இன்று நம் நாட்டில் உள்ள பிரச்சனைகளில் குறிப்பான ஒன்றுதான் வேலையில்லா திண்டாட்டமும். ஆண்டுதோறும், மத்திய மாநில அரசுகள் வேலை வாய்ப்பை உருவாக்கி வருவதாகச் செய்திகள் வெளியானாலும் என்னவோ இன்றும் வேலையில்லாமல் பல லட்சம் இளைஞர்கள் தவிப்பது நிதர்சனமான உண்மை.

இது ஒருபுறம் இருக்க படித்த பட்டதாரி இளைஞர்கள் எளிமையாக மாதம் கைநிறைய சம்பாதிக்க மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஓர் புதிய ஐடியாவையும் கொடுத்திருக்கிறார். அது என்னன்னு உங்களுக்குத் தெரியுமா?
வேலையில்லா பட்டதாரிகள்!
படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்காக பதிவு செய்து நம் தமிழகத்திலேயே பல லட்சம் பட்டதாரி இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். என்னதான் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளை எழுதினாலும் வேலை கிடைப்பது ஓர் சிலருக்குத்தான். இதனால் தனியார் வேலைகளை நோக்கி படையெடுப்பது வழக்கமாகிவிட்டது.
அமைச்சரின் அசத்தல் ஐடியா!
இந்நிலையில் தான் நம் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் பட்டதாரி இளைஞர்களுக்கு ஓர் புதிய ஐடியாவை பகிர்ந்துள்ளார். அதாவது, பட்டதாரி இளைஞர்கள் மீன் வளர்ப்பு மூலம் சுய தொழில் தொடங்கி சம்பாதிக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.
எதில் அதிக லாபம்!
தேசிய மீன் வளர்ப்பு தினம் கடந்த ஜூலை 10ம் தேதியன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எந்தெந்த மீன்களை வளர்த்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்பது குறித்தான கையேட்டை வெளியிட்டார்.
மாதம் ரூ.30 ஆயிரம்!
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் பேசுகையில், "வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு காத்திருக்கும் இளைஞர்களே, சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தால், மீன் வளர்ப்பு தொழிலில் முழுமையாக ஈடுபட்டு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.
வேலையில்லா திண்டாட்டம் குறையும்!
இதன் மூலம் தமிழகத்தின் பொருளாதாரம் உயரும். அதுமட்டுமின்றி கடல் மீன் உணவுகளின் தேவை அதிகமாக இருக்கிறது. இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வேலையில்லா திண்டாட்டமும் குறையும்.
கட்லா, மிர்கால் மீனு மீனு..!
அதுமட்டுமின்றி அவர் பேசுகையில், வேகமாக வளரக்கூடிய மீன்களான கட்லா, மிர்கால் உள்ளிட்ட மீன்கள் மற்றும் கடல்பாசிக்குச் சந்தையில் நல்ல மதிப்பு இருக்கிறது. அவற்றை வளர்ப்பதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம். ஆண்டுதோறும் தமிழகத்திலிருந்து 5,500 கோடி ரூபாய் மதிப்பிலான கடல் மீன்கள் ஏற்றுமதியாகிறது. உலகளவில் அலங்கார மீன்களின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கிறது" இளைஞர்கள் இதனை முறையாகப் பயன்படுத்திப் பயனடையலாம் என்றார்.


Click it and Unblock the Notifications












