சுய தொழில் செய்யப் போகும் சூப்பர் மேன்களே

Posted By:

சுய தொழில் புரிய ஆர்வம் உள்ளோர்க்கு அற்புதமான ஐடியாக்கள் உங்கள் தொழிலுக்கு வளம் சேர்க்கும். சுய தொழில் பலருக்கு விருப்பம் இருக்கும் ஆனால் அதற்கான முதல் தேவை முதலீடு,  அதாங்க கேப்பிட்டல் பற்றாக்குறை நிறைய பேருக்கு இருக்கும். உதவுவதற்கு யாரும் இருக்க மாட்டங்க ஆனால் உங்களுக்கு வழிக்காட்ட நாங்க இருக்கோம்.

சுய தொழில் புரிய உங்களுக்கான சில வழிக்காட்டுதல்கள் சுய தொழிலில் இருககிற ரிஸ்க் மற்றும் அதனை ரஸ்காக மாற்றுவது எப்படி என்பதை பற்றியெல்லாம் தெரிஞ்சுக்குவோம்.
ஒருவரிடம் வேலை செய்வது நமக்கு சிக்கல்ன்னா அதேபோன்று சுய தொழில் செய்வது இன்னும் சிக்கலோ சிக்கல் என்ற கருத்து நம்மிடையே இருந்து வருகின்றது அது தவறான கணிப்பு. சுய தொழில் செய்யும் போது நமக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்கும். நமக்கு நாமே ராஜா அதே மாதிரி நமது தொழில் வளர்ச்சி நமது கையில்தான் இருக்கும். தொடர்ந்து தொழிலில் இருக்க வேண்டிய  அனைத்து  புதிய புதிய மாற்றங்களை தெரிந்து கொண்டு புதிய மாற்றங்களை நீங்கள் செய்யும் தொழிலில் புகுத்தி செயல்படுங்கள்

சுய தொழில் :

சுய தொழில் புரிய தொழிலில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். தொழில் செய்வதற்கு உரிய ஞானம் இருக்க வேண்டும். அதென்னப்பா ஞானம்ன்னு கேக்கிறிங்களா, அதாங்க சுயதொழில் செய்வதற்கான தொழில் பற்றிய புரிதல், வேலை செய்த அனுபவம் அத்துடன் வேலையின் நெளிவு சுழிவு என அனைத்தும் தெரிந்தவர்கள் நிச்சயமாக தொழில் செய்ய தகுதியுடையவர்கள் ஆவார்கள் .

சுய தொழில் பயிற்சி :

நீங்க சொந்தமா பிஸ்னஸ் செய்ய முதலில் சரியாக செயல்படுத்தக்கூடிய ஏட்டுக்கல்வி அனுபவத்தை விட நீங்க்ள் செய்யப்போகும் தொழிலில் குறைந்தபட்சம் ஆறுமாதம் முதல் ஒருவருடம் அதற்கு மேல் பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் தொழிலில் உங்களுக்கொரு தெளிவு இருக்கும்.ஏ டு இசட் தெரிந்திருக்க வேண்டும்.

ஏற்ற இறக்கங்கள் :

நீங்கள் என்னதான் தொழிலில் டானாக வளர்ந்தாலும் ஆரம்ப காலகட்டம் தொழிலின் நேக்குகள் பிடிப்பட்ட கொஞ்ச நாட்கள் ஆகும். சொந்த தொழில் புரியும் ஆரம்ப காலகட்டத்தில் தொழிலில் நிச்சயமாக ஏற்ற இறக்கங்கள் வருவது சகஜம், சில சமயம் வருமானமே இல்லாத சூழல் கூட வரும் அதற்கு எல்லாம் முன்க்கூட்டியே செய்யப்பட்ட பிளானில் நாம் சரியாக ஏற்ற இறக்கம் குறித்து ஏற்கனவே வரையறுத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஏற்படும் சிக்கல்களை நாம் சமாளிக்க முடியும் எப்பொழுதும் எந்த சூழலிலும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

சுமார்ட் வொர்க் :

நீங்க செய்யும் சுய தொழில் எதுவாக இருந்தாலும் டெடிகேசனாக இருங்க, ஹார்டு வொர்க் மட்டும் பத்தாது சுமார்ட் வொர்க் செய்யுங்க எதற்கும் தயாராக இருங்க. போராட்ட குணம் இருக்க வேண்டும் அது இருக்கும் பொழுது உங்களை யாராலும் அசைக்க முடியாது.

பாட்னர்சிப்பில் கவனம் தேவை :

சுய தொழில் செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய முக்கிய கவனம் பாட்னர்சிப்பில் கவனமாக இருக்க வேண்டியது ஆகும். உங்களுடன் இருப்பவர் உங்களுக்கு சமமாக இருப்பாரெனில் நல்லது. அவரிடம் டெடிகேசன் குறைவாக இருந்தாலோ, ஆர்வமில்லாதவராக இருந்தாலோ அவருடன் பாட்னர்சிப் பேச்சுக்கு இடம் கொடுக்காதிர்கள்.

சார்ந்த பதிவுகள்:

வேலை தேடி அலையும் மனமே ஆறு மனமே ஆறு 

வேலையிடத்தில் வெரிகுட் வொர்க்கராக ஒர்க்கவுட் செய்ய கற்றுக்கொள்வோம் வாங்க

English summary
here the article tells about tips for entrepreneur

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia