கலாய்க்கிறோம் காம்பியரிங் பண்றோம்...நீங்களும் ரேடியோ ஜாக்கி ஆகலாம்!

Posted By: Kani

ஃபன்னாவும் இருக்கனும் அதே சமயம் கை நிறைய சம்பளமும் வேணும், ஆபிஸில் வேலையை கேட்டுக்கோடி... உறுமி மேளம்... போட்டுக்கோடி கோப தாளம்... என பாட்டுக் கேட்டுக்கொண்டே வேலை செய்ய வேண்டும் என விரும்புவரா நீங்கள்? உங்களுக்கான துறைதான் ரேடியோ ஜாக்கி.

இப்போது ரேடியோ ஜாக்கி என்பது மிகப் பிரபலமான, பலராலும் தேர்வு செய்யப்படும் வேலைவாய்ப்பாக கருதப்படுகிறது. ஆன் ஏரில் வணக்கம் சென்னை... நீங்க கேட்டுக்கிட்டு இருக்கறது...' என்ற தொடங்கி குட் நைட் டியுட். வி வில் மீட் டுமாரோ... பை பை வரை உங்களது குரல் உலகம் முழுவதும் வானம்பாடியாக வலம்வரும்.

இளைய தலைமுறைக்கு ரேடியோ துறை பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது, தனியார் எப்.எம்., தொடங்கி பள்ளி, கல்லூரி, என பட்டி தொட்டி எங்கும் பல்வேறு இடங்களில் இதற்கான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

நாம் சிந்திக்கும் அல்லது நம்மை சிந்திக்க வைக்கும் ஆக்கப்பூர்வமான எந்தவிதமான யோசனைகளுக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கும் ஒரு துறை எது என்றால் அது இதுதான்.

என்ன வேணலும், எப்படி வேணலும் பேசலாம், ஆன எக்குத்தப்பா பேசினா... அதுக்கு நிர்வாகம் பொறுப்பாகாது. ஜாலியான ராஜதந்திரம் இருந்தால் போதும் மக்களை மகிழ்விப்பது எளிது.

திறமைகள்:

நல்ல குரல் வளமும், பேச்சுத்திறனும், உச்சரிப்பும் சரியாக இருந்தால் மட்டும் போதும். நாம் பெரும்பாலும் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளைதான் ரேடியோ ஜாக்கிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் சரளமாக பேச தெரிந்தால் மட்டுமே போதுமானது.

அதே சமயம் மக்களை மகிழ்விக்கும் வகையில் பொழுதுபோக்கு துறைக்கு தேவையான திறன்களை மேம்படுத்திக் கொள்வதில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.

 

வேலை வாய்ப்பு:

சேட்டிலைட் ரேடியோ ஜாக்கி, ஸ்போர்ட்ஸ் ரேடியோ ஜாக்கி என ஜாக்கியில் தொடங்கி அனுபத்தின் அடிப்படையில் ரேடியோவை நிர்வாகம் செய்யும் பொறுப்பு வரை கிடைக்கும். இசையில் ஆர்வமும் ரேடியோவில் நாட்டமும் இருந்தால் வானம் தன் எல்லை. இப்போது எப்.எம்., சேனல்கள் அதிகரித்து வருவதால் ரேடியோ ஜாக்கிகளுக்கு வாய்ப்புகள் அதிகம்.

 

சம்பளம்:

ஆரம்பத்தில் மாதம் 15000 என தொடங்கி, பெயர் பெற்ற பிறகு நீங்களே சம்பளத்தை நிர்ணயிக்கலாம். தொலைக்காட்சி மற்றும் எஃப்.எம். நிறுவனங்களில் நிகழ்ச்சியை தொகுக்கும் தொகுப்பாளர் ஆகலாம். இவை தவிர சினிமாத் துறையிலும் இவர்களுக்கான வாய்ப்பு அதிகம்.

 

எங்கு படிக்கலாம்?

இதற்காக பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் கம்யூனிகேஷன் அண்ட் ப்ராட்காஸ்டிங் சார்ந்த படிப்புகள் உள்ளது.

சில கல்வி நிறுவனங்களில் ரேடியோ ஜாக்கிகளுக்கு சிறப்பு பாடப்பிரிவுகளும் உள்ளன. இரண்டு மாத சர்ட்டிபிகேட் கோர்ஸில் இருந்து ஒரு ஆண்டு முதுநிலை படிப்பு வரை பல பிரிவுகளில் இது வழங்கப்படுகிறது.

 

படிப்புகள்:

 

 • சர்டிஃபிகேட் கோர்ஸ் இன் ரேடியோ ஜாக்கிங் (CRJ)
 • சர்டிஃபிகேட் கோர்ஸ் இன் அனோன்ஸிங், பிராட் காஸ்டிங், காம்பியரிங், டப்பிங் (ABCD)
 • சர்டிஃபிகேட் கோர்ஸ் இன் ரேடியோ புரெடெக்‌ஷன் ப்ரோகிராம்
 • டிப்ளமோ இன் ரேடியோ ஸ்டேஷன் ஆபரேஷன்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்
 • டிப்ளமோ இன் ரேடியோ மேனேஜ்மென்ட்
 • டிப்ளமோ இன் ரேடியோ ஜாக்கிங் (DRJ)
 • டிப்ளமோ இன் ரேடியோ ப்ரோகிராமிங் அண்ட் மேனேஜ்மென்ட் (DRPM)
 • போஸ்ட் கிராஜிவேட் டிப்ளமோ இன் ரேடியோ ப்ரோகிராமிங் அண்ட் மேனேஜ்மென்ட் (PGDRM)

 

கல்வி நிறுவனங்கள்:

 • நேஷனல் காலேஜ் ஆப் மீடியா அண்ட் கம்யூனிகேஷன்- சென்னை
 • விண்ட் வேர்ல்ட் ஆடியோ மீடியா அண்ட் மியூசிக் அகாடமி-பெங்களூரு
 • போஸ்ட் கிராஜிவேட் டிப்ளமோ இன் ரேடியோ அண்ட் டி.வி. ஜர்னலிஸம் புதுதில்லி
 • டிபார்ட்மெண்ட் ஆப் பிலிம் டிவி அண்ட் அனிமேஷன் ஸ்டடிஸ், பாரதிய வித்யா பவன்- புதுதில்லி
 • நேஷனல் இன்ஸ்டியுட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்-புதுதில்லி

 

 'கொஞ்சம் டைமிங் கொஞ்சம் ரைமிங்' போதும் கோட் சூட் போட்டு நீங்களும் ஆங்கரிங் பண்ணலாம்!

English summary
Career in Radio Jockey:Step-by-step guide

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia