ஃபார்மல்ஸுக்கு பாய் பாய் சொல்ல விரும்புகிறீர்களா? உங்களுக்கான துறைதான் டிஜிட்டல் மார்கெட்டிங்!

இணையத்தில் உலாவும்போது, வேடிக்கையான மீம்ஸ்,விடியோவை காணலாம். இதைப்பார்க்கும் போது இதே போல் நீங்களும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதா? உங்களுக்கான துறைதான் டிஜிட்டல் மார்கெட்டிங்

By Kani

பொதுவாக இணையத்தில் உலாவும்போது, சில வேடிக்கையான மீம்ஸ், எரிச்சலூட்டும் விளம்பரம், சில வைரஸ் வீடியோக்கள், சில அற்புதமான வலைப்பதிவுகள், மொபைல் ஆப் போன்றவற்றை நீங்கள் காணலாம்.

இதைப்பார்க்கும் போது இதே போல் நீங்களும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதா? இதற்கு உங்கள் பதில் ஆம் என்றால் உங்களுக்கான துறைதான் டிஜிட்டல் மார்கெட்டிங்.

விளம்பரம் என்பது உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் தங்களது பொருளை விற்க மேற்கொள்ளும் முயற்சிகளில் மிக முக்கியமானது. தொழிலின் அஸ்திவாரம் என்றே சொல்லலாம்.

தொழில் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானது இந்த விளம்பரங்கள்தான். அதை எப்படி இணையத்தில் செய்வது என்பதை கற்றுத்தருவதுதான் டிஜிட்டல் மார்கெட்டிங்.

தற்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி: டிஜிட்டல் மார்கெட்டிங் செய்வதின் நோக்கம் என்ன? இதன் மூலம் எப்படி வருமானம் பெறுவது? இந்தப் பதிவை முழுமையாக படித்து முடித்த மறு நிமிடம் டிஜிட்டல் மார்கெட்டிங் பற்றி உங்களுக்கு ஒரு தெளிவான ஐடியா கிடைக்கும்.

டிஜிட்டல் மார்கெட்டிங் ஏன்?

டிஜிட்டல் மார்கெட்டிங் ஏன்?

  • 2020 ஆம் ஆண்டிற்குள் இந்தியா உட்பட உலக நாடுகளில் உள்ள அனைத்து நிறுவனங்களும் ஆன்லைன் நிர்வாகத்திற்கு மாறும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.
  • தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருவதால், அதற்கேற்றார் போல் தொழில்முறைகளும் மாற்றம் பெற்று வருகின்றன. எனவே தொடர்ந்து டிஜிட்டல் மார்க்கெட்டிங் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  • சமீபத்திய ஆராய்ச்சியின் படி, டிஜிட்டல் பொருளாதாரம் பாரம்பரிய வர்த்தகத்தை விட 10 மடங்கு வேகமாக வளர்ந்து வருகிறது.
  • இதனால் ஆன்லைன் மூலமாக வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் இரு மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
  • இதற்கேற்றார் போல் புரோகிராமிங், எழுத்தாளர், மார்க்கெட்டிங் என பல்வேறு தொழில் வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
  •  

    டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முக்கிய பணிகள்:

    டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முக்கிய பணிகள்:

    டிஜிட்டல் மார்க்கெட்டிங் மேனேஜர்:

    டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் மிகவும் உயர்ந்த நிலை இதுதான் என கூறலாம்.

    மார்க்கெட்டிங் மேனேஜராக குறைந்த பட்சம் 5-7 ஆண்டுகள் அனுபவம் தேவை.

    டிஜிட்டல் மார்க்கெட்டிங் மேலாளர், இயக்குநர், ஒட்டுமொத்த மார்க்கெட்டிங் மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொள்வதோடு, வெப்சைட் டெவலப்மெண்ட் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவர்.

     

    வெப் டெவலப்பர் & வெப் டிசைனர்:

    வெப் டெவலப்பர் & வெப் டிசைனர்:

    அற்புதமான இணையதளங்களை நம் கண்முன்னே காட்டும் பொறுப்பு இவர்களின் பணி. வெப் டெவலப்பர் & வெப் டிசைனர் ஆகிய இரண்டு பணிகளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டது. இருந்தாலும் இரண்டும் இணைந்தால்தான் பயனர்களை கவர்ந்திழுக்கும் வெப்சைட் நமக்கு கிடைக்கும்.

    பொதுவாக வெப் வெப் டெவலப்பர் பணிக்கு ஜாவா ஸ்கிரிப்ட், ஜே-கொரி, ஹச்டிஎம்எல், சிஎஸ்எஸ் போன்ற பணிகளில் அனுபவம் தேவை.

    வெப் டிசைனருக்கு போட்டோசாப், டிரிம்வியூவர், இன்டிசைன் போன்ற டிசைனிங் துறையில் அனுபவமும் விரும்பந்தக்கது.

     

    சோஷியல் மீடியா எக்ஸிகியூட்டிவ் & சோஷியல் மீடியா மேனேஜர்:

    சோஷியல் மீடியா எக்ஸிகியூட்டிவ் & சோஷியல் மீடியா மேனேஜர்:

    சமூக ஊடகத்தில் வேலை என்றால் கேக்கவா வேண்டும். அதேசமயம் ட்வீட் மற்றும் ஃபேஸ்புக்கில் ஏதாவது தவறு செய்யும் பட்சத்தில் அதுவே நம் வேலைக்கு வினையாகிவிடும்.

    இவர்கள் எழுத்தாளர் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தொடர்ச்சியாக இணைப்பில் இருப்பார்கள். ட்ரெண்டிங் செய்திகள் என்ன? தரமான கன்டென்ட் அல்லது வீடியோவை எப்படி உருவாக்குவது.

    சமூக சமூக வலை தளங்களில் வைலராகும் விஷயங்களை கவனிப்பது, அதை எவ்வாறு நிர்வாகத்திற்கு ஏற்ற முறையில் பயன்படுத்துவது போன்றவை இவர்களின் பணி.

    இதற்கு சமூக வலைதளங்களை பற்றிய ஆழ்ந்த அறிவும். சுயமாக சிந்திக்கும் திறனும் அவசியம் தேவை.

     

    எஸ்சிஓ எக்ஸிகியூட்டிவ்:

    எஸ்சிஓ எக்ஸிகியூட்டிவ்:

    ஒரு சரியாக வடிவமைக்கப்பட்ட வெப்சைட் மட்டும் எந்தவிதத்திலும் வருமானத்தை வாரிக் கொடுக்காது. "நல்ல கத்திரிக்காய்க்கு விளம்பரம் தேவையில்லை என்பது பழைய பழமொழி" தற்போது ரேஷன் கார்டில் உள்ள பெயருக்கு ஒரு தளம் என்ற நிலை உருவாகி வருகிறது.

    நமது சேவையை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன் எனப்படும் (எஸ்சிஓ) நிர்வாகிகள் திறம்பட செய்கின்றனர்.

    கூகிள் தேடலில் வெப்சைட் முதல் இடம் பிடிப்பதில் இருந்து எந்த வகையான வார்த்தைகள் மூலமாக யூசர்கள் வெப்சைட்டிற்குள் வருகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது, அது தொடர்பான கீவேர்டுகளை பயன்படுத்த ஆவண செய்வது வரை இவர்களின் பணிதான்.

    எளிதாக கூறவேண்டுமானால் 'எஸ்சிஓ இன்றி அமையாது வெப்சைட்' .

     பிபிசி,எஸ்இஎம் நிபுணர்

    பிபிசி,எஸ்இஎம் நிபுணர்

    பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பல நேரங்களில் பயனுள்ள, சில நேரங்களில் எரிச்சலூட்டும் விளம்பரங்களை காணமுடிகிறதா. அதை உருவாக்குவது தான் இவர்கள் பணி.

    ஒரு விற்பனை பொருளை மக்களிடம் கொண்டு செல்ல, கலை நுணுக்கத்துடன் விளம்பரங்கள் அமைத்தால் மட்டுமே இன்று தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என்பது எழுதப்படாத நியதி.

    சர்ச் இன்ஜின் மார்க்கெட்டிங் (எஸ்இஎம்) நிபுணர் இதற்கு ஏற்றார் போல் நிறுவனத்திற்காக தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் வகையில் நிறைய லீட்களை உருவாக்குகின்றனர்.

    கீவேர்டுகளை வடிவமைப்பது, விளம்பர குழுக்களை நிர்வாகிப்பது, இது தொடர்பான அறிக்கைகளை உருவாக்குதல், விளம்பர மற்றும் கிராபிக்ஸ் போன்ற செயல்திட்டங்களை நிர்வாகிப்பது இவர்களின் பணி.

     

    கன்டென்ட் மார்க்கெட்டர்:

    கன்டென்ட் மார்க்கெட்டர்:

    ஒரு பொருளை வாங்க வேண்டும் என்ற விருப்பம், முனைப்புப் போன்றவற்றை ஏற்படுத்துவதுதான் விளம்பரங்களின் முக்கிய நோக்கம் ஆகும். இதில் முக்கிய பங்காற்றுவது கன்டென்ட்.

    இணையத்தில் ஏற்கனவே வலம் வரும் கன்டென்ட்டைவிட சிறந்ததை எழுதலாம் என்று நீங்கள் நினைத்தால், இது உங்களுக்கான வேலைதான்.


    பெஸ்ட் கன்டென்ட் ரெடி பண்ணுவது அதை எஸ்சிஓ மூலமாக மார்க்கெட்டிங் செய்வது இவர்களின் பணி. இதற்கு சுயமாக சிந்திக்கும் திறனோடு, படைப்பாற்றல், ஆங்கில மொழி அறிவு மிக அவசியம்.

     

    பிற வேலைகள்:

    பிற வேலைகள்:

    டிஜிட்டல் மார்க்கெட்டில் துறையில் பல பதவிகளில் உள்ளன, அவை பெரும்பாலும் நிறுவனம், அவற்றின் தேவைகளை சார்ந்து அமையும். அவற்றில் சில:

    • அனலிட்டிக்ஸ் மேனேஜர்
    • சிஆர்எம் மேனேஜர்
    • இமெயில் மார்கெட்டிங் மேனேஜர்
    • இ-காமர்ஸ் மேனேஜர்
    • டிஜிட்டல் ஏஜென்சி அக்கெளன்ட் டிரைக்டர்
    •  

      எவ்வளவு சம்பாதிக்கலாம்?

      எவ்வளவு சம்பாதிக்கலாம்?

      நீங்கள் மிகவும் எதிர்பார்த்த கேள்விகளுக்கு பதில் இதோ...

      • டிஜிட்டல் மார்க்கெட்டிங் மேனேஜர்: ரூ.4-10 லட்சம்
      • எஸ்சிஓ மேனேஜர்-ரூ.3-7 லட்சம்
      • பிபிசி,எஸ்இஎம் நிபுணர்- ரூ.3-5 லட்சம்
      • வெப் டெவலப்பர் & வெப் டிசைனர்: ரூ.3.5-7 லட்சம்
      • சோஷியல் மீடியா மேனேஜர்: ரூ.3.5-7 லட்சம்
      • கன்டென்ட் ரைட்டர்: ரூ.2.5-5 லட்சம்
      •  

        எங்கு படிப்பது?

        எங்கு படிப்பது?

        இதற்கு எந்தவிதமான படிப்பும் தேவையில்லை விருப்பம் மட்டுமே போதுமானது. இருந்த போதிலும் ஏராளமான வாய்ப்புகள் மிகுந்த இத்துறையில் சாதிக்க துடிக்கும் மாணவர்கள், ‘டிஜிட்டடில் மார்க்கெட்டிங்' தொழில்முறை படிப்பினை மேற்கொள்வதன் மூலம், துறை சார்ந்த அறிவுத்திறன்களையும் மற்றும் மார்க்கெட்டிங் யுத்திகளையும் மெருகேற்றிக் கொள்ளலாம்.

        உலகம் முழுவதும் ஏராளமான பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. பல்வேறு வகையான தனியார் பயிற்சி நிறுவனங்கள் சான்றிதழில் இருந்து பட்டப்படிப்பு வரை வழங்குகின்றன.

        கல்வி நிறுவனங்கள்:
        இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் - மார்க்கெட்டிங் அண்ட் அனலட்டிக்ஸ் பார் இ-காமர்ஸ்
        ஐ.ஐ.எம்.,பெங்களூரு - டிஜிட்டல் மார்க்கெட்டிங் பார் பிசினஸ் குரோத்,
        ஐ.ஐ.எம்., கேலிக்கெட்- இ-காமர்ஸ் அண்ட் இன்டர்நெட் மார்க்கெட்டிங்

        இன்றைய டிஜிட்டல் உலகில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் என்ன படித்தோம் என்பது வேலையை தீர்மானிப்பது இல்லை. என்ன கற்றுக்கொண்டோம் என்பதே தீர்மானிக்கிறது. இத்துறையை பொறுத்தமட்டில் வானமே எல்லை.

         

டிஜிட்டல் மார்க்கெட்டிங் மாணவர்களுக்கு புதிய படிப்பு: ஸ்டாபோர்டுஷையர் பல்கலை. அறிமுகம்..!டிஜிட்டல் மார்க்கெட்டிங் மாணவர்களுக்கு புதிய படிப்பு: ஸ்டாபோர்டுஷையர் பல்கலை. அறிமுகம்..!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Career in Digital Marketing
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X