உலகை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் நான்கு இந்தியர்கள்!

உலகின் முன்னணி நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வெறும் இந்தியர்கள்.

By Gowtham Dhavamani

அடோப், கூகிள், மைக்ரோசாப்ட் மற்றும் பெப்சி இந்த நான்கு நிறுவனங்களிலும் இந்தியர்கள் தலைமை நிர்வாக அதிகாரிகளாக உள்ளனர். பொறந்த நாட்டுல இருக்கற வாழ்க்கையை விட்டுட்டு முன்ன பின்ன தெரியாத இடத்துல போய் படிச்சு இன்னைக்கு அவுங்க வாழ்க்கையை மத்தவங்க படிக்கற அளவுக்கு வளர்ந்து நிக்கறாங்க. அவுங்க கதைகள படிக்கறப்போ ஜெயிக்க தேவையான சூழ்நிலைகளை நாம தான் உருவாக்கணும்னு புரிஞ்சுக்க முடியும்.

சுந்தர் பிச்சை!

சுந்தர் பிச்சை!

படிப்புல மட்டும் கெட்டி இல்ல, பள்ளியோட கிரிக்கெட் டீம் கேப்டனும் நம்ம சுந்தர் பிச்சை தான். ஐஐடி கரக்பூர்ல இருந்து உலோகவியல் துறைல பட்டம் வாங்கிட்டு வெளில வந்தப்போ, ஸ்டாண்போர்ட் பல்கலைக்கழகத்துல போய் படிக்க அவருக்கு உதவித்தொகை கிடைச்சுது. அங்க பொருள் அறிவியல் (மேட்டீரியல் சைன்ஸ்) & குறைகடத்தி இயற்பியல் (செமிகண்டக்டர் பிசிக்ஸ்) படிக்கப் போனாரு. அந்த ஊருக்கு போக விமான பயணச் சீட்டுக்கே அவுங்க பெத்தவங்க பணம் முழுசும் முடிஞ்சுபோச்சு.

கூகுள்!

கூகுள்!

ஆனா பிச்சை படிப்பை முழுசா முடிக்கல. தன்னோட பீஎச்.டீ படிப்ப பாதில விட்டுட்டு, "அப்பளைட் மேட்டிரியல்ஸ்" கிற நிறுவனத்துல பொறியாளராவும், பொருள் மேலாளராவும் சேந்தாரு. 2002ல வார்ட்டான் பள்ளில இருந்து மேலாண்மை பட்டம் வாங்கிட்டு, மேக்கின்சி நிறுவனத்துல மேலாண்மை ஆலோசகரா சேந்தாரு. அங்க தன்னோட சக ஊழியர் ஒருத்தர கூகிள் நிறுவனத்துக்கு வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லி இவரு தடுக்க, கடைசில அந்த வேலை தனக்கு எவளோ ஏத்ததுன்னு இவருக்கு புரிஞ்சுது.

ஷாந்தனு நாராயண்!

ஷாந்தனு நாராயண்!

ஹைட்ரபாத் பப்ளிக் பள்ளியில் படித்து, ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் நாராயண். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்து மேலாண்மை பட்டமும் , ஒஹாயோவில் உள்ள பௌலிங் க்ரீன் ஸ்டேட் பல்கலையில், கணினி துறையில் எம்.எஸ் பட்டமும் பெற்றார்.

Image Courtesy: Adobe

 

அடோப் சிஸ்டம்ஸ்!

அடோப் சிஸ்டம்ஸ்!

அதன் பிறகு ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றினார். அடுத்து சிலிக்கான் கிராபிக்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு, "பிக்ட்ரா" என்ற நிறுவனத்தை துவங்கினார். இணையத்தில் புகைப்படங்களை பகிரக்கூடிய நிறுவனம் அது. பின்னர் அந்நிறுவனத்தை அடோபிடம் 1998ல் விற்க முயற்சித்த போது, அதன் தலைமையதிகாரி ஆகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 2005ல் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பதவிஉயர்வு பெற்றார்.

இந்திரா நூயி!

இந்திரா நூயி!

சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, ஐஐஎம் கொல்கத்தாவில் இருந்து மேலாண்மை பட்டம் பெற்றார் நூயி. படிப்பு முடிச்சு ஜான்சன் & ஜான்சன் மற்றும் மேட்டூர் பீயர்ட்ஷெல் நிறுவனங்கள்ல வேலைபார்த்தார். அதன் பின்பு வெளிநாடு சென்று எம்.எஸ் படிக்க முடிவு செய்தார். அவுங்க பெத்தவங்க நம்ம பொண்ணுக்கு எங்க வாய்ப்பு கிடைக்க போகுதுன்னு அவநம்பிக்கையோட தைரியமா விண்ணப்பிக்க சொன்னாங்க.

பெப்சி!

பெப்சி!

ஆனா விதி வேற விதமா முடிவு எடுத்துச்சு. ஏல் பல்கலைக்கழகத்துல உதவித்தொகையோட படிக்க வாய்ப்பு தந்துச்சு. படிச்சு முடிச்சு முதல் நேர்காணல்ல போட ஒரு சூட் அவுங்களுக்கு தேவைப்பட்டுச்சு. அத வாங்க ஒரு விடுதில இரவு நேர வரவேற்பாளரா வேலைப்பாத்தாங்க. ஆனா அந்த நேர்காணல்ல அவுங்க நிராகரிக்கப் பட்டாங்க. அடுத்த நேர்காணல்ல புடவை உடுத்தி போனாங்க. என்ன ஆனாலும் பாத்துக்கலாம்னு. அந்த வேலை அவுங்களுக்கு கிடைச்சுது. 1994ல பெப்சி நிறுவனத்துல நூயி சேர்ந்தாங்க. அவுங்க சேந்ததுக்கு அப்பறம் புதுப்புது துறைகள்ல பெப்சி காலடி எடுத்து வெச்சுது. 2001ல தலைமை நிதி அதிகாரியாவும், 2006ல தலைமை நிர்வாக அதிகாரியாவும் உயர்ந்தாங்க.

சத்யா நாதெள்ளா!

சத்யா நாதெள்ளா!

அடோப் தலைவர் நாராயண் போன்று நாதெள்ளாவும் ஹைதராபாத் பப்லிக் பள்ளியில படிச்சவரு. அப்பறம் மணிப்பால் தொழில்நுட்ப கல்லூரில மின் பொறியியல் துறைல பட்டம் முடிச்சாரு. சின்ன வயசுல கிரிக்கெட் வீரனாகணும்னு கனவு இருந்தாலும், அறிவியல் மேல இருந்த காதல் கடைசில ஜெயிச்சுது. அமெரிக்கா போய் எம்.எஸ் பட்டம் முடிச்சாரு. 1990கள்ல சன் மைக்ரோசிஸ்டம்ஸ்ல வேலைக்கு சேந்தாரு.

அதிகாரி மைக்ரோசாப்ட்!

அதிகாரி மைக்ரோசாப்ட்!

1992ல மைக்ரோசாப்ட்ல வேலைக்கு சேந்து, வாரக்கடைசில சிகாகோ பல்கலைக்கழகத்துல மேலாண்மை படிப்பும் முடிச்சாரு. அலுவலகம் வாஷிங்டன்ல பல்கலைக்கழகம் சிகாகோல இருந்தாலும் பறந்து பறந்து படிச்சாருன்னு சொல்லலாம். 2014ல பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட்ல நாதெள்ளாவுக்கு வழிகாட்டவே மீண்டும் இணைஞ்சாறுன்னு சொல்லலாம். அதன் பிறகு மைக்ரோசாப்டோட மூன்றாவது தலைமை நிர்வாக அதிகாரியா நாதெள்ளா நியமிக்கப்பட்டாரு. அவுரு ரொம்பவும் விரும்புன கிரிக்கெட் அவருக்கு ஒரு அணியா வேலை செய்யறதை கத்துக்குடுத்துருக்கு. இப்போ அதுக்கான பயனும் தெரிஞ்சுட்டு இருக்கு.

 

 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Career Story of Top Four Indian CEOs of the World!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X