இப்படி கூட சம்பாதிக்கலாம்... 21 வயதில் ரூ.51 ஆயிரம் சம்பாதிக்கும் பெண்!

கால ஓட்டத்திற்கு ஏற்ப தற்போதைய இளைஞர்கள் இன்ஜினீரிங், மருத்துவத்தும் போன்ற படிப்புகளை தாண்டி தனக்கு தேவையான வேலை வாய்ப்புகளை பற்றி கொஞ்சம் கூடுதலகவே சிந்திக்க தொடங்கியுள்ளனர்.

By Kani

கால ஓட்டத்திற்கு ஏற்ப தற்போதைய இளைஞர்கள் இன்ஜினீரிங், மருத்துவத்தும் போன்ற படிப்புகளை தாண்டி தங்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகளை பற்றி கொஞ்சம் கூடுதலகவே சிந்திக்க தொடங்கியுள்ளனர்.

இப்படியும் சம்பாதிக்கலாம்...மாதம் ரூ.51 ஆயிரம் வீட்டில் இருந்தே சம்பாதிக்கும் பெண்!

லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பலவிதமான தொழில்களில் ஒன்றுதான் எழுதுவதும், எழுதுவது என்றால் பத்திரிகைகளில் எழுதுவது மட்டுமல்ல, சொந்தமாக பிளாக் தொடங்கி சொந்தக் கதை, சோக கதையில் தொடங்கி பேஷன், டெக் என எதுவேண்டுமானலும் எழுதி சம்பாதிக்கலாம்.

எதுவாக இருந்தாலும் இணையமே!

எதுவாக இருந்தாலும் இணையமே!


பிளாக்குகள் கூட தொழில் நிறுவனங்களுக்கு இணையாக வருமானம் தரக் கூடியவைதான். எந்த ஒரு வர்த்தகமானாலும் அது இணையதளத்தில் இருக்க வேண்டியது அவசியமாகி விட்டது. நிறைய நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர் கவர்வதற்குரிய சாதனமாக பிளாக்குகளை பயன்படுத்த தொடங்கியுள்ளன.

மாதம் ரூ. 50000- க்கு மேல்

மாதம் ரூ. 50000- க்கு மேல்


இதையே தொழிலாக கொண்டு, முழு நேரமும், பிளாக் எழுதியே வருமானம் சம்பாதிக்கும் அனேக தொழில் நிறுவனங்களும் உள்ளன. இதில் ஒருவர்தான் 21 வயது தில்லி மாணவி சோனியா கார்க். இவர் மாதம் 50,000க்கு மேல் பிளாக் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார். இவர் பிளாக்கிற்கு 73,000க்கும் மேல் பின்தொடர்பவர்கள் இருப்பது கூடுதல் தகவல். பிளாக் எழுதுவது அவ்வளவு ஈஸி இல்லை என்றும் அன்றாட வேலை போலவே இதுவும் சவால் நிறைந்தது என்று கூறுகிறார் கார்க்.

என்ன தகுதி தேவை:

என்ன தகுதி தேவை:


பிளாக் எழுத என்ன தகுதி வேண்டும் என்பது உங்களது கேள்வியாக இருந்தால் சிந்திக்க தெரிந்தவராக இருந்தால் மட்டும் போதுமானது என்பதுதான் பதில். எழுத படிக்க கூட தெரிய வேண்டாம். அருகில் உள்ள மாணவர்களையே, அல்லது உங்களது மகன், மகள் என யாரை வேண்டுமானலும் எழுத சொல்லி பின் இதனை டிஜிட்டல் வடிவில் மாற்றிக்கொள்ளலாம்.

கூடுதல் தகுதி

கூடுதல் தகுதி


உங்களுக்கு டெக் சார்ந்த விஷயங்கள் தெரிந்திருப்பது கூடுதல் தகுதி. இல்லாத பட்சத்தில் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன உங்கள் எழுத்திற்கு விலை கொடுக்க. பிளாக் மூலம் உங்களை நீங்கள் விற்க கற்றுக்கொள்ளுங்கள் பின் நீங்கள் விரும்புவதை விற்கலாம் என்கிறார் சோனியா.

எப்படி சாதித்தார் சோனியா?

எப்படி சாதித்தார் சோனியா?


பொதுவாக நான் எனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் அதிகமாக நேரம் செலவழிப்பது இல்லை. எப்போதும், புதிய பிராண்ட்களை அறிமுகப்படுத்தப்படும் நிறுவனம், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது பிடிக்கும் பின்பு இதுவே எனது தொழிலாகிவிட்டது என்கிறார் சோனியா.

சவால்கள் என்ன?

சவால்கள் என்ன?


சவால்கள் இருக்கத்தான் செய்தன ஆரம்பகட்டத்தில் புகைப்படம் எடுப்பவர், எடிட்டர், உடை, பெட்ரோல் செலவு போன்ற அத்தியாவசியமான செலவுகள் இருக்கத்தான் செய்தன. இது நாளாடைவில் கொஞ்சம், கொஞ்சமாக குறைய தொடங்கியது. புதிதாக தொழில் தொடங்குபவர் யாராக வேண்டுமானலும் இருக்கலாம். இந்த பிரச்னையை சந்தித்துதான் ஆக வேண்டும். எப்போது நீங்கள் ஒரு பிராண்டாகவே மாற தொடங்குகிறீர்களோ அப்போது இந்த பிரச்சனைகள் தானாகவே நீங்கும் என்கிறார் சோனியா.

புதியவர்களுக்கு சோனியாவின் டிப்ஸ் இதுதான்:

புதியவர்களுக்கு சோனியாவின் டிப்ஸ் இதுதான்:


தாமதிக்காதீர்கள். உடனே ஆரம்பித்துவிடுங்கள், எழுத, எழுத கற்றுக்கொள்ள முடியும். ஒரு போஸ்ட்க்கு 10 முதல் 15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். பின்தொடர்பவர்களை பின்தொடராதீர்கள். வித்தியசமாக சிந்தியுங்கள், அதை எழுத்தாக்குங்கள், வெற்றி உங்கள் வசம் என்கிறார் சோனியா.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Earning big bucks in style
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X