தோழமை பெற்றோர்களாக இருங்கள்

Posted By:

 நட்பென்ற பெற்றோர் பெற்றுப்பார் நடமாடும் உலகம் உன் நகங்களின் பூச்சாகும் ,,

தோழமை பெற்றோர் தொடுவானம் தொலைவை கடக்க வைக்கும்

 

தோழமை பெற்றோர்கள் இன்றைய அடிப்படை தேவையாகும் அதனை பெறோர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். தோழமைத்தன்மை தான் உங்களது பெற்றோர்த்தன்மைக்கு பலமான வெற்றியை கொடுக்கும். உங்களது பிள்ளைகளின் மனஓட்டம் உங்களின் கட்டுக்குள் கொண்டு வரச்செய்யும். மேலும் எதையும் மறைக்கும் எண்ணம் வராது இதுவே உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்வு சிறப்பிக்க செய்யும்.

இளம்வயது பிள்ளைகளுக்கு என்றும் பெற்றோர்களின் கம்பெனி என்ற துணை இருக்கும்போது, எளிதாக பெற்றோர்களுடன் இணைந்தே இருப்பர். கனவுகளையும் தங்களால் ஏன் சிறப்பாக செயல் பட முடியவில்லை என்பதை விளக்கிசொல்வார்கள். இது அவர்களின் சிக்கல்களை கலைய எளிதாக இருக்கும் பெற்றோர்களே.

பெற்றோர்களின் பொறுப்புணர்வு :


தோல்வியினை கையாள மேல்நிலை, கல்லுரி மாணவர்கள் தயங்குகிறார்கள் அழுத்தம் அவர்களின் செயலை முடக்குகிறதென்றால் அதற்கு காரணம் பெற்றோர்களே, அவர்களை அவமான படுத்துதல், மற்ற மாணவர்களுடன் ஒப்பீடு செய்து மதிப்பீடுதல் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய போட்டி சூழலையும் எதிர்கொள்ள, அவர்களை எக்கடின சூழலிலும் போட்டியிட வைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுடையது ஆகும் .

தோழமை பெற்றோர்கள் இன்றைய பிள்ளைகளின்  அடிப்படை தேவையாகும் அதனை பெறோர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

கண்காணிப்பு :


பெற்றோர்களின் கண்காணிப்பு இருக்கும் போது பிள்ளைகளின் செயல்பாடுகள் அளவு கடந்து செல்ல வாய்ப்பு இருக்காது .உங்களது பிள்ளைகள் மாணவர்களாக இருக்கும்போது அவர்களின் சமுக வலைதள செயல்பாடு , பணப்புழக்கம் மற்றும் அவர்களின் நட்பு வட்டாரங்கள் , சிறப்பு வகுப்புக்கான அவர்களின் செயல்பாடு , குறித்த தகவலகள் தெரிந்து கொள்ளுங்கள் . மேலும் தவறுகளை சுட்டிகாட்டுங்கள் , செய்கின்ற தவறுகளுக்கான பலனை உங்கள் பிள்ளைகள் அடையும்போது கொஞ்சம் விட்டுபிடியுங்கள் அதுவே அடுத்த அவர்களின் செயலை சரிசெய்ய வைக்கும் . பிள்ளைகளுக்கான வசதிவாய்ப்பு செய்து கொடுப்பதோடு அதற்கான மதிப்பையும் அவர்கள் உணரவேண்டும் .

பான் வித் சில்வர்ஸ்பூன் ஆக உங்கள் பிள்ளைகளை வளருங்கள் ஆனால் அதற்கான தங்களின் மெனகெடல் அறியவைத்து அறிவுடன் வளருங்கள் . எந்த ஒரு சூழலிலும் அவர்களாகவே எதிர்கொள்ள , எதிர்நீச்சல் அடிக்க கற்றுகொடுங்கள் அதுதான் நீங்கள் பிள்ளைகளுக்கு ஆற்றும் சிறந்த கடமை ஆகும் .
இந்தியாவில் குழந்தைகள் மாணவர்கள் மற்றும் தனிமனிதர்கள் ஒவ்வொருவர் வாழ்கையிலும் பெற்றோர்களின் பங்கானது அளப்பரியது ஆகும். அதனை உலகமே அறியும் ஆகவே பெற்றோர்களே இதனை உணர்துங்கள் வாழ்வென்ற போக்கில் பெற்றோர்கள் அவசியம் என்பதை அறியா பிள்ளைகள் குறைவே ஆனாலும் அறியவேண்டியது , அறியவைக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும் .

English summary
here article mentioned about parents and friendship parental

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia