வெற்றிக்கு ஆழ்ந்து படியுங்கள் மாணவர்களே !!

Posted By:


மாணவர்களே !!!!
நலம் தானே ,, மாணவ பருவம் என்றும் நலமானதுதான் இருப்பினும் ஒன் இந்தியாவின் அக்கறை வினா இது ,,,,ஏன் இந்த கேள்வியெனில் நம்மில் பல மாணவர்களுக்கு " ஸ்கூல் இஸ் போரிங்" , அப்படித்தானே மாணவர்களே ,ஆனால் அந்த கவலையை போக்கவே உங்களின் நட்பான ஒன் இந்தியா இங்கு உங்களுக்காகவே சில டிப்ஸ்கள் தயார் செய்து வழங்குகிறது .

படித்தலுடன் நினைவுகூறல்

" படிக்கிறது புடிக்கல இருந்தாலும் படிக்கிறேன் பட் ஐ ஃபர்கெட் ஆல் தென் மறந்துருது வேற , என்ன செய்வது " என்ற கேள்வி பல மாணவர்களுக்குள் உள்ள வினா?,.. சரிதானா மாணவர்களே ! கண்டுபிடிச்சுடோம் பாத்தீங்களா வாங்க உங்கள் கேள்விக்கான விடை தெரிந்துகொள்வோம் .
படிக்க ஆர்வம் : 

படிக்க ஆர்வம் இல்லை என்ற பெரும்பாலான மாணவர்களான உங்கள் கருத்துக்கு காரணம் அந்த பாடத்தில் ஈடுபாடு குறைவு மற்றும் படிக்கும்போது ஏற்படுகிற கவன சிதறலான டேக் டைவர்சன் ஆகும் . இவ்வாறாக ஏற்படும் சிதறல்களை போக்க மாணவர்கள் சில ட்ரிக்குகளை கையாள வேண்டும் .

1 படிக்கும் நேரம் :

சரியாக தீர்மானித்து , படிக்க அமரும் போது ஐந்து மணித்துளி யோக முத்ரா பயன்படுத்துங்கள் . நீங்கள் பயன்படுத்த வேண்டிய முத்ரா முதலில் அறிவுமுத்ரா இது புத்தர் உபயோகப்படுத்தியது இதனை பயன்படுத்துங்கள் .

அறிவு முத்ரா :

இரு கரங்களின் கைகூப்பிய நிலையில் பத்து விரல்களின் நுனி மட்டும் தொடுதலுடன் இதயத்தின் அருகே கைகூப்பி வணங்கிய நிலையில் ஐந்து நிமிடம் கண்களை மூடி தியானியுங்கள் . உங்கள் மனம் ஒருநிலைப்படும் நீங்கள் படிக்கின்ற பாடங்கள் எளிதில் படிக்க முடியும் .
ஹாக்கிணி முத்ரா, தர்மசக்கரமுத்ரா போனற முத்ராக்கள் மனஒருநிலைப்படுத்த உதவும் .

2 ரிவைசிங் டேம் :

ஒருமுறை படித்த பாடங்களை சுழற்சி முறையில் படிக்க வேண்டும் அதென்ன ரீவைசிங்சிஸ்டம் என்ற வியப்பா!,, அதாவது ஒருமுறை படித்த பாடங்களை அன்று இரவு சொல்லிப்பார்க்க வேண்டும் அப்பொழுது கொஞ்சம் நினைவில் நிற்கும் சந்தேகமெனில் புத்தகம் திறந்து எங்கே தவறு எனப் பாருங்கள் நினைவறையில் சேகரியுங்கள் , மீண்டும் படித்தவற்றை இரண்டு நாள் கழித்து நினைவுப் படுத்துங்கள் , அவ்வாறே வார இறுதியில் மீண்டும் சேகரியுங்கள் அதனையே மாத இறுதியில் மீண்டும் நினைவு படுத்துங்கள் வாழ்வின் இறுதிவரை நீங்கள் படித்த பாடங்களை மறக்கமாட்டீர்கள் . இதனை உங்களுக்கு சவாலாகவே கூறுகிறோம் . முயன்று பார்த்து கருத்து தெரிவியுங்கள் மாணவர்களே ,,

3 சுயதேர்வு /கிளாஸ் டெஸ்ட் :

படித்தலுடன் நினைவுகூறல்

சரி இவ்வளவு மெனகெட்டு படித்தோம் அது எவ்வாறு சேமிக்கப்படுகின்றது என்பதை அறியவே கிளாஸ் டெஸ்ட் எழுத வேண்டும் . அல்லது தாங்களே கேள்வி தயாரித்து விடையளிக்க வேண்டும் . மேலே குறிப்பிட்ட ரிவைசிங் சிஸ்டம் சரியாக பின்ப்பற்றும் மாணவர்களுக்கு டெஸ்ட் அல்லது சுயதேர்வு பெரிய சுமையாக இருக்காது என்பதை மனதில் கொண்டு செயல்ப்பட்டு கமெண்ட்ஸ் பாக்ஸில் பதிவிடுங்கள் . ஒன் இந்தியாவின் மாணவ குறிப்புகள் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் பொருந்தும் ஆகையால் அனைவரும் பயன்படுத்துங்கள் மாணவச் செல்வங்களே ,,
" அறிவை சமன்செய் அகலமாக்கு உன்விசாலப்பார்வையை , தோல்வியால் விழுந்ததை மீட்டெடு இதுவே நீ " வரிகளை மனதில் கொள்ளுங்கள் ஆழ்ந்து படியுங்கள் வெற்றி பெற வாழ்த்துகள் .

English summary
Here article tell about deep study, revising and self test for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia