மாணவ வாழ்கையே தேர்வுகளாலானது , வகுப்புகள் மாறாலாம் தேர்வுகள் மாறாது

Posted By:

தேர்வு :

   தேர்வு என்றாலே பலருக்கு பயம் தொத்தும் , தேர்வு காய்ச்சல் என்பது எக்ஸாம் சீசனில் ஏற்படும் ஒரு தொத்து என்றும் கூறலாம் . ஆனால் இனிமேல் தேர்வு என்றால் அந்த பயம் தேவையில்லை தேர்வு நேரத்தை எவ்வாறு எளிதாக அனுகுவது என்பதை அறியலாம்.

  முதலில் தேர்வு என்பது ஒரு பரிசோதனை களம் என்ற எண்ணம் மனதில் இருக்க வேண்டும். பரிசோதனையானது பொதுவாகவே ஒரு  பொருளோ அல்லது நோய் சம்மந்தப்பட்ட இடத்தில் இருக்கிறதா , இல்லையா அல்லது செய்யப்பட்ட செயல் சரியாக இருக்கின்றதா என்ற கேள்வி , டவுட் ஏற்ப்பட்டால் மட்டுமே நாம் பரிசோதனை செய்வோம் . இது மனித தேவை மற்றும் வயதுகேற்ப மாறுபடும் ஆனால் அனைவரும் சந்திக்க வேண்டிய ஒன்று. அந்த நிலையே மாணவ வயதுக்கான தேர்வு ஆகும்.

படித்தவற்றை பரிசோதனை செய்ய பயன்படும் களமே தேர்வு களமாகும் . ஆக படித்த ஒன்றை சரியாக படித்தோமா என்று அறியும் களமே தேர்வு களமென்ற தெளிவு வேண்டும் .

தேர்வை எதிர்கொள்ள படித்திருக்க வேண்டும் அது ஒன்றே தேர்வை எதிர்கொள்ளும் மாணவ தகுதியாகும் . மேலும் சரியாக படித்த பாடங்களை , திருப்பி பலமுறை படித்தப்பின் அதனை வகுப்புத்தேர்வில் எழுதியவர்களுக்கு அடுத்துவரும் காலாண்டு , அறையாண்டு , ஆண்டுத்தேர்வுகள் மற்றும் கல்லுரியில் எழுதும்செமஸ்டர்கள் எல்லாம் பெரிய பொருட்டல்ல . ஆனால் தேர்வு அறிவிக்கப்பட்ட நாள் முதல் மாணவர்களுக்குள் எக்ஸாம் என்ற ஒரு படப்படப்பு அதிகரிக்கும் , மதிபெண்கள் அதிகம்பெற உந்துதல் இருப்பது அனைவருக்கும் வாடிக்கை ஆனால் இது சில மாணவர்களுக்கு மாறுபடும் தேர்வு காலம் வரை சரியாக பயிலாத மாணவர்களுக்கு பயமே மிஞ்சும் அதனை எவ்வாறு எதிர்கொள்வதென அறிவோம்

தேர்வுகால படிப்புகள் :

தேர்வு காலப் படிப்புகள் என்பது மாணவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும் . தேர்வுத்தேதிகள் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்வுக்கான நாள் வரை இருக்கும் நாட்கள் கணக்கிட்டு , தேர்வு நாட்கள் நெருங்கும் முன் அனைத்தும் பாடங்களையும் தரவு செய்து முடித்திருக்க வேண்டும் . தேர்வு காலங்களில் நமது உடல் மூளை மிகுந்த வேகத்தில் செயல்பட துடிக்கும் , அழுத்தம் அதிகரிக்கும் இது தேவையற்றது . மாணவர்களே உங்களால் முடியும் உங்களுக்கான நாள் இது என்ற எண்ணம் போதுமானது .

தேர்வுத்தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் சில சூழலால் சரியாக பயிலாத மாணவர்கள் தேர்வுத்தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்வுநாள் வரை இருக்கும் காலம் கணித்து படிக்க தொடங்கினால் தேர்வை எழுதில் வெற்றி பெறலாம் .

தோல்வி :

தோல்வி என்றால் அச்சம் , அவமானமாக கருதும் போக்கு மாணவர்களிடையே நிலவுவது இயல்பே ,அது சரியானது அல்ல அத்தகைய போக்கை மாணவர்கள் பின்ப்பற்ற கூடாது . தேர்வில் தோல்வி என்பது ஒரு குற்றமல்ல , தோல்வி என்பது ஒரு செயலை சரியாக செய்ய மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு அதனை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் .தோல்வி வாழ்வின் அனுபவங்களை கற்றுத்தருகிறது . எதிர்காலத்தில் நம்மை நிலைத்துநிற்க செய்கின்றது .வெற்றி தோல்விகள் மாணவ பருவத்திலிருந்தே நம்மை பக்குவப்படுத்துகின்றது .ஆகையால் தோல்வி குறித்து பயம் தேவையில்லை .

தோல்வி எதனால் ஏற்ப்பட்டது என்பதை அறிந்து மீண்டும் அத்தோல்வியை நெருங்கவிடாது விழிப்போடு இருங்கள் மாணவர்களே !,,, இதுதான் சிறந்த மாணவத்தன்மையின் பாடமாகும் .

English summary
here article gave easy way to win exams for students .

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia