பி.ஏ. ஆங்கில இலக்கியம், பி.ஏ. தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதே இதற்குக் காரணம்.
பிஏ. ஆங்கில இலக்கியம் என்பது ஆங்கில மொழி, ஆங்கில இலக்கியம், வரலாறு போன்ற தலைப்புகளில் ஆழமான அறிவை வழங்கும் 3 வருட இளங்கலைப் படிப்பாக அமைந்துள்ளது. ஏராளமான மாணவ, மாணவிகள் இதை விரும்பிப் படிக்கின்றனர். இது பி.ஏ. இளங்கலைப் பிரிவுகளில் உள்ள சிறப்புப் படிப்புகளில் ஒன்றாக ஆங்கில இலக்கியப் படிப்பு அமைந்துள்ளது.
பி.ஏ. ஆங்கில இலக்கியத்தின் பாடத்திட்டத்தில் இந்திய பாரம்பரிய இலக்கியம், அமெரிக்க இலக்கியம், ஐரோப்பிய பாரம்பரிய இலக்கியம், ஆங்கில இலக்கிய வரலாறு, ஆங்கில கவிதை மற்றும் பல்வேறு பாடங்ளை உள்ளடக்கி உள்ளது.

இந்த பாடத்திட்டமானது நாடகம், இலக்கியம், உரைநடை மற்றும் கவிதை ஆகியவற்றின் கலவையாகவும் அமைந்துள்ளது. வில்லியம் ஷேக்ஸ்பியர் , லியோ டால்ஸ்டாய், எமிலி ப்ரோண்டே போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் , பல ஆண்டுகளாக இலக்கியத் துறையில் பயணிக்க மாணவர்களை ஊக்கப்படுத்தியுள்ளனர். ஆங்கில இலக்கிய வரலாறு பற்றிய அறிவை வழங்குவதைத் தவிர, இந்த ஆங்கில இலக்கியப் படிப்புகள் வெவ்வேறு கலாச்சாரங்களை ஆழமாக ஆராய்வதற்கும், வாழ்க்கையில் கடினமான கேள்விகளை மதிப்பிடுவதற்கும், உங்கள் எழுத்தை மேம்படுத்துவதற்கும், உங்கள் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் தொழில் திறன்களை மேம்படுத்துவதற்கும் ஒரு அருமைான தளத்தை உங்களுக்கு வழங்குகிறது.
பி.ஏ ஆங்கில இலக்கியம் என்பது பல்வேறு வகையான இலக்கிய வகைகளை உள்ளடக்கிய கடுமையான மற்றும் தீவிரமான பட்டம் ஆகும். 3 ஆண்டு பட்டப்படிப்பானது இது கவிதை, நாடகம், நாவல், உரைநடை மற்றும் வரலாறு ஆகியவற்றைப் படிக்க ஒரு நல்ல தளத்தை வழங்குகிறது . வெவ்வேறு நாடுகளில் இருந்து வரும் இலக்கியங்களை ஆய்வு செய்ய உதவுகிறது.மேலும் ஒவ்வொரு வகைக்கும் முக்கியத்துவம் அளித்து பாடத்தின் பரந்த கண்ணோட்டத்தை பாடத்திட்டம் உங்களுக்கு வழங்குகிறது. விமர்சன பகுப்பாய்வு, ஒரு எழுத்தாளரின் வேலையைச் சுருக்கி, கவிஞர்களின் மேதாவித்தனத்தை விளக்குகிறது.பிஏ ஆங்கில இலக்கியம் ஆங்கில மொழி மற்றும் வெவ்வேறு காலங்கள் மற்றும் வயது இலக்கியம் பற்றிய அடிப்படை அறிவை வழங்குகிறது. கல்விப் பாடமானது பாடத்தின் முக்கிய அம்சங்களைப் புரிந்துகொள்ள உங்களுக்குப் பயிற்சியளிக்கும், ஒரு சுயாதீனமான மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனை செயல்முறையை மாணவர்களிடையே வளர்க்கும்.
அதுமட்டுமல்லாமல் உங்கள் தகவல் தொடர்புத் திறனையும் மேம்படுத்தும் . கற்பித்தல் முறைகள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் பரந்த அளவிலான பல்கலைக்கழகங்களின் படிப்பு பாடத்திட்டம் ஒரே மாதிரியாகவே உள்ளது. ஆங்கில இலக்கியம் பற்றிய ஆய்வு மாணவர்களை ஆங்கில இலக்கியத்தின் வெவ்வேறு கால கட்டங்கள் மற்றும் அந்த காலங்களில் முக்கிய எழுத்தாளர்களை ஆராய அனுமதிக்கிறது.
பி.ஏ. ஆங்கில பாடத்திட்டத்தில் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய முக்கிய பாடங்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கக்கூடிய பாடங்கள் உள்ளன.
பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்த மாணவர், மாணவிகளுக்கு நாட்டில் தேவை அதிகமாக உள்ளது. அவர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் எம்.ஏ. ஆங்கில இலக்கியம், பி.எட், எம்.எட் என்று பயிலும்போது அவர்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக குவியத் தொடங்கும்.
அதுமட்டுமல்லாமல், கல்வி நிறுவனங்கள், யுபிஎஸ்சி, ஐபிபிஎஸ் போன்ற அரசுத் துறையிலும் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
பள்ளி, கல்லூரிகளில் அதிக வேலைவாய்ப்புகள் இருப்பதால் அவர்களுக்கான ஊதியமும் நன்றாகவே கிடைக்கிறது.
தனியார் துறையில் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையும், பொதுத்துறையில் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையும் எளிதாக அவர்கள் சம்பளத்தைப் பெற முடியும்.
தற்போது பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்த மாணவர்களுக்கான சான்றிதழ் படிப்புகள் அறிமுகமாகியுள்ளன. பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.
நாடு முழுவதும் ஆங்கில சான்றிதழ் படிப்புகள் குவிந்துள்ளன. மாணவர்களுக்கு ஆங்கில மொழியின் முழுமையான அறிவை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட குறுகிய கால பயிற்சி வகுப்புகள் அவர்களுக்கு நல்ல பயன்களை அளிக்கின்றன.
ஆங்கிலச் சான்றிதழ் படிப்பில் உள்ள பாடங்கள் இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியம் முதல் பேசுதல் மற்றும் எழுதுதல் வரை படித்தல், தேர்வுத் தயாரிப்பு, கலாச்சாரம் மற்றும் சமூக அம்சங்கள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.
ஆங்கிலத்தில் தங்கள் தொழில்களைத் தொடங்க அல்லது முன்னேற விரும்பும் மாணவர்கள் அல்லது அடிப்படைகளைப் பற்றி மேலும் அறிய விரும்பும் நபர்கள் இந்த சான்றிதழ் படிப்புகளை பயில்வதால் அதிக பயன் அடைய முடியும்.
ஏன் இந்த சான்றிதழ் படிப்புகள் முக்கியம்?
பல பல்கலைக்கழகங்களில், நடைமுறை பயன்பாடுகளை விட கோட்பாட்டு அம்சங்களில் அதிக கவனம் செலுத்தும் வகையில் பாடத் திட்டங்களை வைக்கிறது.
நீங்கள் திட்டங்களில் அல்லது நடைமுறைகளில் ஈடுபட்டாலும், அனுபவத்தைப் பெறுவதற்குப் பதிலாக படிப்பில் நல்ல தரம் (கிரேட்) பெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தற்போது கல்விச் சந்தையில் கிடைக்கும் சான்றிதழ் படிப்புகள், பல்வேறு பரிமாணங்களில் உங்கள் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் இந்த இடைவெளியைக் குறைக்கின்றன. ஆங்கிலத்தில் எளிதாக எழுதவும், பேசவும் உதவுகிறது அதற்கான நேரடிப்பயிற்சிகளையும் இந்தப் பாட்டத்திட்டங்கள் உங்களுக்கு
வழங்குகின்றன
அவை சந்தைத் தேவைகளுடன் இணைந்த பகுதிகளில் உங்கள் அறிவை நன்றாக விரிவுபடுத்துகின்றன. மேலும் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளைக் கையாளும் திறனை உங்களுக்கு வழங்குகின்றன. அதுமட்டுமல்லாமல் நீங்கள் சார்ந்த துறையில் செழிப்புறச் செய்ய உங்கள் ஆளுமையை வளர்க்கின்றன. பிஏ ஆங்கிலப்படிப்பு மாணவர்களுக்கு, அவர்களின் படிப்பை முழுமையாக நிறைவு செய்யும் இந்த சான்றிதழ் படிப்புகள் ஏராளமாக உள்ளன.
இந்தப் படிப்புகள் குறிப்பிட்ட துறைகளில் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தி, மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் போட்டித் திறனைப் பெற அனுமதிக்கிறது என்பது மிகவும் முக்கியமாகும்.
பி.ஏ. ஆங்கிலம் படித்தவர்களுக்கா|ன பல்வேறு சான்றிதழ் படிப்புகள்
1. எழுத்துத் தொடர்புக்கான ஆங்கிலம்
இந்தப் பாடத் திட்டமானது மொழி கற்றலில் எழுதப்பட்ட தொடர்புகளின் மதிப்பை வலியுறுத்துகிறது. மேலும் ஆங்கில வாசிப்பு மற்றும் எழுதுவதில் அடிப்படை திறன்களை மாணவர்களுக்கு வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் இது அடிப்படை இலக்கண விதிகளுக்கு மேல் விரிவாக எடுத்துச் சொல்கிறது.
மாணவர்களின் எல்லைகளை விரிவுபடுத்துவதற்காக பல்வேறு நூல்கள் மற்றும் இலக்கியப் படைப்புகளை அவர்களுக்கு வழங்குகிறது.
எழுதும் திறன்களின் பயன்பாடு மாணவர்களுக்கு பணிகள் மற்றும் பிற செயல்பாடுகள் மூலம் கற்பிக்கப்படும். எழுதப்பட்ட ஆங்கிலத்தின் வெளிப்பாட்டை அதிகரிக்க, பாடத்திட்டமானது ஒவ்வொரு அமர்விலும் எழுதப்பட்ட மாதிரிகளின் வரம்புகளையும் வழங்கி அவர்களின் எழுத்துத் தொடர்பை விரிவு செய்கிறது.
கல்வி நிறுவனம்: இந்தப் பாடத் திட்டத்தை மும்பை ஐஐடி வழங்குகிறது. 4 வாரங்கள் நடத்தப்படும் இந்த சான்றிதழ் படிப்பு மாணவர்களுக்கு நல்ல திறன்களை வழங்கும்.
2. தேர்ச்சிக்கான மேம்பட்ட சான்றிதழ் (ஆங்கிலம்)
இந்தப் பாடத்திட்டமானது பூர்வீகமற்ற ஆங்கிலம் பேசுபவர்களின் மொழி மற்றும் தொடர்பு திறன்களை மேம்படுத்த முயற்சி செய்கிறது. மாணவர்கள் சமூக, தொழில்முறை மற்றும் கல்விச் சூழ்நிலைகளில் மொழியைப் பயன்படுத்த உதவுகிறது.
மேலும் பாடத்திட்டமானது பேசும் ஆங்கிலம், மேம்பட்ட இலக்கண புரிதல், வார்த்தையை எப்படி ஒலிப்பது (ஃபோனடிக்ஸ்) ஆகியவற்றை வலியுறுத்துகிறது. பாடத்திட்டம் மாணவர்களின் ஆளுமை மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான திறன்களை வளர்க்க முயல்கிறது. மொழித் தடைகளைத் தாண்டி, பல மொழிகளில் சரளமாகப் பேசுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் முன்னேற விரும்பும் மக்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமையும்.
கல்வி நிறுவனம்: சாரதா பல்கலைக்கழகம். இந்தப் படிப்பானது ஓராண்டு படிப்பாகும். இதற்கான கட்டணம் ரூ.60 ஆயிரம்.
3.போட்டித் தேர்வுகளுக்கான ஆங்கில மொழி
இந்தப் பயிற்சியானது பங்கேற்பாளர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக அவர்களின் மொழித் திறனை மதிப்பிடும் போட்டித் தேர்வுகளை எடுக்க விரும்புபவர்களுக்கு மிகவும் உதவியாகும். இந்தப் பாடத்திட்டத்தை வழங்கும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இலக்கணம், எழுத்து மற்றும் சொல்லகராதி ஆகியவற்றை நன்றாகப் புரிந்துகொள்ள உதவும் பாடங்களை வழங்குகின்றனர்.
கல்வி நிறுவனம்:ஸ்வயம்-ஐஐடி மெட்ராஸ். 12 வார கால பயிற்சியான இந்தப் பாடத் திட்டத்துக்கு கட்டணம் கிடையாது.
4. ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கான ஆங்கிலம்: தீவிர ஸ்போக்கன் இங்கிலீஷ் பாடத்திட்டம்
இந்த சான்றிதழ் படிப்பானது பேச்சு ஆங்கிலத்தில் இடைநிலை கல்வி நிலைக்கு விரைவாக முன்னேற விரும்பும் மொத்த தொடக்க நிலையாளர்களுக்காக அமைந்துள்ளது. ஒவ்வொரு பாடமும் தோராயமாக 1.5 மணிநேரம் நீடிக்கும்.
மேலும் 77 மணிநேர தீவிர பேச்சு ஆங்கில மொழி பயிற்சியை உள்ளடக்கியதாக இருக்கும்.
பாடத்திட்டம் முற்றிலும் அனிமேஷன் மற்றும் விவாத அடிப்படையில் இருக்கும். பாடத்தின் முக்கியத்துவம் சரளமாக பேசுதல், ஆங்கில சொற்களஞ்சியம் மற்றும் இலக்கணம் ஆகியவை என்பது குறிப்பிடத்தக்கது. எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பாடத் திட்டங்கள் விளக்கப்பட்டுள்ளன .
கல்வி நிறுவனம்: உடேமி. 77 மணி நேர பயிற்சியை உள்ளடக்கிய இந்த படிப்புக்கு கட்டணமாக ரூ.2,899 செலுத்த வேண்டும்.
5. பணியிட ஆங்கிலச் சான்றிதழ்
இந்தப் பாடத்திட்டத்தின் குறிக்கோள், மாணவர்கள் பணியிடத்தில் மிகவும் பயனுள்ள வகையில் நல் ஆங்கிலத் தொடர்பாளர்களாக மாற உதவுவதாக அமைந்துள்ளது. இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் உச்சரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கும் போது சரளத்தையும் துல்லியத்தையும் வளர்ப்பதை பாடத்திட்டம் வலியுறுத்துகிறது. படிப்பின் குறிக்கோள், மாணவர்கள் பணியிடத்தில் தனித்து நிற்கவும் கவனிக்கப்படவும் தேவையான திறன்களை வழங்குவதாக அமைந்துள்ளது.
கல்வி நிறுவனம்:பிரிட்டிஷ் கவுன்சில் ஆஃப் இந்தியா இந்தப் பாடத் திட்டத்துக்கு ரூ.437 கட்டணம் செலுத்தவேண்டும்.
இந்த சான்றிதழ் படிப்புகளை படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்த பாடத் திட்டமானது மாணவர்களுக்கு கல்வி ரீதியாக பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது ஆராய்ச்சி வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் விருப்பத்தை அவர்களுக்கு வழங்கும். பல்வேறு நிறுவனங்களில் ஆங்கில மொழிப் பயிற்சியாளர்களாக அல்லது பேச்சு ஆங்கிலப் பயிற்றுவிப்பாளராக வேலைவாய்ப்பைப் பெற மாணவர்களுக்கு இந்தப் பாடத்திட்டங்கள் உதவும்.
செய்தித்தாள்கள் அல்லது பிற நிறுவனங்களில், ஆசிரியராகவோ, துணை ஆசிரியராகவோ அல்லது பிற பதவிகளிலோ பணியாற்ற உதவும். மாணவர்கள் பிபிஓ நிர்வாகிகள், சுற்றுலா வழிகாட்டிகள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அதற்குச் சமமான நிலைகளில் பணியாற்றலாம்.
இதைப்பயிலும் மாணவர்கள் அரசு முதல் தனியார் துறைகள் வரை பல்வேறு தொழில்களில் வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.
உள்ளடக்க எழுத்தாளர், பிஆர் மேலாளர், ஆசிரியர், பேராசிரியர், பணியாளர் நல மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மேலும் ஊதியமும் சராசரியாக ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பெற முடியும். மேலும் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் இருந்தால் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை பெற முடியும்.


Click it and Unblock the Notifications












