எங்கு படிக்கலாம்? ஆடியோலஜி & ஸ்பீச் பேதாலஜி!

மருத்துவம் மட்டுமே மகத்துவம் வாய்ந்த படிப்பா என்றால் இல்லவே இல்லை. இது தவிர மருத்துவம் சார்ந்த நல்ல பணி வாய்ப்புகளைத் தரக்கூடிய படிப்புகள் ஏராளம் உள்ளன.

By Kani

மருத்துவம் மட்டுமே மகத்துவம் வாய்ந்த படிப்பா என்றால் இல்லவே இல்லை. இது தவிர மருத்துவம் சார்ந்த நல்ல பணி வாய்ப்புகளைத் தரக்கூடிய படிப்புகள் ஏராளம் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம். பாராமெடிக்கல் எனப்படும் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் ஸ்பீச் தெரபி முக்கியப் பங்கு வகிக்கிறது.

கம்பீரமான குரலுக்கு சொந்தகாரர் அவர் என பலர் கூறுவதை கேட்டிருப்போம். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் குரலுக்கான முக்கியத்துவம் என்ன என்று. ஆனால் உலகில் எல்லேருக்குமே கம்பீரமான குரல் அமைந்துவிடுவது இல்லை.

துரதிஷ்ட வசமாக பிறக்கும் போதே சிலருக்கு குரல் வளம், கேட்கும் திறன் இல்லாமல் போக வாய்ப்புள்ளது. சிலருக்கு விபத்து போன்ற காரணிகளினால் இது போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. இதற்கு தீர்வை கொடுக்கும் படிப்புதான் ஆடியோலஜி.

எங்கு படிக்கலாம்? ஆடியோலஜி & ஸ்பீச் பேதாலஜி!

3 ஆண்டுகளை கொண்ட பேச்சு மற்றும் காது சம்பந்தப்பட்ட மருத்துவப் படிப்பு ஆடியோலஜி என்றும், பேசும்திறனை மேம்படுத்தி முறைப்படுத்தும் படிப்பு 'ஸ்பீச் தெரபி' என்று அழைக்கப்படுகிறது.

பேசுவதில் தடுமாற்றம், பேச்சு உளறுதல், திக்கி திக்கிப் பேசுவது போன்ற குறைபாடுகளை முறைப்படி பயிற்சியின் மூலம் எவ்வாறு அகற்றுவது என கற்றுக்கொடுப்பது தான் 'ஸ்பீச் தெரபி'.

இதை முறையாக கற்றுக்கொள்வதின் மூலமாக பேசுவதில் உள்ள குறைபாடுகள், குரல் குறைபாடுகளை சரி செய்து கொள்ளலாம். குறியீடுகள், வார்த்தை மேம்பாடு, லிப் ரீடிங் போன்ற பல்வேறு உத்திகளைக் கையாளுவதின் மூலமாக ஸ்பீச் தெரபிஸ்டுகள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

படிப்புகள்:

இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் இந்த வகையைான படிப்புகளை வழங்கி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்த வகையான படிப்புகளான பி.எஸ்சி., ஸ்பீச் ஹியரிங், பி.எஸ்சி., ஆடியாலஜி அண்ட் ஸ்பீச் லாங்வேஜ் போன்ற பட்டப்படிப்புகளையும், மேற்படிப்புகளான எம்.எஸ்சி., ஸ்பீச் பேதாலஜி அண்ட் ஆடியாலஜி படிப்புகளையும் பயிற்றுவிக்கின்றன.

தகுதி:

டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளில் சேர பிளஸ் 2 தகுதி தேவைப்படுகிறது. பட்டப்படிப்பில் சேர அறிவியல் பிரிவில் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

இந்த வகையான படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

கற்பக விநாயகா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ், சென்னை

ஹோலி கிராஸ் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

கிரிஸ்டியன் மெடிக்கல் காலேஜ், வேலூர்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை

மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், காஞ்சிபுரம்

ஸ்ரீ ராமச்சந்திரா பிசியோதெரபி கல்லூரி, சென்னை

சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை, சென்னை

பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் & ரிசர்ச், கோயம்புத்தூர்

வேலை வாய்ப்பு:

இந்த துறையில் மூன்றாண்டு படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஸ்பீச் தெரபிஸ்ட், ஆடீயாலஜிஸ்டுகளாக பணியாற்ற முடியும்.

இது தவிர தனியாக நர்சிங்ஹோம்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பயிற்சி மையங்கள் போன்றவைகளை தொடங்கவும் முடியும். மேலும் பேசுவது தொடர்பான நிகழ்ச்சிகளிலும் கேட்கும் திறன் பற்றிய நிகழ்ச்சிகளிலும் நிர்வாகிகளாக கலந்து கொள்ள முடியும்.

சம்பளம்:

இத்துறையில் 3-5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெறும்பட்சத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் முதல் சம்பளமாக பெறலாம். தனியார் மருத்துவமனைகளிலும், வெளிநாடுகளிலும் சிறப்பான சம்பளம் தரப்படுகிறது.

எங்கு படிக்கலாம்? ஹாஸ்பிட்டாலிடி அட்மினிஸ்டிரேஷன்!எங்கு படிக்கலாம்? ஹாஸ்பிட்டாலிடி அட்மினிஸ்டிரேஷன்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Best Careers of 2018: Audiology and Speech-Language Pathology
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X