இந்த கல்வியாண்டில் ஜொலிக்கப் போகும் பட்டப் படிப்புகள் எதுன்னு தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் என்ன படிக்கிறோம், எதற்காகப் படிக்கிறோம் என்பதை ஆராய்வதை விட, எந்த படிப்பை படித்தால் உடனே வேலை கிடைக்கும் என தேடிப் போய் படிப்பதையே அதிகம் விரும்புகிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் என்ன படிக்கிறோம், எதற்காகப் படிக்கிறோம் என்பதை ஆராய்வதை விட, எந்த படிப்பை படித்தால் உடனே வேலை கிடைக்கும் என தேடிப் போய் படிப்பதையே அதிகம் விரும்புகிறார்கள். பள்ளிப்படிப்பில் நீங்க என்னதான் அதிக மதிப்பெண் பெற்றவராக இருந்தாலும் இதுதான் இன்றைய கட்டாயமாகவும் உள்ளது.

இந்த கல்வியாண்டில் ஜொலிக்கப் போகும் பட்டப் படிப்புகள் எதுன்னு தெரியுமா?

உங்களுடைய விருப்பம் மற்றும் தேவையைப் பொருத்து நல்ல கல்லூரியில் சிறப்பான படிப்பை தேர்வு செய்து கடின முயற்சி செய்து படிக்க என்றாவது நினைத்ததுண்டா ? நீங்கள் தேர்வு செய்யும் படிப்பின் மீதான உங்களின் ஆர்வம் மற்றும் திறமை, உங்களின் நிதிநிலை மற்றும் மனப்பாங்கு ஆகியவற்றை எப்போதும் கவனத்தில் கொண்டு படிப்பை தேர்வு செய்து பாருங்கள். அடுத்தடுத்து வெற்றி தான்.

அதெல்லாம் சரி, தற்போதைய காலகட்டத்தில் அடுத்து வரும் கல்வியாண்டில் என்ன துறையைத் தேர்வு செய்து படித்தால் வளமான வாழ்க்கை உண்டாகும் என உங்களுக்குத் தெரியுமா ?

அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு...!

அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு...!


மருத்துவ அறிவியல் பிரிவு, எம்பிபிஎஸ், பிடிஎஸ், பி.பார்ம், நர்சிங், பிஎஸ்சி துணைநிலை மருத்துவ அறிவியல், பிஎஸ்சி ஆப்டோமெட்ரி, மட்டுமின்றி கணிதம், இயற்பியல், வேதியியல், பயோகெமிஸ்ட்ரி, பயோமெடிக்கல், தாவரவியல், கணினிகள், உணவு தொழில் நுட்பம், மண்ணியல், புள்ளியியல், நியூட்ரிஷன், கால்நடை பராமரிப்பை உள்ளடக்கிய வேளாண் படிப்பு, கால்நடை அறிவியல், பால்பண்ணைத் தொழில் மற்றும் கோழி வளர்ப்பு ஆகியவற்றில் பி.எஸ்.சி படிப்பு மேற்கொள்ளலாம்.

அறிவியல், வணிகம் மற்றும் கலைப் பிரிவு..!

அறிவியல், வணிகம் மற்றும் கலைப் பிரிவு..!


நீங்க ஆர்ட்ஸ் மாணவராக இருந்தால் இது உங்களுக்குத் தான். வணிகம், கலை மற்றும் அறிவியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தால் உங்களுக்கு விருப்பமான படிப்பில் விரைவான சேர்க்கையை பெறுவீர்கள். அறிவியல் பிரிவானது முக்கியமாக பொறியியல் மற்றும் மருத்துவ அறிவியல் பிரிவுகளில் நல்ல வாய்ப்புகளை அளிக்கின்றன. ஆனால் அப்படிப்புகளில் சேர்வதற்கு நீங்கள் தேர்வு செய்யும் கல்லூரி முக்கியமானதாகும்.

டிப்ளமோ படிக்கலாமா ?

டிப்ளமோ படிக்கலாமா ?


கலை மற்றும் வணிகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும், பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளின் வாயிலாக பெரிய அளவிலான வாய்ப்புகள் உள்ளன. நீங்க என்ன படிப்பை படித்தாலும் பல நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கும் போட்டித் தேர்வுகளை எழுதுவது முக்கியமானதாகும். குறிப்பாக, உங்களின் படிப்பை தேர்வு செய்கையில் எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

பொறியியல் துறையில் என்ன வாய்ப்பு.!

பொறியியல் துறையில் என்ன வாய்ப்பு.!


பொதுவாகவே, பொறியியல் துறை என்பது திறமையான மாணவர்களுக்கான படிப்பாகவே பாவிக்கப்படுகிறது. இத்துறையும், அதுபோலத்தான். ஆனால் ,ப்படிப்பினை மேற்கொள்ளும் கல்லூரிகளைப் பொறுத்தே இது அமையும். இன்றைய நிலையில் திரும்பிய திசையெங்கும் பொறியியல் கல்லூரிகளாகவே உள்ளன. எனவே பொறியியல் படிப்பில் சேரும் முன்னதாக தொடர்புடையக் கல்லூரியின் அங்கீகாரம், தரம் குறித்து ஆய்வு செய்து சேர்வது கட்டாயம்.

வணிக பிரிவு மாணவர்களே...!

வணிக பிரிவு மாணவர்களே...!


வணிக பிரிவு மாணவர்கள் சிபிடி என்னும் காமன் ப்ரொஃப்சின்சி தேர்வில் தேர்ச்சி பெற்றால் சிஏவில் சேரலாம். படித்துக் கொண்டிருக்கும் போதே பலதரப்பட்ட அரசு பணிகளும் இதன் மூலம் பெற முடியும். குறிப்பாக, தொலைநிலைக் கல்வி முறையில் படித்தால் வேலை செய்து கொண்டே படிப்பையும் தொடரலாம்.

சட்டத்துறை படிப்புகள்.!

சட்டத்துறை படிப்புகள்.!


சமீப காலமாக பெரும்பாலான மாணவர்களின் பார்வை சட்டத்துறையின் மீது திரும்பியுள்ளது எனலாம். ஆனால், அந்த துறையில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்தால் நல்ல வேலை வாய்ப்பை பெற முடியும் என்பது குறித்தான தெளிவான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவது வழக்கம். பெரும்பாலான சட்ட மாணவர்கள் இளநிலை படிப்பை முடித்தாலே பணி வாய்ப்புகளை பெற்றுவிடலாம் என தவறான முடிவையும் எடுப்பர்.

சட்டத்துறையில் முதுநிலை படிப்பு, ஒரு மாணவன் அத்துறையில் விருப்பமான அம்சங்களை புரிந்துகொள்ள உதவுவதுடன் அதில் சிறந்து விளங்கவும் வழிவகை செய்யும். சட்ட முதுநிலை படிப்பை முடித்தவர்கள் இளநிலை படிப்பை முடித்தவர்களை விட சிறந்த பணி வாய்ப்புகளை பெறுகின்றனர். சரியான வழிகாட்டலுடன் இதனை மேற்கொண்டால் நல்ல வரவேற்புடன் பல லட்சங்களில் சம்பாதிக்க முடிவும்.

 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Courses After 12th in 2019 : Study to get High Salary Jobs
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X