மாணவச் செல்வங்களே! "அப்பா"க்கள் தினத்தை இப்படி கொண்டாடலாம் வாங்க!

நாம் அனைவருக்குமே தாய், தந்தை என்றால் ரொம்வும் பிடிக்கும். அதிலும், பெண் பிள்ளைகள் என்றால் சொல்லவே வேண்டியது இல்லை. அம்மாவை விட அப்பா தான் பெண் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவராக இருப்பார்கள்.

 
மாணவச் செல்வங்களே!

ஆண் பிள்ளைகளும் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை. ஒரு வயதிற்கு மேல் தந்தையின் ஒரு அங்கமாகவே மாறிவிடுவர். அவ்வாறான தந்தையைக் கொண்டாடடும் அப்பாக்கள் தினத்தன்று வித்தியாசமாக, அப்பாவை மகிழ்விக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம் வாங்க.

அப்பாவுக்கு ஒரு பார்ட்டி

அப்பாவுக்கு ஒரு பார்ட்டி

வாழ்நாள முழுவதும் தனது குழந்தைகளன் நலனுக்காகவே உழைத்து சோர்வடைந்த அப்பாக்கு நாம் சிறியதாக பார்ட்டி ஒன்று கொடுக்கலாம். அவரது நண்பர்களை எல்லாம் வீட்டிற்கு அழைத்து ஒன்றாக அமர்ந்து உணவர்ந்துவதன் மூலம் அப்பா நிச்சயம் மகிழ்ச்சியடைவார்.

அப்பாவின் அலுவலகம்

அப்பாவின் அலுவலகம்

அப்பாவின் அலுவலகத்திற்கு சென்று அவர் வருவதற்கு முன்பே அவர் உட்காரும் இடத்தை அலங்கரித்து வைக்கலாம். ஆனால், அப்போது தான் கொரோனா ஊரடங்கால் அப்பாக்கள் வீட்டிலேயே இருந்து வேலை செய்கிறார்களே. எனவே, அவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் போது பயன்படுத்துவதற்கான ஒரு பரிசுப் பொருளை வாங்கிக் கொடுக்கலாம்.

சிறிய சிறிய கிப்ட்
 

சிறிய சிறிய கிப்ட்

அப்பாக்கள் எப்போதுமே நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பதை விரும்பமாட்டார்கள். இருப்பினும், நாம் சேமித்துவைத்துள்ள சிறிய தொகையில் அவர்களுக்கு பிடித்த ஒன்றை வாங்கித் தரலாம். அது, அவருக்கு பிடித்த ஸ்நாக்ஸ், டிரஸ், நீண்ட நாள் வாங்க நினைத்து வாங்காமல் இருக்கும் ஏதேனும் ஒரு பொருளாகக் கூட இருக்கலாம். அதுவே அவருக்கு பெரிய இன்பத்தை ஏற்படுத்தும்.

விளையாட அழைத்துச் செல்லுங்கள்

விளையாட அழைத்துச் செல்லுங்கள்

நம் அனைவருக்குமே சிறு வயதில் விளையாடியதை மீண்டும் விளையாட ஆசை இருக்கும். அதேப் போன்றுதான் அப்பாவிற்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து அந்த இடத்திற்கு அழைத்து சென்று அவர்களை விளையாட வைத்து மகிழ்விக்கலாம்.

அப்பாவுடன் நேரம் செலவிடுங்கள்

அப்பாவுடன் நேரம் செலவிடுங்கள்

பெரும்பாலான அப்பாக்களுக்கு தன் குழந்தைகளுடன் நேரம் செலவிட மிகவும் பிடிக்கும். ஆனால் அவர்களது சூழ்நிலை போதிய நேரம் இல்லாமல் இருக்கும். அப்படி இருக்கும் அவர்களுக்கு ஏதாவது ஏற்பாடு செய்து, அந்த தினத்தன்று அருகில் உள்ள பார்க், உணவகம், ஷாப்பிங் போன்றவற்றிக்கு அழைத்து செல்லலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Father's Day surprise Ideas to Make Dad Feel Special
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X