உங்கள் வீட்டுல டீன்ஏஜ் பிள்ளைகள் இருக்கிறாங்களா அப்ப உசாரா இருங்க

Posted By:

மார்ச் தொடங்க இன்னும் 13 நாட்கள்தான் உள்ளன. பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு , பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள், சிபிஎஸ்சி பொதுத் தேர்வு மற்றும் கல்லுரி செமஸ்டர்கள் என அனைவருக்கும் தேர்வுக்கான நெருக்கடிகள் தொலைத்து எடுக்கும். பாடங்கள், டெஸ்ட்கள் மற்றும் மதிபெண்கள் ஸ்பெசல் கிளாஸ் என ரொம்ப பிசியா ஸ்டூடண்ட்ஸ் இருப்பாங்க. அவுங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பார்த்து பார்த்து பெற்றோர்கள் செய்ய வேண்டிய சமயம் இதுவாகும்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள், சகோதரரர்கள், சுற்றத்தார்கள், சீனியர்கள், ஜூனியர்கள் யாராக இருப்பினும் கொஞ்சம் உசாரா உங்கள் வீட்டு பிள்ளைகள் மற்றும் பக்கத்துவீட்டு பிள்ளைகளை அரவணைத்து படிக்க அனுப்புங்கள். இது நமது கடமையாகும். தமிழ்நாட்டில் 6- 10, 11,12, கல்லுரி என டீன் ஏஜ் மாணவர்களின் தேர்வு காலம் இதுவாகும். கிட்டத்தட்ட 20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதப் போகின்றார்கள் ஆகையால் பொறுப்புணர்ந்து படிக்கும் சூழலை உருவாக்குங்கள்.

சமுதாயம் என்பது நீ, நான், நீங்கள், நாம் ,நாங்கள் இணைந்த ஒன்றுதான சமுதாயம் அதன் கட்டமைப்பை சரியாக பெரியவர்கள் வழிநடத்த வேண்டும். சிரியவர்கள் அவர்களை பின்ப்பற்ற வேண்டும்.

தேர்வுகாலம் :

மார்ச் முதல் மே வரை 1 முதல் கல்லுரி மாணவர்கள் அனைவருக்கும் முக்கியமான காலம் தேர்வுகாலம் ஆகும். கொளுத்தும் கோடையில் தேர்வு எழுத மிகுந்த மன உலைச்சலில் உழலும் நேரம் இது பெற்றோர்கள் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும். சுற்றார்த்தார்கள் அண்டை வீட்டு பிள்ளைகளுக்கு தேர்வு காலத்தில் துணையாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் உபத்திரவில்லாமல் இருக்கலாம்.

தொல்லைக்காட்சியான தொலைக்காட்சிபெட்டியை தொலைதூரம் வைக்கவும்:

உங்கள் வீட்டு சீரியல்கள் மற்றும் ரியலிட்டி சோக்களை எல்லாம் மூன்று மாதங்களுக்கு மூட்டை கட்டி வையுங்கள். உங்கள் குழந்தைகளின் எதிர்காலம், உங்கள் கையில் உண்டு. உங்கள் வேலையை பார்த்துகொண்டே பிள்ளைகளின் மீது அவர்கள் அறியாமல் உங்கள் பார்வையை செலுத்துங்கள்.
முடிந்த அளவிற்கு அவர்களுடன் நட்பு பாராட்டி     அவர்களை படிக்க வையுங்கள்.

சோசியல் மீடியாக்களிடம் இருந்து விலகி இருங்கள்:

உங்கள் குழந்தைகள் முன்பு மொபைல் மற்றும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப்பில் சோசியல் மீடியக்கள் பயன்படுத்துதலை நிறுத்துங்கள். அவர்களுக்கும் மூன்றுமாதம் மொபைல் போன்கள் பயன்பாட்டை அனுமதிக்காதீர்கள். வேலைக்கு போகின்ற பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளை தனியாக விட்டு செல்லாதீர்கள் தேர்வு காலத்தில் உங்களுக்கு இணையாக உங்கள் பிள்ளைகளின் மீது கவனம் செலுத்துபவர்களை உடன் வையுங்கள்.

ரிவைஸ் வையுங்க:

உங்கள் பிள்ளைகள் படிப்பின் போக்கு எப்படி இருக்கின்றது என்பதை ஆசிரியர்களிடம் கேளுங்கள், அவர்களின் ஸ்பெசல் கிளாஸ் டீச்சர்களிடம் விசாரிக்கவும். அவர்கள் எப்படி படித்தாலும் எதை படித்தாலும் பரவாயில்லை அவர்களின் மார்க்குகளை விட அவர்களின் படித்ததை எந்த அளவிற்கு நினைவில் வைத்து இருக்கின்றார்கள். மேலும் படித்ததை நினைவில் வைக்கவில்லை என்றால அவர்களுக்காக மெனக்கெட்டு ரிவைஸ் செய்ய வையுங்கள்.

அம்மா, அப்பா கணக்கு:

அம்மா கணக்கு மாதிரி அப்பா, தாத்தா, அண்ணா, அக்கா என உங்கள் கணக்கில் உங்கள் வீட்டு மாணவர்களை படிக்க சில டிரிக்குகள் யோசித்து செயல்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை நோகடிக்காமல் கொஞ்சம் சுமார்டாக யோசித்து படிக்க வையுங்கள். அவர்கள் படிப்பில் உங்களது அக்கறையுள்ளது என்பதை அவர்கள் அறிவர்களோ இல்லையோ நீங்கள் அறிய வேண்டும். சிந்தித்து செயலாற்றுங்கள்.

மீடியாக்களே கொஞ்சம் போரடிங்க:

மீட்டியாக்களே உங்களுக்கான இந்த ரிகொஸ்ட் கேக்கரது கேக்காதது உங்கள் விருப்பம். மார்ச் முதல் மே வரை டீன் ஏஜ் வயதினர்கள் உங்களை   பார்க்கும் நேரம் நிச்சயம் நீங்கள் அறிவீர்கள் அந்த நேரத்தை அவர்கள் பார்க்கும்  நேரத்தினை உபயோகரமாக அவர்களுக்கு தெரிவியுங்கள் . மோட்டிவேசன், நல்ல சிந்தனை தூண்டக்கூடிய நிகழ்ச்சிகளை ஒலிப்பரப்புங்கள். என்னடா இது மீடியாக்ளுக்கே அட்வைஸான்னு யோசிக்காதிங்க. நாட்டின் நாலாவது பில்லர்கள் நீங்கள் ஆனால் நீங்களே உங்கள் பொறுப்புணர்ச்சியை கொஞ்சம் உணர்ந்தால் நன்று. மூன்று மாதம் கொஞ்சம் உங்கள் வீரியத்தை குறைத்து ஒலி, ஓளிப்பரப்பினால் நலம் பயக்கும்.

உணர்ந்து செயல்படுதல்

மாணவர்கள் அனைவருக்கும் அனைத்து தேவைகளுமே அவர்களேற்றார் போல் கிடைக்கும் என்று நாம் எதிர்ப்பார்க்க முடியாது ஆனால் அவர்களின் சமுதாயத்தில் ஒரு அங்கம். சமுதாயத்தில் உள்ள நாம் ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்கையின் ஒரு அங்கமாவோம் அதனை உணர்ந்து செயல்படுவோம். யார் வீட்டு பிள்ளைக்கு யாரென்ன செய்ய முடியும் என்ற சுய போக்கை நிறுத்துங்கள். ஊரார்வீட்டு பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் உங்கள் வீட்டு பிள்ளைகள் தானாக வளரும் சிந்துத்து செயல்படுவோம் நமது வீட்டு மாணவர்களின் வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் ஒளியாவோம்.

சார்ந்த பிரிவுகள்:

பெற்றோர்களே பெரியோர்களே மாணவர்களுக்காக கொஞ்சம் மெனக்கெடுங்க! 

தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் !

English summary
Article tells about Job exam tips for Students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia