மைக்கேல் ஜாக்‌சனாகணுமா...? உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை உங்களுக்கான கல்லூரிகள்!

Posted By: Kani

நமது நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் இந்த உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்வது நடனம் என்றால் அது மிகையாகது. கலாச்சாரத்தைப் பின்பற்றுவது பெருமைக்குரியது மட்டுமல்லாமல், அது என்றைக்கும் நமக்கு சமுதாயத்தில் முன்னுரிமையை பெற்றுக்கொடுக்கும்.

அந்த வகையில் தனிப்பெருபான்மையுடன் கலைத்திறன் சார்ந்தோர்களின் தாகத்தை தவிற்பதற்காக நாட்டின் பல்வேறு இடங்களின் நடனம் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

கிளாஸிகல் டான்ஸ் பயிற்றுவிக்கப்படும் கல்லூரிகள்

பயிற்றுவிக்கப்படும் இடம் இணையதள முகவரி
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், உ.பி. www.bhu.ac.in 
பெங்களூரு பல்கலைக்கழகம், கர்நாடகாwww.bangaloreuniversity.ac.in
சங்கீத் நாதக் அகாடமிwww.sangeetnatak.gov.in/
பாரதியார் பால்கலைக்கூடம், புதுச்சேரிpk.puducherry.gov.in
பாரதி வித்யா பவன், பெங்களூருwww.bhavankarnataka.com
கந்தர்வா மகாவித்தியாலயம், தில்லிwww.gandharvamahavidyalayanewdelhi.org
அரசு சாரதா சங்கீத கலாசலா, ஆந்திர பிரதேசம்www.apculturedept.com/
அரசு இசை மற்றும் நடனக் கல்லூரி, ஆந்திர பிரதேசம்www.apculturedept.com/
நாலந்தா நடன ஆராய்ச்சி மையம்www.nalandadanceeducation.com

தனியார் நடனப்பயிற்சி மையங்கள்

பயிற்றுவிக்கப்படும் இடம் இணையதள முகவரி
ஹிருஷிகேஷ் - தற்காலிக நடனம் மையம், புணேwww.hrishikeshpawar.com 
அட்டகாலாரி, பெங்களூருwww.attakkalari.org
தர்பானா அகாடமி, ஆமதாபாத்www.darpanaacademy.blogspot.in
நிருத்தூரிய, பெங்களூருwww.nritarutya.com
காந்தம் மையம் நடனம் மற்றும் இசை, அகமதாபாத்www.kadamb.org
நாடக கலை ஆராய்ச்சிக்கு ஆதிஷ்தி ஆய்வகம்adishaktitheatrearts.com
கேடி டான்ஸ் மன்றம்www.gatidance.com

மார்டன் டான்ஸ் மற்றும் பிட்னஸ் பயிற்சி பயிற்றுவிக்கப்படும் பள்ளிகள்

பயிற்றுவிக்கப்படும் இடம் இணையதள முகவரி
ஷியாமக் - ஃப்ரீஸ்டைல், எக்ஸ்பிரிமெண்டல், பாலிவுட்http://www.shiamak.com/ 
ஆல் இந்தியா டான்ஸ் ஸ்போர்ட் ஃபெடரேஷன் - காம்பீடிட்டிவ் ஜாஸ், சல்சா, சம்பா, ஜீவ்www.indiandancesport.org
டெரன்ஸ் லூயிஸ் டான்ஸ் அகாடமி - ஃப்ரீஸ்டைல், எக்ஸ்பிரிமெண்டல், பாலிவுட்www.terencelewis.com
 ஸம்பு -பிட்னஸ்www.zumba.com

டான்ஸ்

நடனம் என்பது ஒரு எல்லைக்குள் வரையறுக்க முடியாத கலையாகும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான நடனம் அந்தந்த கலச்சாரத்திற்கு ஏற்ப ஆடப்பட்டு வருகிறது.

 

 

பண்பாடு

இவை அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல், பழக்க வழக்கங்கள், மொழி, பண்பாடு, வழிபாட்டு முறைகளை பிரதிபலிப்பதாக விளங்குகிறது.

பரதநாட்டியம்

பரதநாட்டியம் போன்ற நடனங்கள் பலவகையான கலை நுணுக்கங்களை தன்னுள்ளே கொண்டவையாக உள்ளன.

படிப்புகள்

இந்த வகையான படிப்புகள் கலைத்திறன் கொண்டவர்களை பெரிதும் ஊக்குவிப்பதோடு, பண்பாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கின்றன. இவை பற்றி பெரும்பாலான மாணவர்களுக்கு தெரிவதில்லை.

நடன கலைஞராக தகுதி

சிறந்த நடன கலைஞராக உடல் மொழி, மிகவும் அவசியம். தற்போது பல பல்கலைக்கழகங்களில் நாட்டுப்புற நடனங்கள் முதல் மேற்கத்திய நடனம் வரை கற்றுத்தரப்படுகிறது.

பயிற்சிகள்

நடனக்கலை மீது ஆர்வம் கொண்ட மாணவர்களுக்காக, கல்லூரிகளையும் தாண்டி பல்வேறு தனியார் அமைப்புகள் கிராமிய நடனம் முதல் மேற்கத்திய நடனம் வரை ரூ.15,000 முதல் 50,000 வரை பல்வேறு வகையான பட்டம், மற்றும் பட்டையப்படிப்புகளை வழங்கி வருகின்றன.

வேலை வாய்ப்பு

  • சினிமோட்டோ கிராபர்
  • வெட்டிங் கோரியோகிராஃபர் 
  • டான்ஸ் ஸ்டுடியோ
  • விஷ்வல் ஆர்டிஸ்ட்
  • டான்ஸ் தெரபிஸ்ட்
  • பிட்னஸ் ட்ரெய்னர்
  • நடன ஆசிரியர்

சம்பளம்

முழுவதுமாக பயிற்சி முடித்த பின் ஒரு நடன நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேர சம்பளமாக ரூ.400 முதல் 50,000 பெற முடியும்.

பல்வேறு வகையான நடனங்களை கற்றுக்கொள்ளும் போது பல நாடுகளில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். நடனக் கலைஞராக பணியாற்ற முக்கியமான தேவை பல ஆண்டுகள் அர்ப்பணிப்பு, பொறுமை மிக அவசியம்.

வகைகள்

பரத நாட்டியம் மட்டுமே நடனம் என்றிருந்த நிலை மாறி, 'கிளாசிக்கல், போக், வெஸ்டர்ன்' போன்ற நடனத்தை கற்று, எதிர்காலத்தில் சிறந்த, 'டான்சர்' ஆக வரவேண்டும் என்ற ஆசை பலரிடமும் எழுந்துள்ளது.

பயன்கள்

தினமும் நடன பயிற்சி செய்வதால், குண்டான குழந்தைகளின் உடல் எடை குறைக்க முடியும். 50 வயதிலும், 30 வயது போல் இளமையாகவே இருக்க உதவுவதோடு, குழந்தைகள் கவனச் சிதறல் இன்றி, மனதை ஒருநிலைபடுத்த முடியும்.

வெளிநாடு டான்ஸ் இன்ஸ்டிடியூட்

 பயிற்றுவிக்கப்படும் இடம்இணையதள முகவரி
அமெரிக்கன் பாலட் தியேட்டர், அமெரிக்காwww.abt.org 
ஜூலியர்ட் ஸ்கூல், யுஎஸ்ஏwww.juilliard.edu
நேஷனல் பெர்பாமிங் ஆர்ட்ஸ் ஸ்கூல் அயர்லாந்www.npas.ie
மார்தா கிரஹாம் சென்டர் ஆஃப் காண்டம்பெரரி டான்ஸ், யுஎஸ்ஏwww.marthagraham.org/
டி மாண்ட்ஃபோர்ட் யுனிவர்சிட்டி, யுகேwww.dmu.ac.uk
 நார்த்திங் ஸ்கூல் ஆஃப் காண்டம்பெரரி டான்ஸ்

www.nscd.ac.uk

English summary
Career Opportunities in dance

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia