'களவும் கற்று மற' கை நிறைய சம்பாதிக்க 'எத்திக்கல் ஹேக்கிங்' பெஸ்ட் சாய்ஸ்!

Posted By: Kani

ஆறாம் விரலாகி வரும் மெபைல் போனில் உள்ள அம்சங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்கள், இமெயில், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற இணைய சம்மந்தமான எல்லா விஷயங்களுக்குமே 'பாஸ்வேர்ட்' என்பது முக்கியமான ஒன்று.

இன்று உலகளவில் பாஸ்வேர்ட் ஹேக்கிங் என்பது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. பெருகி வரும் 'சைபர்' குற்றங்களை கணக்கிடும் போது இதை தடுப்பதற்கான வல்லுநர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். அப்படிப்பட்ட வல்லுனர்களை உருவாக்கும் படிப்புதான் இன்டெர்நெட் செக்யூரிட்டி என்று அறியப்படும் 'எத்திக்கல் ஹேக்கிங்'.

ஹேக்கிங் படிப்பதால் நிஜ ஹூரோவாக வலம் வரும் வாய்ப்பு கிடைப்பதால், இளைஞர்கள் மத்தியில் எத்திக்கல் ஹேக்கிங் தொடர்பான படிப்புகளுக்கு தொடர்ந்து ஆர்வம் அதிகரித்து வருகிறது.

பணி என்ன?

எத்திக்கல் ஹேக்கர்களின் பணி என்பது, இணையத்தில் ஒரு தவறு நடப்பதற்கு முன்பாகவே, அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, இணையவழி மற்றும் கணினி வழி நமது ரகசியங்கள் திருடு போகாத வண்ணம், சரியான முறையில் ஆராய்ந்து பாதுகாப்பதாகும்.

பல்வேறு இணையக் கணக்குகளை இருந்த இடத்தில் இருந்தே உடைத்து அவற்றின் கடவுச்சொல்லைக் லாவகமாகக் கைப்பற்றும் 'ஹேக்கர்ஸ்' எல்லா நாடுகளிலும் உண்டு.

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதிற்கேற்ப அவர்கள் கையாளும் அதே யுத்தியை அடிப்படையாகக் கொண்டு இணையப் பாதுகாப்பை உறுதி செய்பவர்கள்தான் 'எத்திக்கல் ஹேக்கர்ஸ்'.

 

வேலை வாய்ப்பு:

பிரபல முன்னணி நிறுவனங்கள் வங்கிகள் உட்பட பலவும் தங்களது இணையப் பாதுகாப்பின் தரத்தினை அறிந்துகொள்ள எத்திக்கல் ஹேக்கர்ஸை 'தகவல் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்' என்ற பெயரில் பணிக்கு அமர்த்தி வருகின்றன.

பொதுவாக இவர்கள் பாதுகாப்புத்துறை தொடங்கி வங்கி, ஐடி நிறுவனங்கள், கல்லூரி, போன்ற பல்வேறு இடங்களில் பணிவாய்ப்புகள் காத்துக்கொண்டிருகின்றன.

 

ஹேக்கர் ஆவது எப்படி?

+2 வில் சயின்ஸ் குரூப் முடித்து பின் பிஎஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் அல்லது பிசிஏ, ஐடி ஏதேனும் ஒன்றில் டிகிரி முடித்த பின் இதற்கென உள்ள சிசிஎன்ஏ, சிஇஎச், எஸ்சிஎன்எஸ், சிபிடிஇ, சிஐஎஸ்எஸ்பி போன்ற சான்றிதழ் படிப்புகளை படிக்கலாம்.


அல்லது +2 முடித்த பின் நேரடியாகவும் இந்த வகையான படிப்புகளை படிக்கலாம்.

அடிப்படை தகுதிகள் என்ன?

1. ஓஎஸ் என்றழைக்கப்படும் விண்டோஸ், லினக்ஸ், உபுண்டு, பயர் பாக்ஸ் போன்ற இயங்குதளங்களை கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.

2. கம்யூட்டர் மொழிகள் என்றழைக்கப்படும் ஜாவா, சி,சி++, பைத்தான் போன்றவைகளில் குறைந்த பட்ச புரிதல் அவசியம்.

3. இதற்கென சான்றிதழ்கள் படிப்புகள் எதுவும் தேவையில்லை. முழுமையான ஈடுபாடு மட்டுமே போதுமானது.

4. டிகிரி கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் முடித்திருந்தால் இதைக் கற்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் எளிதாக இருக்கும்.

 

படிப்புகள் என்னென்ன?

இன்பர்மேஷன் செக்யூரிட்டி மற்றும் சிஸ்டம் மேலாண்மையில் முதுநிலை டிப்ளமோ படிப்பு சைபர் பாரன்சிக்ஸ் மற்றும் இன்பர்மேஷன் செக்யூரிட்டியில் எம்.எஸ்சி., படிப்பு, சைபர் செக்யூரிட்டி மற்றும் இன்பர்மேஷன் செக்யூரிட்டியில் எம்.டெக்., படிப்பு வழங்கப்படுகிறது.

என்ஜினிரிங், எம்எஸ்சி கணிதம், எம்சிஏ முடித்தவர்கள், எம்இ., ஐடி படிப்பில் எத்திக்கல் ஹேக்கிங் பிரிவில் சேர்ந்து படிக்கலாம். தற்போது பல்வேறு இடங்களில் பொறியியல் கல்லூரிகளில் இந்த வகையான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

 

பயிற்றுவிக்கப்படும் இடங்கள்:

அலகாபாத் ஐஐடி-காஜியாபாத்

ஐஎம்டி-மும்பை

இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி-சண்டிகர்

எத்திக்கல் ஹேக்கிங் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்- புது தில்லி

இன்ஸ்டிடியூட் ஆஃப் எத்திக்கல் ஹேக்கிங் அன்ட் பாரன்சிக்ஸ்-ஒடிசா இணையதள முகவரி 

இந்தியன் ஸ்கூல் ஆஃப் எத்திக்கல் ஹேக்கிங்-கொல்கத்தா-இணையதள முகவரி

ஈசி கவுன்சில்- நாட்டின் பல்வேறு இடங்களில்-இணையதள முகவரி

சான்றிதழ் படிப்பு:

அன்கிட் படீயா சர்டிபைடு எத்திக்கல் ஹேக்கர்-இணையதள முகவரி

அரிஸ்னாஇன்போடெக்-இணையதள முகவரி

இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி-இணையதள முகவரி 


கியூஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் நாலேஜ்-இணையதள முகவரி

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைக்கழகம் உள்ளிட்டவை எத்திக்கல் ஹேக்கிங்கிற்காக தனியாகப் பல்வேறு வகையான படிப்புகளை வழங்குகின்றன.

பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆன்லைனிலும் பயிற்சி வகுப்புகளை வழங்குகின்றன. கோடைகால பயிற்சி வகுப்புகளும் உண்டு.

 

நுழைவுத் தேர்வுகள்:

இன்பர்மேஷன் செக்யூரிட்டி பிரிவில் எம்.டெக்., அல்லது எம்.எஸ்சி., படிப்பில் சேர, பெரும்பாலும் கேட் எனப்படும் நுழைவுத்தேர்வே தகுதியான ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இதைத்தவிர்த்து ஈசி கவுன்சில் எனப்படும் நிறுவனம் ஆண்டுதோறும் சான்றிதழ் பயிற்சிக்கான தேர்வை ஆன்லைன் வாயிலாக நடத்துகிறது.

இணையதள முகவரி

 

 

ஊதியம்:

அனுபத்தை பொறுத்து சம்பள விகிதம் மாறுபடும் குறைந்த பட்ச ஊதியமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 கோடி வரை ஊதியமாக பெறலாம்.

 

கற்றுக்கொள்வதினால் என்ன பயன்?

உலகெங்கும் விரிந்துள்ள இணையதலைமுறையிடையேயான இணையப் பாதுகாப்பினை மேம்படுத்தவும் சைபர் குற்றங்களை தடுத்து நிறுத்தவும் முடியும்.

நினைத்த சம்பளம் பெறலாம். விரும்பி படித்தல் மட்டுமே சாதிக்க முடியும். கற்றலில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.

முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் பணிபுரிலாம். எப்போதும் பணிசார்ந்த தொடர்புடையவர்களின் நட்பு வட்டத்தில் இருப்பது புதிய தொழில்நுட்பம் மற்றும் கூடுதலாக கற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும்.

 

English summary
Career Opportunities in Ethical Hacking

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia