பெற்றோர்கள் குழந்தைகளின் வாழ்கையில் செய்ய வேண்டிய தலையாய கடமைகள்

Posted By:

பெற்றோர்களின் கடமை

பெற்றோர்களின் கடமைகளாக அவர்களின் செய்ய வேண்டியவற்றை மட்டும் சுட்டிகாட்ட முடியாது. அவர்கள் செய்யத்தவறியவற்றை அனனைத்து பெற்றோர்களும் அறிந்து கொள்ள வேண்டும் . அவர்களின் கடமையென்பது செய்யவேண்டிய பணிகளை குறிக்கும் .

குழந்தைகளின் ஆரோக்கியம் :

குழந்தைகளின் ஆரோக்கியம் பெறோர்களின் கையில் உள்ளது . நல்ல பழக்க வழக்கங்களை கற்றுத்தரும் பெறோர்கள் பிள்ளைகளின் உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சிறு வயதிலே உணவில் நாட்டமில்லாது குழந்தைகள் நோஞ்சானாவதற்கு பெற்றோரே காரணம். நாகரீக மாற்றத்தால் தாய்ப்பால் கொடுப்பதில்லை, செயற்கை உணவை பழக்கப்படுத்திகொள்வதால் நிகழுகிறது. இத்தகைய போக்கை கைவிடுதல் வேண்டும். இயற்கை உணவான தினைமாவு, வேக வைத்த பருப்புகள், கொண்டை கடலை, அவுல், வீட்டில் செய்யும் உணவுகளே அதிகம் கொடுக்க வேண்டும். காற்றடைத்த ஸ்நேக்ஸ் பண்டங்களை தவிர்க்க வேண்டும். பழங்கள், கடித்து தின்னும் கரும்பு, கொய்யா, ஆப்பிள், எள்ளுருண்டை, கம்மர்கட்டு போன்ற பண்டங்களை எளிதில் செய்ய கூடியவை அவற்றை பிள்ளைகளுக்கு கொடுத்து பழக வேண்டும் .

செயல்முறை கல்வி :

செயல்முறை கல்வி பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அளிக்க வேண்டும் அதென்ன புதுப்படிப்பா,, என்ற வினா வேண்டாம் பெற்றோரே ! நீங்கள் சிறு வயதில் என்ன செய்தீரோ அவற்றைத்தான் செயல்முறை கல்வி எனப்படுகிறது.

சிறுவயதில் மணல் விளையாட்டு மூலம் கட்டிடங்கள் கட்டீனீர்கள் அவ்வாறே அனுமதியுங்கள் மண்ணில் உயிரிகள் தொல்லையிருக்கும் குழந்தை உடல்நலம் கெடும் என்ற சிந்தனையை விடுத்து விளையாட விடுங்கள் குழந்தை உடலில் எதிர்ப்பு சக்தி வளரவிடுங்கள், அத்துடன் அவர்களின் கற்பனை திறனும் பெருகும். கில்லிதாண்டல், பச்ச குதிரை, தாயம் போன்ற அடிப்படை விளையாட்டுகள் விளையாடச் செய்து குழந்தைகளின் மூளை உடல் வளர்ப்புக்கு உதவுங்கள் . கிழே விழுந்துதான் எழுந்து நடக்க முடியும் அவற்றை அனுமதியுங்கள் .

பெற்றோர்களின் உதாசீனம், டிவி மற்றும் சினிமா வன்முறைகளின் தாக்குதலால் பெற்றோர்களின் கெட்ட அனுகுமுறைகளால் பிள்ளைகள் சீர்திருத்த பள்ளிகளுக்கு செல்லும் அபாயம் ஏற்படுகின்றது. அதனை தவிர்க்க வேண்டுமெனில் பெறோர்கள் பிள்ளைகளின் வளர்ப்பு சூழலை முறைப்படுத்த வேண்டும் .
சிறு வயதிலே கோவம் , பொறமை, பிடிவாதம், புறங்கூறுதல் எண்ணம் வருவதை தடுத்து அன்பு , கருணை. சாமர்த்தியம், பொறுப்புணர்வு, விட்டுகொடுத்தல், பகிர்வு போன்ற ஒழுக்க நெறிகளை கற்பித்தல் என்பது முக்கியமாகும் .

பெற்றோர்களின் கடமையில் ஜொலிக்கும்  மாணவ வாழ்கை


உடன் பிறப்பின்றி தனியே வளரும் குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் உறவினர்கள், நன்பர்கள், தாத்தா பாட்டி போன்ற உறவுகளுடன் விடுமுறை நாட்களில் இணையசெய்யுங்கள் அது குழந்தைகளின் சிறப்பான வளரச்சிக்கு உதவும். நவநாகரீக போக்கில் வாழ்ந்தாலும் பிள்ளைகள் போக்கு மாறாமல் காக்கலாம் .
மனதுவிட்டு பேசுங்கள் கதைகள் பல படித்து சொல்லுங்கள். தனியே நேரம் ஒதுக்குங்கள் , புத்தக வாசிப்பு பழக்கப்படுத்துங்கள் . சுயசிந்தனை வளர உதவுங்கள் .

English summary
here article mentioned about duties of parents

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia