வார்த்தைகள், எண்ணங்களை பிரதிபலிக்க உதவுகின்றது. எனினும் சில வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றன.
சொல்ல விரும்பும் ஒரு ஆங்கில வார்த்தையை நாம் ஒரு அர்த்தத்தில் புரிந்து கொண்டால், அதற்கான உண்மையான அர்த்தம் வேறு ஒன்றாக உள்ளது. நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் ஒரு வார்த்தைக்கும் வேறு ஒரு வார்த்தைக்கும் சிறிய வேறுபாடுகள் மட்டுமே உள்ளன.
அந்த வேறுபாடுகள் தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கின்றன.
எனவே நாங்கள் இங்கே வார்த்தைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை விளக்க முற்பட்டுள்ளோம்.
முன்னுரை: 'Foreword' ஒரு புத்தகத்தின் அறிமுகம். ஒரு நூலை ஆக்கியவர் எழுதும் ஒரு அறிமுகம் முன்னுரை என்றழைக்கப்படுகிறது. முன்னோக்கி: 'Forward' மேலே, முன்பக்கத்தை நோக்கிச் செல்வது, வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு செயல்படுவது. ஜாக்கிரதை: 'Discreet' (தான் இருக்கும் அல்லது செயல்படும் சூழல்பற்றி) விழிப்போடு இருக்கும் நிலை; ஜாக்கிரதை. ‘என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது; நீ கவனமாக இரு!' ‘அவரிடம் பேசும்போது சொந்த விஷயங்களைக் கவனமாகத் தவிர்த்துவிடுகிறேன்' தனித்துவம்: 'Discrete' (பிறரிடமிருந்து அல்லது பிறவற்றிடமிருந்து) வேறுபடுத்திக் காட்டும் தன்மை; தனித்தன்மை. ‘சிக்கலான அறிவியல் கருத்தையும் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்குவது அவருடைய தனித்துவம்' இரட்டை: 'Dual' ஒரே மாதிரியான அல்லது ஒரே வகையான பொருள்களில் இரண்டு, ஒன்றாகப் பொருந்தியிருப்பது. ஒரே மாதிரியான இரண்டு இணையாக இருப்பது; ஜோடி. ‘இரட்டைப் பின்னல்' ‘இரட்டைப் பழம்' ‘இரட்டை நாயனம்'‘இரட்டை மாட்டு வண்டி' உறுதி: 'Ensure' (கொண்ட கொள்கை, எண்ணம் முதலியவற்றிலிருந்து) மாறாத திடம்; நெகிழாத பிடிப்பு. ‘அவர் தாம் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பார், மாற மாட்டார்'.‘வாழ்க்கையில் முன்னேறியே தீர்வது என்ற உறுதி சற்றும் தளரவில்லை' காப்பீடு: 'Insure' இறப்பு, விபத்து முதலியவற்றால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் விதத்தில் தொகை கொடுப்பதற்காக நிறுவனங்கள் தனி நபர்களுடனோ அமைப்புகளுடனோ செய்துகொள்ளும் ஒப்பந்தம். என்வலப்: 'Envelop' சுற்றியுள்ள பகுதியை மறை. உறை: 'Envelope '(கடிதம் முதலியவற்றை வைப்பதற்குப் பயன்படுத்தும்) ஒரு பக்கம் திறக்கக்கூடிய (தாளால் ஆன) கூடு; (பொருளை மூடுவதற்குப் பயன்படுத்தும்) துணி அல்லது துணி போன்ற பொருளால் ஆன மூடி. ‘பூர்த்திசெய்த விண்ணப்பத்தை உறையில் போட்டுப் பதிவு அஞ்சலில் அனுப்பு' உத்தரவாதம்: 'Guarantee' (பொருளின் தரத்துக்கு அல்லது ஒருவரின் நன்னடத்தைக்கு) ஒருவரால் அளிக்கப்படும் உறுதி; பொறுப்பு. ‘வாங்கிய கடனை அவர் நாணயமாகத் திருப்பித் தருவார் என்பதற்கு நான் உத்தரவாதம்' வாரன்டி: 'Warranty' என்பது வாங்கும் பொருள் குறிப்பிட்ட காலத்துக்குள் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் பொருளை சரி செய்து தருவது, மாற்றித் தருவது, பணத்தைத் திரும்பக் கொடுப்பது. வாரன்டி என்பது வாங்கும் பொருளின் தரம் குறித்தது. அதாவது, எங்கள் தயாரிப்புகள் குறிப்பிட்ட தரத்தில் நிச்சயம் இருக்கும். இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என்கிற வாக்குறுதியைத் தருவதாகும். மீட்டர்: 'Meter' அளவிட பயன்படக்கூடிய சாதனம் மீட்டர்: 'Metre' குறிப்பிட்ட அலகை அடிப்படையாகக் கொண்டு ஒன்று குறிப்பிட்ட முறையில் அமைந்திருப்பது. கம்பம்: 'Pole' (குழியில் ஊன்றப்படும்) மரம், உலோகம் முதலியவற்றால் ஆன தூண். ‘கொடிக் கம்பம்' ‘விளக்குக் கம்பம்' ‘மின் கம்பம்'. வாக்கெடுப்பு: 'Poll' ஒரு அமைப்பைச் சேர்ந்த கூட்டத்தினரிடையே அல்லது பொதுமக்களிடையே குறிப்பிட்ட கருத்துக்கு எந்த அளவுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு உள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கை. ‘தலைவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த வாக்கெடுப்பில் பலர் நடுநிலை வகித்தனர்' பயிற்சி: 'Practice' ஒரு கோட்பாடு அல்லது யோசனையை வியாபாரத்தில் செயல்படுத்தும் முறை. பயிற்சி: 'Practise' (வேலை, விளையாட்டு முதலியவற்றில்) திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்திக்கொள்ளும் முறை. ‘போதுமான பயிற்சி இல்லாததால்தான் நம் வீரர்கள் போட்டியில் தோற்றார்கள்' முதன்மை: 'Principal' ( பள்ளியின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை) வழிநடத்திச் செல்பவர்; தலைமைப் பொறுப்பில் இருப்பவர். நியதி: 'Principle' ஒன்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதற்கான அல்லது ஒன்று இப்படித்தான் நிகழும் என்பதற்கான விதிமுறை, நியதி, கட்டுப்பாடு, ஒழுங்கு போன்றவை; வரையறை. ‘யாரிடம் என்ன பேசுவது என்ற வரைமுறையே உனக்குக் கிடையாதா?' ‘எதற்கும் ஒரு வரைமுறை வேண்டும்'. பாலினம்: 'Gender' ஆண் அல்லது பெண் என்ற பிரிவு; பால். ‘கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைக் கருவிகள்மூலம் கண்டறிவது குற்றம்' புணர்ச்சி: 'Sex'(மனிதர்களில்) பாலுணர்வின் உந்துதலினால் (பெரும்பாலும்) ஆணும் பெண்ணும் இனப்பெருக்க உறுப்புகளால் கொள்ளும் தொடர்பு; புணர்ச்சி. ‘பாதுகாப்பான உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம் பாலுறவு நோய்கள் வராமல் தடுக்கலாம்'
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
டூயல்: 'Duel' இரண்டு நபர்களுக்கிடையில் ஒரு சண்டை அல்லது போட்டியை குறிப்பது.
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
‘நிலநடுக்கங்களை ரிக்டர் அளவுகோலில் அலகுகளாகக் கணக்கிடுகிறார்கள்'
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
‘இந்த ராகத்தைப் பாட நல்ல பயிற்சி தேவை'
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?