கத்தியின்றி, ரத்தமின்றி சாதிக்க... பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பெஸ்ட் சாய்ஸ்!

Posted By: Kani

மருத்துவம், இன்ஜினியரிங் துறையில் பல்வேறு வகையான படிப்புகள் உள்ளன. பொதுவாக இன்ஜினிரிங் என்றால் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகள் மட்டுமே பெரும்பாலும் அறிந்து துறைகளாக இருக்கிறது.

இதை தவிர்த்து பல்வேறு வகையான இன்ஜினிரிங் படிப்புகள் கைநிறைய சம்பளத்துடன் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறை குறித்து காணலாம்.

மருத்துவம் மற்றும் உயிரியல் துறையுடன் இணைந்து இன்ஜினியரிங் துறையின் தொழில்நுட்ப உதவியுடன் துல்லியமான செயல்பாடுகளை கொண்ட கருவிகளை வடிமைப்பதே பயோமெடிக்கல் இன்ஜினியரிங்.

இதன் மூலம் உருவாக்கப்படும் தொழில் நுட்பங்களும், (செயற்கை இருதயம், பேஸ்மேக்கர், செயற்கை வால்வுகள், செயற்கை எலும்புகள், கிரையோசர்ஜரி, அல்ட்ராசானிக்) கருவிகளும் மருத்துவர்கள் நோயை துல்லியமாக கண்டறிந்து குணமாக்குவதற்கு உதவுகின்றன.

தற்போதைய மருத்துவ உலகில் அதி நவீன கருவிகளான இசிஜி., இஇஜி., இஎம்ஜி., ரத்த மூலக்கூறுகளை கண்டறியும் சென்சார்கள், சிடி. மற்றும் எம்ஆர் ஸ்கேனர்கள், மெக்கானிக்கல் ரெஸ்பிரேட்டர், கார்டியாக் பேஸ்மேக்கர் போன்ற கருவிகள் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையின் மூலம் வடிவமைக்கப்பட்டவை.

எவ்வளவு பெரிய அறுவை சிகிச்சைகளையும் ரத்தம் இன்றி கத்தியின்றி சாத்தியம் என்றால் அதற்கு காரணம் பயோமெடிக்கல் துறைதான்.

பாடப்பிரிவுகள்:

பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் வேதியல், இயற்பியல், கணிதம், கம்யூட்டர் சயின்ஸ் என பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. எனவே பயோமெடிக்கல் பயில விரும்புவோர் பேசிக் சயின்ஸ் மீது ஆர்வம் கொண்டிருப்பது அவசியம்.

பல்வேறு கல்லூரிகளில் பாடப்பிரிவுகள் முற்றிலும் மாறுபடும் எனவே சிலபஸ் என்றழைக்கப்படும் பாடப்பிரிவுகளை முற்றிலும் படித்து அறிந்த பின் விண்ணப்பிப்பது புத்திசாலித்தனம். பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறை பல்வேறு வகையான உட்பிரிவுகளை கொண்டது.

பயோ இன்ஸ்ட்ருமென்டேஷன்:

இத்துறையானது எலக்ட்ரானிக் உதவியுடன் உரிய அளவுகோலை கொண்டு நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவுகிறது.

பயோ மெட்டீரியல்ஸ்:

மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான செயற்கை உடல் உறுப்புகளை இத்துறை இன்ஜினியர்கள் உருவாக்குகின்றனர்.

பயோ மெக்கானிக்ஸ்:

உயிரியல் மற்றும் மருத்துவத்துறைக்கு மெக்கானிக்கல் அப்ளிகேஷனை பயன்படுத்துவதாகும். இதன் மூலம் எலும்புமுறிவு, பேஸ்மேக்கர் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன.

செல்லுலார் இன்ஜினியரிங்:

மனித உடலில் உள்ள உயிரணுக்கள் தொடர்பான அனைத்தும் அறியலாம்.

டிஸ்யூ இன்ஜினியரிங்:

திசுக்கள் வளர்ச்சி, திசுக்களை பேணுதல் போன்றவற்றின் மூலமாக நோய்களை குணமாக்கலாம். பெரும்பாலும் சிறுநீரக குறைபாடு தொடர்பான நோய்கள் இதன் மூலம் சரி செய்யபடுகின்றன.

ஜெனிடிக் இன்ஜினியரிங்:

மரபு வழிப்பண்பியல் பற்றி அறியலாம்.

கிளினிக்கல் இன்ஜினியரிங்:

மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் மற்றும் பிற உபகரணங்கள் பற்றி விரிவாக பயிலலாம்.

ஆர்த்தோ பீடிக் பயோஇன்ஜினியரிங்:

எலும்பு, நரம்புகள், இணைப்புகள், தசைகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை கண்டறிந்து அதற்கேற்ப செயற்கையான எலும்புகள், இணைப்புகள் தயார் செய்தலை பற்றி விளக்கும் பிரிவாகும்.

நேவிகேஷன் சிஸ்டம்ஸ்:

இத்துறை பயோ இன்ஜினியர்கள் கம்ப்யூட்டர் மென்பொருள் உதவியுடன் மனித உடலின் உறுப்புகளின் டிஜிட்டல் படங்களை உருவாக்குகின்றனர். இம்முறை நவீன லேசர் தொழில்நுட்பங்களில் உதவுகிறது.

இளநிலைப் படிப்புகள்:

பயோ இன்ஜினியரிங் துறையில் பி.இ., பி.டெக். எம்.எஸ், எம்டெக் போன்ற படிப்புகள் உள்ளன. இதைப்பயில பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

படிப்புகள் வழங்கும் தலைசிறந்த கல்லூரிகளின் பட்டியல்:

 • என்ஐடி, ராய்பூர்
 • என்ஐடி, ரூர்கேலா
 • டிஎஸ்இசி, மும்பை
 • டி.ஜே. சங்கவி இன்ஜினியரிங் காலேஜ், மும்பை குஜராத்
 • எஸ்எஸ்என் இன்ஜினியரிங் காலேஜ் (அண்ணா பல்கலைக்கழகம்)
 • பி.எம்.எஸ். இன்ஜினியரிங் காலேஜ், பெங்களூர்
 • விஐடி, வேலூர்
 • மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பெங்களூர்
 • பாரதி வித்யாபீத், புணே
 • பி.எம்.எஸ். இன்ஜினியரிங் காலேஜ், பெங்களூர்
 • எம்.எஸ். ராமையா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பெங்களூரு
 • ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ், புதுடில்லி (www.aiims.ac.in ) 
 • பனாரஸ் இந்து பல்கலைக் கழகம், வாரனாசி, உத்தரபிரதேசம் (www.itbhu.ac.in )

தமிழகத்தில் உள்ள கல்லூரிகள்:

 • பி.எஸ்.ஜி.,காலேஜ் ஆப் டெக்னாலஜி, கோவை (http://www.psgtech.edu )
 • சத்தியபாமா பல்கலைக் கழகம், சென்னை (http://www.sathyabamauniversity.ac.in/ )
 • ஆறுபடை வீடு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை (http://www.avit.ac.in/index.html )
 • ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி, கோவை (www.srec.ac.in/ ) 
 • ராஜராஜேஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை (http://www.rrec.ac.in/courses.htm ) 
 • ஜாதவ்பூர் பல்கலைக் கழகம், கோல்கட்டா (www.jadavpur.edu )

முதுநிலை படிப்புகள்: 

இன்ஜினியரிங் படிப்பில் இசிஇ., இஇஇ., இ அண்டு ஐ படித்தவர்களும் இத்துறையில் பட்ட மேற்படிப்புகளை படிக்கலாம். பி.எஸ்சி. இயற்பியல் படித்தவர்கள் அதில் பட்ட மேற்படிப்புக்குப் பின் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் படித்தும் இந்தத் துறையில் நுழையலாம்.

பயிற்றுவிக்கப்படும் கல்லூரிகள்:

 • ஐஐடி பம்பாய் (எம்டெக் மற்றும் பிஹச்டி)
 • ஐஐடி பிஹச்யு - எம்டெக்
 • ஐஐடி ஹைதராபாத் (எம்டெக் மற்றும் பிஹச்டி)
 • ஐஐடி கான்பூர் (எம்டெக் மற்றும் பிஹச்டி)
 • ஐஐடி கரக்பூர் (எம்.டெக் இன் மெடிகல் இமேஜிங் அண்ட் இமேஜ் அனலிசிஸ்)
 • ஐஐடி மெட்ராஸ் ( எம்டெக் அப்லைடு மெக்கானிக்ஸ் வித் ஸ்பெஷலிஷேஸன் இன் பயோமெடிக்கல் இன்ஜினிரிங் )
 • ஐ.ஐ.எஸ்.சி., பெங்களூர் (இண்டர் பிசினரி பயோ இன்ஜினியரிங் பிஹச்டி)
 • எம்என்ஐடி, அலாகாபாத் (எம்டெக்)
 • என்ஐடி, ரூர்கேலா (எம்டெக் & பிஹச்டி)
 • மானிப்பல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.டெக் இன் பயோமெடிக்கல் இன்ஜினியரிங்) சிஓஇபி ( எம்.டெக் இன் பயோமெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேஷன்)
 • எஸ்சிடிஐஎம்எஸ்டி, திருவனந்தபுரம் (எம்எஸ் மற்றும் பிஹச்டி பயோ இன்ஜினியரிங்) 

வேலை வாய்ப்புகள்:

இந்தவகையான படிப்புகளுக்கு இந்தியாவை விட வெளிநாட்டில் அதிக மவுஸ் உண்டு. ஹெல்த்கேர், ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரியலாம். இதில் பல்வேறு நிலைகளில் பணி வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் பயோமெடிக்கல் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகமாகக் கிடையாது.  

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர், கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டில் இந்த துறைக்கு வரவேற்பு அதிகம். ஜப்பான் மற்றும் சீனா போன்ற பிற நாடுகளும் இந்த துறையில் சிறந்து விளங்குவதோடு வேலைக்கேற்ற சம்பளம் வழங்குகின்றன.

பணி வழங்கும் முண்ணனி நிறுவனங்கள்:

 • எல் அண்ட் டி
 • ஸ்ட்ரைக்கர் குளோபல் டெக்னாலஜி சென்டர்
 • டெலோயிட் கன்சல்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்
 • டெக்ஸாஸ் இன்ரூமென்ட்.
 • பிலிப்ஸ் ஹெல்த்கேர்
 • ஆர்பெஸ் மெடிக்கல்
 • சீமன்ஸ்

இது மட்டுமல்லாது அரசு நிறுவனங்களுக்கு பயோ இன்ஜினியர்கள் தேவைப்படுவதால் நல்ல சம்பளத்தில் வேலை பெறலாம். ஆண்டிற்கு 3 முதல் 3.5 லட்சம் வரை ஊதியமாக பெறலாம். இதுவே வெளிநாட்டில் முற்றிலும் மாறுபடும்.

இந்தியாவில் உள்ள பயோ இன்ஜினியரிங் ஆராய்ச்சி மையங்களின் பட்டியல்:

 • டிபார்ட்மென்ட் ஆப் பயோ சயின்ஸ் ஐ.ஐ.டி பம்பாய், 
 • சென்டர் பார் பயோ மெடிகல் இன்ஜினியரிங் ஐஐடி,தில்லி. 
 • ஸ்கூல் ஆப் பயோ மெடிகல் இன்ஜினியரிங் ஐஐடி,பிஎச்யு
 • டிபார்ட்மென்ட் ஆப் பயோ மெடிகல் இன்ஜினியரிங் ஐஐடி ஹைதராபாத்,  
 • டிபார்ட்மென்ட் ஆப் அப்ளைடு மெக்கானிக்ஸ், சென்னை ஐஐடி
 • டிபார்ட்மென்ட் ஆப் பயோமெடிக்கல் இன்ஜினியரிங், ஐஐடி ரோபர்
 • டிபார்ட்மென்ட் ஆப் பயோ இன்ஜினியரிங், சிஎம்சி, வேலூர்
 • இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ், பெங்களூர்
 • ஜெனரல் எலக்ட்ரிக் குளோபல் ரிசர்ச், பெங்களூர்

English summary
Career in Biomedical Engineering

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia