டாப் 10 படிப்புகள்..! எதைப் படித்தால் எப்படி ஜொலிக்கலாம்...?

பன்னிரெண்டாம் வகுப்பை முடிக்கும் மாணவர்கள் அடுத்து என்ன செய்யலாம் ? எந்தத் துறை தங்களுக்கு சரியானது என சிந்திக்கத் துவங்கியிருப்பர்.

பன்னிரெண்டாம் வகுப்பை முடிக்கும் மாணவர்கள் அடுத்து என்ன செய்யலாம் ? எந்தத் துறை தங்களுக்கு சரியானது என சிந்திக்கத் துவங்கியிருப்பர். மாணவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையை இந்த தருணம் தான் தீர்மாணிக்கிறது. இனி எந்தப் படிப்பு, எந்த வேலைக்கு வழிவகுக்கும் என்பதைத் தீர்மானிக்கும் கல்விதான் உயர்கல்வி.

டாப் 10 படிப்புகள்..! எதைப் படித்தால் எப்படி ஜொலிக்கலாம்...?

விரும்புவதே வாழ்நாளில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் நிறைவாக உணர முடியும். அதனால் இக்காலகட்டத்தில் நீங்கள் எடுக்கவுள்ள முடிவானது உங்கள் வாழ்வை மட்டுமல்ல ஒட்டுமொத்த எதிர்கால மகிழ்ச்சியையும் நிர்ணயிக்கப் போவதாகும்.

விவசாயம்

விவசாயம்


விவசாயப் படிப்புகள் என்று எடுத்துக் கொண்டால் கால காலமாக புகழ்பெற்று விளங்குவது பி.எஸ்சி (அக்ரி) என்கிற நான்கு வருடப் பட்டப் படிப்பாகும். தவிர, பிஎஸ்சி (விவசாயம்) எனும் தோட்டக் கலைப் படிப்பு, பிஎஸ்சி மனையியல் படிப்பு மற்றும வனத்துறை சார்ந்த படிப்பும் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகத்தில் உள்ளன.

பொறியியல்

பொறியியல்


தமிழகத்தைப் பொருத்தவரை அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சிஇஜி எனப்படும் கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி.டெக், எம்ஐடி, எஸ்ஏபி எனப்படும் ஆர்க்டெக்சர் கல்லூரி ஆகிய நான்கும் அண்ணா பல்கலைக் கழகத்தின் நேரடி கல்லூரிகள். அடுத்த நிலையில் மாநிலத்தின் 13 இடங்களில் அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளும். 10 இடங்களில் அரசு பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.

மருத்துவம்

மருத்துவம்


மருத்துவத்தைப் பொறுத்தவரை எம்பிபிஎஸ் அளவுக்கு பிரபலமாக உள்ள சமீப ஆண்டுகளில் அதிக முக்கியத்துவம் பெறுகிற ஒன்று துணை மருத்துவம் என்கிற மாற்று மருத்துவப் படிப்புகள். அதாவது, ஆயுர்வேத படிப்பான பிஏஎம்எஸ், சித்த மருத்துவத்தின் பிஎஸ்எம்எஸ், ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளன.

இவை தவிர, பி.பார்ம் எனப்படும் மருந்தியியல் பட்டப்படிப்பு, பிபிடி எனப்படும் ஃபிசியோதெரபி, பிஓடி எனப்படும் அக்குபேஷன் தெரபி, ஆப்டோ மெட்ரி எனப்படும் கண் மருத்துவப் பட்டயப்படிப்பு ஆகியவையும் புகழ்பெற்றவை.

 

சட்டம்

சட்டம்


தேசிய அளவில் புகழ்பெற்ற தேசிய சட்ட கல்லூரி எனப்படும் அகில இந்திய சட்டக் கல்லூரிகள் பல்வேறு மாநிலங்களிலும் உள்ளன. இவற்றுள் டிஎன்என்எல்எஸ் எனப்படும் தமிழ்நாடு தேசிய சட்ட கல்லூரி திருச்சியில் செயல்படுகிறது. இவை அனைத்திலும் 12-வது முடித்தவர்கள் 5 ஆண்டு சட்டப் படிப்பு சேர CLAT எனப்படும் பொது சட்ட நுவுத் தேர்வினை எழுத வேண்டும். ஆனால் தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பலகலைக் கழகத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 7 இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் சேர நுழைவுத்தேர்வு கிடையாது.

வணிகவியல்

வணிகவியல்


கம்ப்யூட்டர் பயிற்சியோடு இணைந்த பி.காம் (கணினி அறிவியல்) மற்றும் பி.காம் (தகவல் தொழில்நுட்பம் ), வங்கித்துறை சார்ந்த (வங்கி மேலாண்மை ) மற்றும் பி.காம் (சந்தைபடுத்துதல்), பி.காம் (விளம்பரவியல்) என ஏராளமான சிறப்பு படிப்புகள் உருவாகியிருப்பது ஆரோக்கியமான விஷயம். இவற்றில் உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப துறையினை தேர்வு செய்து படிக்கலாம்.

சமையல் கலை

சமையல் கலை


சென்னை தரமணியில் மத்திய அரசு நிதி உதவியுடன் நடைபெறும் கேட்டரிங் கல்லூரியில் பிஎஸ்சி என்கிற பட்டப் படிப்பு பிரபலமாக உள்ளது. இதில் சேர அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இக்கல்லூரி தவிர, மாநில அரசு நடத்தும் கேட்டரிங் காலேஜ் திருச்சியில் உள்ளது. இவை இரண்டிலுமே உணவு தயாரிப்பு, அலுவல் பணி, மேலாண்மை, நிர்வாகம் ஆகியவற்றில் ஒன்றரை வருட டிப்ளமா படிப்புகள் உள்ளன.

ஊடகத்துறை

ஊடகத்துறை

 

ஊடகத் துறையைப் பொறுத்தவரை புகழ்பெற்ற ஒரு படிப்பு பி.எஸ்சி (விசுவல் கம்யூனிகெசன்) விஸ்காம். இதற்கு அடுத்த ஒன்று பி.எஸ்சி (எலக்ட்ரானிக் மீடியா), பி.எஸ்சி (அனிமேஷன்), (பிலிம் மற்றும் டிவி புரடக்ஷன்), பி.ஏ. (ஜர்னலிஷம்) ஆகியவையும் ஊடகத்துறையில் சாதிக்க உதவும் படிப்புகளாகும்.

 

நுண்கலை

நுண்கலை


பேச்சுலர் ஆப் ஃபைன் ஆர்ட்ஸ் என்னும் 4 வருட எஎப்ஏ பட்டப்படிப்பு சென்னை எழும்பூரிலுள்ள 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசு ஓவியக் கல்லூரியிலும், கும்பகோணத்தில் உள்ள அரசு ஓவியக் கல்லூரியிலும் உள்ளது. துணி அழங்காரம், செராமிக் வடிவமைப்பு, தகவல் தொழில்நுட்பத்தில் வடிவமைப்பு, ஓவியம் என பல சிறப்புப் பாடப் பிரிவுகளில் பட்டப்படிப்பை சொல்லித் தரும் இந்த கல்லூரிகளில் கல்விக் கட்டணமும் மிகக் குறைவு.

ஆங்கில இலக்கியம்

ஆங்கில இலக்கியம்


காலம் காலமாக நம் கலை அறிவியல் கல்லூரிகளில் இருந்து வருகிற ஒரு படிப்புதான் பி.ஏ (ஆங்கில இலக்கியம். இருப்பினும், சமீப காலமாக இதற்கான மவுசு கூடியிருக்கிறது. இவர்களை அதிகம் ஈர்க்கிற ஒரு துறை ஊடகம். இப்பொழுது நிறைய பண்ணாட்டு நிறுவனங்களும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு சென்று கேம்பஸ் இன்டர்வியூ மூலம் இவர்களை பணியில் அமர்த்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

உளவியல்

உளவியல்


பெண்களுக்கு அதிகம் பொருத்தமான துறைகளில் ஒன்று தான் உளவியல். உளவியல் துறை சார்ந்த பி.எஸ்சி (உளவியல்) பட்டப்படிப்பு இன்று ஆண், பெண் இருபாலரும் விரும்புகிற படிப்பாக மாறியிருக்கிறது. மேலும், வேலை வாய்ப்புகளிலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Courses after 12th Science: Career, Salary & Job Opportunities
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X