போர்டு எக்ஸாம் நேரத்தில் மாணவர்களின் தேவைகள் மற்றும் பெற்றோர்களின் பங்கு

Posted By:

போர்டு எக்ஸாம் தொடங்க இன்னும் 20 நாட்கள்தான் கையில் உள்ளன.10, 11, 12 வகுப்பு மாணவர்கள் திறம்பட செயல்பட வேண்டும் என்ற உத்வேகம் அவர்களுடன் இருப்பது போல் பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளின் சூழல்களை முழுவதும் படிப்பதற்கு உகந்தாக மாற்ற வேண்டும். பெற்றோர்கள் கவனிப்பில் பிள்ளைகள் படிக்க வேண்டும்.

பிடிவாதங்களுக்கு மசியாதீரள் பெற்றோர்களே :

போர்டு எக்ஸாம் வரும் படியுங்கடா என்றால் கையில் பொபைல் மற்றும் வண்டி வேண்டும் என்ற பிடிவாதங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உங்கள் வீட்டு பிள்ளைகள் அவர்கள் வேண்டியப் பொருளை பெற அடம்பிடிக்கும். சில நேரங்களில் உணவு உண்ணாமல் ஸ்டிரைக் பண்ணும் அப்படிப்பட்ட நேரத்தில் பெற்றோர்கள் கொஞ்சம் தெளிவாக இருங்கள். எது வேண்டுமானாலும் வாங்கி தருகிறோம் ஆனால் தேர்வுக்கு படி நல்ல மதிப்பெண் பெற்றால் வாங்கித் தருகின்றோம் என்று புரிய வையுங்கள். தேர்வுக்கு பின்பு தேவையெனில் பார்போம். 

ஊக்கப்படுத்துங்கள் :

உங்கள் வீட்டு குழந்தைகள் படிக்க சோம்பேரித்தனம் படுகின்றது. உங்களையே ஏமாற்றி படிப்பாதாக பாவ்லா காட்டுகின்றது எனில் கொஞ்சம் கூட தயவு தாட்சியம் பார்க்கமல் தண்டிப்பதை பல பெற்றோர்கள் குறியாக இருக்கின்றனர் ஆனால் அது தவறு. அதைனை விட உங்கள் பிள்ளைகளுக்கு சரியாக படிக்காமல் தோற்றவர்கள் வாழ்க்கை போன கதைகள், மற்றும் உர்ச்சாகமூட்டும் சில விழிப்புணர்வு படக்காட்ச்சிகள் அனைத்தும் போட்டு காட்டுங்கள் அவர்கள் முன் நீங்கள் பாருங்க: அவர்களை கூப்பிடாமல் வந்து பார்ப்பார்கள். படிப்படி என்று நாம் எவ்வளவு சொன்னாலும் புரியாத பிள்ளைகளுக்கு அவர்கள் அறியாமலே படிக்க வையுங்கள்.

நெருக்கடி மனநிலையை போக்குங்கள்:

சில பிள்ளைகள் படிப்பார்கள் அவர்கள் லட்சியத்துக்கு தொடரந்து படிக்கும் பொழுது அவர்களிடம் இருக்கும் லேக் என்பது என்ன என்று தெரிந்து அவர்களுக்கான சிக்கல்களை தீர்த்து அவர்கள் படிப்பதை அவர்களாகவே பரிந்து விருப்பப்பட்டு படிக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்துங்கள். நட்பு பாராட்டுங்கள் . மாணவர்களின் நெருக்கடியான மனநிலையை போக்குங்கள். நம்பிக்கை துளிரவிடுங்கள். லட்சியத்துக்கான அவர்களின் பாதையை அடைய உதவிகரமாக இருங்கள்.

ரிவைஸ் செய்யவையுங்கள்:

தேர்வுக்கு முழுவதுமாக மாணவர்கள் படிக்கிறார்கள் அதே சமயம் அவர்களுக்கு ரிவைஸ் செய்வதைப் பற்றி தெரிவியுங்கள். ரிவைஸ் என்பது படித்ததை திரும்ப படிப்பது மட்டுமல்ல எந்த ஒரு பாடத்தை ரிவைஸ் செய்யும் பொழுது திரும்ப சரியாக கொண்ட வர முடியவில்லை எது உங்களது பிள்ளைகளுக்கு டிராபேக்காக இருக்கின்றது என்பதை அவர்களை உணர வையுங்கள் . அவர்களுக்கு சுய பரிசோதனை என்பது என்ன என்ற அவசியம் தெரியப் படுத்துங்கள், பிறகு அவர்களின் பிரச்சனையை உங்களிடம் தெரிவிப்பார்கள். அப்பொழுது காது கொடுத்து கேட்டு அவர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கலை சரி செய்யுங்கள். அதுவே நன்மை பயக்கும். பெற்றோர்களான உங்கள் மீது பிள்ளைகளுக்கு அளவற்ற நம்பிக்கை ஏற்படுத்துங்கள் . அவர்கள் வாழ்வின் சிறந்த வழிக்காட்டியாவீர்கள்.

Image source 

நீட், ஐஐடி பயிற்சி :

நீட் தேர்வுக்கு மற்றும் ஐஐடி தேர்வுக்கு உங்கள் மாணவர்கள் படித்து கொண்டிருகுதால் படிக்கட்டும். ஆனால் இந்த தேர்வு நேரத்தில் அந்த பயிற்சியை விட பொதுத்தேர்வு முக்கியம் என்பது புரிய வையுங்கள் பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை நீட் தேர்வுக்கு முன்னோட்டமாக பார்க்க உதவுங்கள்.

சந்தையில் கேள்வி புத்தகங்கள்;

நீட் மற்றும் பொதுத் தேர்வு அத்துடன் ஐஐடி தொகுப்பு மாணவர்களுக்கான சிறப்பான புத்தகங்கள் என சந்தையில் பதிப்பகங்கள் ஆளாளுக்க்கு மொய்க்கும். புத்தகம் வாங்கச் செல்லும் நமக்கு எதுவும் பிடிப்படுவதில்லை அதனை போக்க பள்ளி ஆசிரியர்கள் பரிந்துரைக்கும் பதிப்பகங்கள் மற்றும் உங்கள் பிள்ளைக்களுக்கு எது தெளிவாக இருக்கின்றது என அவர்கள் விருப்படியுள்ள புத்தகங்கள் வாங்கி கொடுங்கள்.

ரிவிசன் டெஸ்ட்:

மாணவர்களுக்கு ரிவிசன் டெஸ்ட் பள்ளிகளில் நடைபெறும் அதனை முடிந்த வரை எழுதட்டும் . ரிவிசன் டெஸ்டானது அவர்களின் எழுத்து வேகத்தையும் தேர்வில் அவர்கள் சிறப்பாக எழுத உதவ முன்னோட்டமாகும். முடிந்த அளவிற்கு ரிவிசன் டெஸ்டுகள் எழுதவையுங்கள்.

உடல் மன ஆரோக்யம்:

பொதுதேர்வு எழுதும் மாணவர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்யமாக இருக்க வேண்டும். உணவு சுவையோடு இருப்பதோடு ஆரோக்யத்தில் அவசியம் கண்காணியுங்கள். பழச்சாறு கொடுங்கள். கட்டுப்பாடுகளுடன் உணவு உண்ண வேண்டிய அவசியமில்லை. வீட்டில் செய்யும் எந்த உணவிற்கும் கட்டுப்பாடுகள் தேவையில்லை ஆனால் வெளியில் சாப்பிடும் ஜங் புட்கள் தேர்வு முடியும் வரை கட்டுப்பாட்டுடன் உண்ண அனுமதியுங்கள். உங்கள் வீட்டு மாணவர்களுடன் காலை அல்லது மாலை அறைமணி நேரம் விளையாடுங்கள் மனதுவிட்டு பேசுங்கள். நம்பிக்கையூட்டுங்கள்.

மனச்சிதறல்கள், மற்றும் ஒப்பீடு வேண்டாம்:

மாணவர்களுக்கு ஏற்படும் பதின்பருவ சிக்கலை தீர்க்க அவர்களுக்கு தெரியாமலே அவர்களை காண்காணிக்கலாம். ஆனால் அவர்களுக்கு மனச்சிதறல்கள் ஏதேனும் இருப்பின் பேசி சரி செய்யுங்கள். உங்கள் வீட்டு பிள்ளைகளின் படிப்பையோ மற்ற திறன்களையோ மற்ற வீட்டு மாணவர்களுடன் ஒப்பிடாதிர்கள். உங்கள் பிள்ளைகள் என்றும் உங்களுக்கு டாப்பர்கள்தான் என்பதை உணர்த்துங்கள். அவர்களுக்கு ஏதேனும் காம்ளக்ஸ் பிரச்சனைகள் தொற்று இருக்கின்றாதா என்பதை கண்காணியுங்கள்.மாணவர்களுக்கு புரிய வையுங்கள் அடுத்தவர்களுடன் தன்னை ஒப்பீடு செய்தல் தவறாகும் . தனித்திறன் ஒவ்வொருவருக்கும் ஒளிந்திருக்கும் அதனை வெளி கொணர உதவுங்கள் இது போதும் உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு

சார்ந்த பதிவுகள்:

உங்கள் வீட்டுல டீன்ஏஜ் பிள்ளைகள் இருக்கிறாங்களா அப்ப உசாரா இருங்க 

தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் !

English summary
Article tells about tips for Board exam for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia