

7. காந்தி இந்திய தேசிய காங்கிரஸில் எந்த வருடம் தலைவராக இருந்தார்?

7. காந்தி இந்திய தேசிய காங்கிரஸில் எந்த வருடம் தலைவராக இருந்தார்?

விடை: 1924

விளக்கம்: 1924ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.

8. நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை _______ என்று அழைப்பர்?

8. நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை _______ என்று அழைப்பர்?

விடை: கூகோல்

விளக்கம்: 1996ம் வருடம் ஸ்டார்ன்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களான லாரி பேஜ், செர்ஜி பிரின் இருவரும் இணைந்து இணையத் தேடலில் கணிதத்தைப் பயன்படுத்துவது குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.

தங்களுடைய ஆய்வை 1998ல் இணையதளமாக பதிவு செய்ய எண்ணி பொருத்தமான பெயரைத் தேடினர்.

கூகோல் (Googol) என்ற பெயரைத் தேர்வு செய்தனர். கூகோல் என்பது ஒன்று என்ற எண்ணுக்கு பிறகு 100 பூஜியங்களைக் கொண்ட மிகப்பெரிய எண்ணைக் குறிப்பதாகும் (10100).

ஆனால், அந்தப் பெயர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்ததால், அந்த வார்த்தையில் சிறு மாற்றம் செய்து கூகுள் (Googol) உருவானது.

9. இந்துக்களின் கடவுளான சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்?

9. இந்துக்களின் கடவுளான சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்?

விடை: கூத்தனூர்.

விளக்கம்: கூத்தனூர் சரஸ்வதி கோயில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது.

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில், பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே இக்கோயில் உள்ளது. இத்தலத்தில் ஒட்டக்கூத்தர் வழிபட்டு அம்பாள் அருள் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

10. இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த ஊர் எது?

10. இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த ஊர் எது?

விடை: ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சி

விளக்கம்: எம்எஸ் தோனி என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகின்ற மகேந்திரசிங் தோனி 1981ஆம் ஆண்டு ஜூலை 7-இல், பான் சிங்கிற்கும் தேவகி தேவிக்கும் பிறந்தார்.

தோனி பிறந்த ஊர் ஜார்க்கண்ட் ராஞ்சியா இருந்தாலும், அவரு கிரிக்கெட் விளையாட வந்த சென்னையில, மக்கள் தன்னோட மகன் மாதிரி பாத்துக்குறாங்க. தனக்கு இது சொந்த ஊர் மாதிரி இருக்குனு பல தடவ சொல்லி கண்கலங்கிருக்காரு தோனி. நம்ம மக்கள்ல சிலரும் தோனி தமிழ்நாட்டு காரர்னே நம்பிட்டு இருக்காங்கன்னா பாத்துக்கோங்களேன்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
GK Questions - Basic TNPSC General Knowledge Questions and Answers
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X