பட்ஜெட் வரலாறும் அதன் போக்கும் அறிவோம்

Posted By:

பட்ஜெட் ஓடிகொண்டிருக்கும் இவ்வேளையில் நாடுழுவதும் நாடாளுமன்றத்தின்மீது பார்வை உள்ளது. பட்ஜெட் தாக்கல் செயப்படுவது குறித்து நாடு முழுவதும் பட்ஜெட் குறித்து பேச்சுகள் ஆல மரத்தடியில் தொடங்கிய பேச்சு ஆகாயம் வரை நீலுகிறது எங்கு பார்த்தாலும் பட்ஜெட் குறித்த பார்வைகள், விவாதம், கருத்துக்கள் என நாடு முழுவதும் பரப்பரப்பாக பேசிகொண்டிருக்க பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தின் முக்கிய பங்கு வகிக்கின்றது. இத்தகைய பட்ஜெட் பொருளாதார மாணவர்களுக்கு எவ்வாறு முக்கியமோ அவ்வளவு முக்கியம் போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு.

நீங்கள் எந்த தேர்வுக்கு வேண்டுமானாலும் படிங்க டிஎன்பிஎஸ்சி, வங்கி தேர்வு, யூபிஎஸ்சி, என்டிஏ, எஸ்எஸ்சி, இன்ஜியரிங், கேட் மற்றும் வேலைக்கு படிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி பட்ஜெட் இன்றைய முக்கிய தேவையாகவுள்ளது. பட்ஜெட் குறித்த கேள்விகள் நிச்சயம் அனைத்து தேர்வுகளிலும் நேர்மறையாகவோ மறைமுகமாகவோ கேட்க வாய்ப்புள்ளது.

பட்ஜெட் குறித்து சிறப்பாக தெரிந்து கொள்ளும் ஒருவருக்கு நாட்டின் முக்கிய அம்சமான பொருளாதாரத்தைப் பற்றிய அவுட்லைன் கிடைக்க வாய்ப்புள்ளது.
மாணவர்கள், வேலை தேடுபவர்கள், போட்டிதேர்வுக்காக படித்து கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் பட்ஜெட் குறித்த பார்வை இருக்கும்.

பட்ஜெட்டின் சிறப்பு, அதன் பெருமை பட்ஜெட்டின் மைல்கல் அது பயணித்த தொலைவு அது பெற்ற முக்கியத்துவம் அனைத்து தகவல்களையும் அறிவோம், அது குறித்து மாநில, மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் எவ்வாறு கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பதை குறித்தும் தெரிந்து கொள்வோம்.

பட்ஜெட் குறித்த விவரங்களும் அது கொடுக்கும் மதிபெண்கள் அனைத்தும் உங்களுக்கு அறிவிக்கின்றோம்.

பட்ஜெட்டும் பொருளாதாரமும்:

பொருளாதாரத்தின் அனைத்து முக்கிய முறைமைகளும் பட்ஜெட்டில்அடங்கும். பட்ஜெட்டில் கொடுக்கல் வாங்கல், விற்பனை, வரி, கொள்முதல், மாணியம், அளிப்பு, வங்கி, கடன், வட்டி தள்ளுபடி, இவை அனைத்து பதங்களை கொண்ட மொத்தவுருவமே பட்ஜெட் ஆகும்.

இந்தியாவில் பட்ஜெட் :

இந்தியாவில் பட்ஜெட் பிரிட்டிஷார் காலத்தில் இருந்து பட்ஜெட் பின்ப்பற்றுப்பட்டு வருகின்றது. பிரிட்டிசார் ஆட்சிகாலத்தில் இந்தியாவில் முதன்முறையாக பிப்ரவரி 18, 1869 இந்தியாவில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சிகாலத்தில் முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தவர் ஜேம்ஸ் வில்சன் ஆவார்.

இந்தியாவின் நிதி உறுப்பினராக இருந்த ஜேம்ஸ் வில்சன் இந்தியா கவுன்சில் மெம்பராக இருந்து வந்தபொழுது அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் முதல் இடைக்கால பட்ஜெட் ஆர்கே சண்முகம் செட்டியார் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. 1947இல் நவம்பர் 26 அன்று நிதி அமைச்சர் சண்முகம் முதல் படஜெட் தாக்கல் செய்தார்.

இந்தியாவில் பட்ஜெட் பொது பட்ஜெட், இடைக்கால பட்ஜெட், சிறப்பு நிலை பட்ஜெட் என பலநிலைகள் பட்ஜெட் வாசிப்புகள் உள்ளன.

டி.டி. தேஷ்முக் இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய கவர்னர் ஆவார். இவர் 1951- 1952 இல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்த பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு இந்திரா மூவர் ஆவாரகள்

இந்தியாவில் முதல் முறையாக மத்திய பட்ஜெட்டை வழங்கிய பிரதமர் ஜவஹரலால் நேரு ஆவார். 1958இல் மத்திய பட்ஜெட்டை ஜவஹர்லால் நேரு தாக்கல் செய்தார்.

இந்தியாவில் இதுவரை மொராஜிதேசாய்தான் 10 முறை பட்ஜெட்கள் தாக்கல் செய்தவர் ஆவார். இந்தியாவின் அதிகபட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமை இவரையே சேரும்.

இந்தியாவில் ஏழுமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள் சிதம்பரம், யஷ்வந்த சின்ஹா, ஒய், பி.சவான், தேஷ்முக், பிராண்ப் முகர்ஜி ஆவார்கள். ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள் மன்மோகன் சிங், டி.டி.கிருஷ்ணாமாச்சாரி, மூன்றுமுறை தாக்கல் செய்தவர்கள் ஆர்.வெங்கட் ராமன் , எச்.எம்.பட்டேல். இரண்டு முறை தாக்கல் செய்தவர்கள் ஜஸ்வந்த் சிங், வி.பி.சிங். சி. சுப்ரமணியம், ஜான் மத்தாய் சண்முகம் செட்டியார் ஆவார்.

 

பட்ஜெட் என்றால் என்ன:

இந்திய அரசியலில் பட்ஜெட் என்ற சொல்லே இல்லை. இந்திய அரசிய சட்டத்தில் பட்ஜெட் என்ற சொல்லுக்கு பதிலாக அரசின் ஆண்டு நிதி அறிக்கை என்ற பதமே உள்ளது. இந்திய அரசின் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை கணக்கிடுவதால் இதனை பொதுவாக இதனை பட்ஜெட் என்று அழைக்கின்றோம். அரசியல் சட்டப்பிரிவு 112ன் படி நாட்டின் ஆண்டு வரவு செலவு கணக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய நாட்டின் முதல் குடிமகன் என அழைக்கப்படும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும் அதன்பின்புதான் பட்ஜெட் என்னும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடியும்.

பட்ஜெட்டினை மாநிலம், மத்திய அளவில் பட்ஜெட் தாக்கல் செய்வார்கள் மத்தியில் குடியரசு தலைவரிடம் அனுமதி பெறுவது போல் மாநிலத்தில் ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும்.

 

பட்ஜெட் இதுவரை இந்தியாவில் :

பட்ஜெட் தொடபான சில முக்கிய தகவல்கள் இந்தியாவில் 2001 வரை மாலைவேலையிலே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது அதனை மாற்றி 1999இல் யஷ்வந்த் சின்ஹா அவர்கள் பட்ஜெட்டை காலையில் 11 மணிக்கு தாக்கல் செய்தார்.

விபி. சிங்க் காலத்தில் பிப்ரவரியில் 1986இல் கொண்டு வரப்பட்ட பட்ஜெட்டில் மறைமுக வரியைப்பற்றிய திருத்தங்களை கொண்டு வந்த பட்ஜெட் என இதை அழைக்கலாம்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது பொதுவாக பிப்ரவரி மாத இறுதியில் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகும். 1987ல் பட்ஜெட்டில் வரி கொடுக்காத அனைத்து நிறுவனங்களும் வரியின் கீழ் கொண்டு வந்த பட்ஜெட் ஆகும்.

ஜூன் 24 , 1991 இல் மன்மோகன் சிங் கொண்டு வந்த பட்ஜெட் தாக்கலில் இறக்குமதி , இறக்குமதி கொள்கைகள், லைசென்ஸ் குறித்து பேசப்பட்டது. உலகமயமாக்கள் இந்த பட்ஜெட்டில் இருந்துதான் துவங்கியது என்று கூறலாம்.

2000 ஆம் ஆண்டில் பிப்ரவரி 29இல் நிதியமைச்சர் யஷ்வந்த சின்ஹா கொண்டுவந்த பட்ஜெட்டில் சாப்ட்வேர் பட்ஜெட்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. ஐடி இண்டஸ்ரியில் சாப்ட்வேர் குறித்து அதிக அளவில் பட்ஜெட்டில் இடம் கிடைத்தது.

இந்தியாவின் ஒரே பெண் நிதியமைச்சராக இருந்தவர் இந்திரா காந்தி ஆவார் 1970- 1971 வரை நிதியமைச்சராக இருந்துள்ளார். இக்காலகட்டத்தில் நாட்டின் பட்ஜெட்டை வாசித்த முதல் பெண்மணியும் ஆவார் அத்துடன் இவர் இந்த காலகட்டத்தில் பிரதமராகவும் இருந்தார்.

பொதுவாக பட்ஜெட் பிப்ரவரி 29 மற்றும் ஆரம்பத்தில் தாக்கல் செய்யப்பட்டாலும் ஏப்ரலில்தான் நடைமுறைப்படுத்தப்படும்.

 

பட்ஜெட் தயாரிப்பு :

இதுவரை இந்தியா எம்பது பட்ஜெட்களுக்கு மேல் தாக்கல் செய்துவிட்டது. இந்தியாவில் பட்ஜெட் தயாரிப்பானது மிகவும் கவனமாக தெளிவாக நடைபெறுகிறது. பட்ஜெட் தயாரிப்பு பணி குடியரசு தலைவர் மாளிகையில் அச்சடிக்கப்பட்டது. இது பின் ஆரம்பத்தில் டெல்லி மிண்டோ சாலையில் உள்ள பாதுகாப்பு அச்சகத்துக்கு மாற்றப்பட்டது. 1980 ஆம் ஆண்டுக்குப்பின் நிதியமைச்சக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பிரதேயேக பகுதியில் அச்சு அமைத்து அச்சடிக்கப்படுகின்றது.

பட்ஜெட் தயாரிப்பின் போது பாதுகாப்பாக இருக்கவும் ரகசியங்கள் எதுவும் கசியக்கூடாது என்பதில் அரசு தெளிவாக திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றது. பாதுகாப்பு காரணமாக பட்ஜெட் தகவல்கள் அனைத்தும் தொகுத்து உருவாக்க காலத்தில் கடைசில நாட்களுக்கு இப்பணியில் ஈடுபடு வோர்களளுக்கு வீடு, உணவு தேவைகள் அனைத்தும் வழங்கி வீட்டிற்கு அனுப்பாமல் பட்ஜெட் தாக்கல் செய்தபின் மட்டுமே விட்டிற்கு அனுப்புகின்றனர். இக்காலங்களில் வெளியுலக தொடர்பு எதுவும் பெற முடியாது. மொபைல் போன்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் 1997இல் தாக்கல் செய்த பட்ஜெட் கனவு பட்ஜெட் என அழைக்கப்படுகின்றது. வருமான வரி குறித்து பேசிய பட்ஜெட் இதுதான் அதுபோலவே 2006 இல் சேவைகளுக்கான வரியை குறித்து அறிவித்த முதல் நிதியமைச்சர் இவர்தான்.

 

இந்திய பட்ஜெட் நுணுக்கங்கள் :

இந்திய அரசின் வரவு செலவிகளின் தொகுப்பே பட்ஜெட் அதாவது நிதிநிலை அறிக்கை ஆகும். இது முந்தைய ஆண்டையும் நிகழாண்டையும் அடுத்துவரும் ஆண்டையும் கணக்கில் வைத்து தொகுப்படுவது ஆகும்.

இந்திய அரசின் நிதிநிலை அறிக்கையானது தொகுப்பு நிதி மற்றும் பொது நிதி, தற்செயல் நிதியான கண்டிஜன் நிதி மற்றும் ஒருங்கிணைப்பு நிதி மூலம் தொகுப்படும் ஒன்றாகும்.

அரசின் செலவுகளை அனைத்தும் ஒருங்கிணைத்த நிதியான கன்சாலிடேட்டடு நிதி, பொது கணக்கு நிதி மற்றும் கன்சாலிடேட்டு நிதி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு செய்யப்படுகின்றன.

அரசின் செலவுகளை சட்டவிதி 113ன் கீழ் அனைத்தும் அளவீடு செய்யப்படுகின்றது.

சட்டவிதி 110 கீழ் பினான்சியல் பில் என அழைக்கப்படும் நிதி மசோதா பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பாக தாக்கல் செய்யப்படும். இந்த பண மசோதாவில் விதிக்கப்படும் அனைத்து வரிகள் அதன் செயலாக்கம் அனைத்தும் விளக்கப்படும்.
பட்ஜெட் நாட்டின் வரவு செலவு நாட்டின் நிதிநிலைமை அத்துடன் நாட்டின் நலத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகள் உள்ளடக்கியது.

 

பட்ஜெட் கேள்விகள்:

பட்ஜெட்  குறித்து போட்டி தேர்வில் கேட்க வாய்ப்பு இருக்க கூடிய கேள்வி  2, 5, 10 என அனைத்து பிரிவு மதிபெண்களையும் கொண்ட கேள்விகள்  கேட்க வாய்ப்பு இருக்க கூடிய கேள்விகள் அறிவோம்.

1.  எந்த சட்டபிரிவின் கீழ் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகின்றது?
2.  முதல் பட்ஜெட் யாரால் தாக்கல் செய்யப்பட்டது?
3.  பட்ஜெட் என்றால் என்ன?
4.  பட்ஜெட்டில் தாக்கல் செய்ய யாருடைய அனுமதி பெற வேண்டும்?
5. அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசின்? செலவுகள் எதிலிருந்து அறிவிக்கப்படுகின்றது?
6. அதிக பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள் யார்?
7.   இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்?
8.  பண மசோதா என்றால் என்ன?
9.   கனவு பட்ஜெட் என யாருடைய பட்ஜெட் அழைக்கப்பட்டது?
10.  வருமான வரி குறித்து பேசிய பட்ஜெட் எது? 
11.  உலகமயமாக்கள் யாருடைய பட்ஜெட் தாக்கலில் தொடங்கியது?
12.  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எத்தனை பேர் இந்திய ப்ட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்?

13. இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் யார்?

14.  பிரதமர் இந்திரா எந்த ஆண்டு பட்ஜெட் வாசித்தார்?
15.  பட்ஜெட்டின் வகைகள் யாவை?

16. ரயில்வே ப்ட்ஜெட் குறித்து எழுதுக?

17.92 ஆண்டுகால  வழக்கம் என ரயில்வே பட்ஜெட்ட்டில் ஏற்பட்ட மாற்றம் என்ன? 

 

ரயில்வே பட்ஜெட்:

ரயில்வே பட்ஜெட் தொடக்க காலத்தில் பட்ஜெட் ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் என ஆங்கிலேயர்காலத்தில் பிரிக்கப்படாமல் இருந்தது. ஆனால் பிரிட்டிஷ் நிர்வாகம் பட்ஜெட்டில் இருக்கும் குறைகளை சரிசெய்ய வில்லியம் அக்வோர்த் கமிட்டி ஒரு குழுவை அமைத்தது.

1921 ஆம் ஆண்டில் வில்லியம் ஆக்வோத் கமிட்டி ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ய பரிந்துரைக்கவே ரயில்வே பட்ஜெட் தனி பட்ஜெட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது.

 

92 ஆண்டுகால வழக்கத்தில் மாற்றம் :

ரயில்வே பட்ஜெட்டினை பொது பட்ஜெட்டுடன் இணைத்து ரயில்வே பட்ஜெட்டின் வளர்ச்சியை இணைத்து அறிவிப்பத்தன் மூலம் இரண்டையும் முன்னேற்ற முடியும் என 2016 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது .

ரயில்வே பட்ஜெட் பொதுபட்ஜெட்டுடன் இணைந்து 2017- 2018, 2018-2019 என இரண்டு பட்ஜெட்டுகளுடன் இணைந்து ஒரே பட்ஜெட்டாக  கடந்த இரண்டு ஆண்டுகள் வாசிக்கப்பட்டு வருகின்றன.

ரயில்வே பட்ஜெட்டில் ரயில் சேவைகள் மற்றும்  புதிய ரயில்கள், வரவு, செலவுகள், லாபம், போன்ற அனைத்தும்  வசதிகள் குறித்து புதிய அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. 

 

சார்ந்த பதிவுகள்:

அழகு மிளிரும் ராஷ்டிராபதிபவன் மற்றும் அதன் வரலாறும்

English summary
Article tells about Budget fact and questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia