எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க விருப்பமா? சாதிக்கலாம் ஃபேஷன் டெக்னாலஜி துறையில்...

Posted By: Kani

இப்போ எல்லாமே ஃபேஷன்தான், நகைக்கு ஏற்ற உடை, உடைக்கு ஏற்ற ஷூ என மாறி வரும் நவீன உலகத்தில் நமக்கென்று ஒரு தனி ஸ்டைல், வேண்டும் என நினைப்பவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்கான துறைதான் ஃபேஷன் டிசைனிங்.

தரமான சிந்தனை, தெளிவான சந்தை நிலவரம், க்ரியேட்டிவிட்டி, ஆர்வம், தேடல், மக்களின் மனநிலை போன்றவற்றை துல்லியமாக அறிய முடிந்தால் இத்துறையில் சாதிப்பது மிக எளிது.

பொதுவாக ஃபேஷன் டிசைனர்கள் லேட்டஸ்ட் ட்ரெண்ட், அட்ராக்டிவ் மாடல், மார்கெட் நிலவரம், சீஷன், மாறிவரும் மக்களின் மனநிலை போன்றவைகளை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

டிசைனிங் படிப்புகள் மற்றும் அதன் வேலைவாய்ப்புகள் பற்றி பலருக்கும் தெரிவதே இல்லை. அதனால்தான், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளுக்கு படை எடுக்கிறார்கள்.

ஃபேஷன் டிசைனர் வேலை என்ன?

ஜீன்ஸ், ஜாக்கெட்டுகள், குழந்தைகள் உடை, ஆண், பெண் நைட்வேர், விளையாட்டு உடை என எதை எடுத்தாலும் ஆடை தயாரிப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஃபேஷன் டிசைனர்தான்.

இவர்களின் பணியானது புதிய மாடல், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, தன் சிந்தையில் தோன்றும் புதிய யோசனைகளுக்கு பேப்பரில் வடிவம் கொடுத்தல். தொடர்ந்து இதை மாடல்களுக்கு அணிவித்து அதன் சாதக பாதகங்களை அறிவது, எதேனும் குறைகள் இருப்பின் அதை சரிசெய்து பின், முழு வடிவமைப்பையும் முடித்து பின்னர் இறுதியாக துணியாக வடிவமைப்பது.

என்னென்ன திறமைகள் தேவை:

 • கிரியேட்டிவ் திங்
 • நிறங்களின் வேறுபாடு குறித்த ஆழ்ந்த அறிவு.
 • முப் பரிமாணங்களில் சிந்திக்கும் திறன்.
 • நல்ல பேச்சுத்திறமை
 • ஒத்துப்போகும் திறன்.
 • வியாபார தந்திரம்.
 • புத்திசாலித்தனம்.
 • ஓவியத்தில் ஆர்வம்.
 • கற்பனைகளை மனக்கண்ணில் காட்சிப்படுத்தும் திறன்.
 • ஃபேஷன் கனவு.
 • வாடிக்கையாளர்களின் மன ஓட்டங்களை புரிந்துகொள்ளும் திறன்.

வேலை வாய்ப்புகள்:

உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் ஃபேஷன் துறை மாணவர்களுக்கு பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

 • ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில்.
 • சில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில்.
 • ஃபேஷன் போட்டோகிராஃபி. 
 • ஃபேஷன் ஜர்னலிசம்.
 • ஃபேஷன் கொரியோகிராஃபி. 
 • அரசு மற்றம் அரசு சார்ந்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சந்தைப்படுத்தும் நிறுவனங்களில் பணியாற்றலாம்.
 • பேட்டர்ன் மேக்கிங்.
 • பேஷன் ஷே புரோகிராம் நடத்துதல். பேஷன் பப்ளிஷ்சர்.
 • சினிமா உடை வடிவமைப்பாளர்.
 • பேஷன் டிசைன் ஆசிரியர்.
 • ஃபேஷன் ஷோ மேனேஜ்மென்ட்.

வருமானம்:

படிப்பை முடித்து செல்பவர்கள் ஆரம்பகட்டத்தில் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50, ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். அனுபத்தின் அடிப்படையில் சம்பள விகிதம் மாறுபடும்.

இந்தத்துறையை பொறுத்தமட்டில் ரூ.1.69 லட்சம் முதல் ரூ.7.67 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

எப்படி தேர்வு செய்வது?

வழிமுறை ஒன்று:+2  நுழைவுத்தேர்வுடிகிரி (ஃபேஷன் டிசைன் 4 ஆண்டு)  ஃபேஷன்டிசைனர் 
வழிமுறை இரண்டு:+2 டிகிரி,டிப்ளமோ நுழைவுத்தேர்வுபோஸ்ட் கிரஜிவேட்ஃபேஷன்டிசைனர்  

கல்லூரிகள்:

 • ஏபிஜே இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் (ஏஐடி புதுதில்லி)
 • இன்டெர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி,நேவி மும்பை,
 • பேர்ல் அகாடமி, புதுதில்லி
 • டபுள்யுஎல்சி கலோஜ் ஆப் இந்தியா, மும்பை
 • அகாடமி ஆப் ஃபேஷன் ஸ்டடிஸ்
 • நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் (என்ஐடி அகமதாபாத்)

மத்திய அரசின் நிஃப்ட் (NIFT - National Institute of Fashion Technology), ஃபேஷன் படிப்புக்கான முதன்மைக் கல்வி நிறுவனம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பி.டெக்., ஃபேஷன் டெக்னாலஜி மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பி.எஸ்ஸி., ஃபேஷன் டெக்னாலஜி படிக்கலாம்.

இதைத்தவிர, பேர்ள், டிரீம்ஸோன் உள்ளிட்ட கல்லூரிகளிலும் ஃபேஷன் படிப்புகள் வழங்குகின்றன.

மேற்படிப்புகள்

இளங்கலையில் எந்தத் துறையில் பட்டம் பெற்றவர்களும் எம்.டெஸ் (மாஸ்டர் ஆஃப் டிசைன் ஸ்பேஸ்), எம்.எஃப்.எம் (மாஸ்டர் ஆஃப் ஃபேஷன் மேனேஜ்மென்ட்) ஆகிய இரண்டு ஆண்டு முதுநிலைப் படிப்புகளில் சேரலாம்.

பி.இ., பி.டெக்., படித்தவர்கள் எம்.எஃப்.டெக் (மாஸ்டர் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி) உள்ளிட்ட படிப்புகளில் சேரலாம். முதுநிலைப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகளும் உண்டு.

வெளிநாட்டிலும் பல்வேறு வகையான படிப்புகள் நடத்தப்படுகின்றன.

வெளிநாட்டில் உள்ள மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களின் பட்டியல்:

 • டிரேக்ஸேல் பல்கலைக்கழகம், பிலடெல்பியா
 • கென்ட் ஸ்டேட் யுனிவர்சிட்டி, கென்ட்
 • மிடில்செக்ஸ் பாலிடெக்னிக், லண்டன்
 • மூர் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ், பிலடெல்பியா
 • ரோட் ஐலேண்ட் ஸ்கூல் ஆப் டிசைன், புரொவிடன்ஸ்,
 • ஸ்கூல் ஆப் தி ஆர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சிகாகோ, சிகாகோ
 • புன்கா காலேஜ் டோக்கியோ

English summary
Career as Fashion Designer

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia