தோல்வியை துவம்சம் செய்து எழுந்து வா... அடுத்த விநாடி ஆச்சரியங்கள் ஏராளம்!!!

மதிப்பெண்கள் ஒரு போதும் வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. பெற்றோர்களே பிள்ளைகளுக்கு தன்நம்பிக்கை ஊட்டுங்கள்.

By Kani

பல நாள் எதிர்பார்த்து காத்திருந்த தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் பர்ஸ்ட் மார்க் வாங்கியவர்களை பார்க்க சென்றிருப்பார்கள்.

சிலர் முடிவுகள் தெரிந்ததுதான் என்றும், பலர் இரவு, பகலாக உழைத்த கடின உழைப்பிற்கு பலன் இல்லாமல் போச்சே என்று வருந்தி கொண்டிருப்பார்கள். சில தோல்விகள் நம்மை சலிப்படையச் செய்யும் ஆம் உண்மைதான்.

எழுந்து வா... அடுத்த விநாடி ஆச்சரியங்கள் ஏராளம்!!!

பல்வேறு தியாகங்களை புரிந்து, இரவு, பகல் பாராமல் பல திட்டங்களை வகுத்து அர்ப்பணிப்புடன் செய்யப்பட்ட செயல்கள் தோல்வியையே, ஏமாற்றத்தையே சந்திக்கும் போது சலிப்படைவது இயற்கையே. அதற்கு நீங்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மதிப்பெண்கள் ஒரு போதும் வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. பெற்றோர்களே பிள்ளைகளுக்கு அன்போடு சேர்த்து தன்நம்பிக்கையும் ஊட்டுங்கள்.

பர்ஸ்ட் மார்க் எடுத்தவங்க எல்லாருமே பிரில்லியன்ட்... அவங்க மட்டும்தான் வாழ்க்கையை ஜெயிக்கப் பிறந்தவங்க... மற்றவங்க எல்லாரும் முட்டாள்கள்னு நினைச்சிக்காதிங்க..

இந்த இழப்பு வெற்றிக்கான பிள்ளையார் சுழியாகக் கூட இருக்கலாம். நாம் வாழ்க்கையில் அடுத்தடுத்த இலக்குகளுக்கான பயணத்தை செம்மைப்படுத்த போகும் ஒரு முன்னோட்டமாக எடுக்க பழகி கொள்ளுங்கள்.

உங்களுக்கு ஒன்றை இந்நேரத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன். நம் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பத்தாம் வகுப்பை கூட தாண்டல. ஆனால், சச்சினின் வாழ்க்கை பாடம் பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் முதல் பாடமாக இருந்தது நினைவிருக்கா. அதுவே 90'ஸ் கிட்ஸ்களுக்கு முதல் மோட்டிவேஷன் என்றால் மிகையாகாது.

இது மட்டுமா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக முறை கேட்கப்பட்ட வினா என்றால் அது சச்சின் எஸ்ஸே தான். கடவுளே எப்படியாவது சச்சின் எஸ்ஸே கொஸ்டின் பேப்பர்ல வரனும் என வேண்டிய பல மாணவர்களை காப்பாற்றியதோடு, அவர்களை பத்தாம் வகுப்பில் தேற்றிய புகழ் யாரை சாரும் என்பதை அமர்ந்து யோசித்துப் பாருங்கள்.

சச்சின் மட்டுமா... இல்லவே இல்லை... மெகா பாலிவுட் ஸ்டார்களான சல்மான்கான், அமீர்கான் எல்லாம் ப்ளஸ் 2 முடித்தவர்கள்தான்.

ஒரு மனிதனின் எதிர்காலம் புகழ், திறமை எல்லாம் படிப்பை வைத்து நிர்ணயம் செய்யப்படுவதில்லை. மாறாக தனி மனித ஒழுக்கம், திறமை, உழைப்பு, விடா முயற்சி போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

வாழ்கைக்கான தந்துவங்களை இருவரிகளில் கூறியதில் வள்ளுவனுக்கு நிகர் வள்ளுவனே என்றே கூறலாம்

"ஊளையும் உப்பக்கம் காண்பார் உலைவின்றி
தாழாது உஞற்று பவர்".

என்ற வள்ளுவனின் வரிகளுக்கு பொருள், சோர்வடையாது முயற்சியில் குறைவு இல்லாமல் தொடர்ந்தும் முயற்சி செய்பவன், வெற்றிக்கு இடையூறாக வரும் ஊழ்வினையினையும் ஒரு காலத்தில் வெற்றி பெறுவான் என்பதே. நான் உங்களுக்காக சொல்வது ஒன்றே ஒன்றுதான் "நெவர் எவர் கிவ் அப்" அடுத்த விநாடியில் நிகழும் ஆச்சரியங்கள் ஏராளம். சோ! வாங்க கலேஜ் படிக்கலாம்...

நினைத்த கல்லூரியில், நினைத்த பிரிவில் இடம் வேண்டுமா? கனவை நனவாக்கும் 15 சீக்ரெட்ஸ்!நினைத்த கல்லூரியில், நினைத்த பிரிவில் இடம் வேண்டுமா? கனவை நனவாக்கும் 15 சீக்ரெட்ஸ்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Don’t let school marks decide your future, there’s more to life
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X