வேற வேலை தேடுறீங்களா? அதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சுகோங்க ...

வேலை ரொம்ப போர் அடிக்குதா...அப்படினா நீங்கள் அடித்தபடிக்கு செல்ல தயார் நிலையில் உள்ளீர்கள் என்று அர்த்தம்.

By Kani

வேலை ரொம்ப போர் அடிக்குதா...அப்படினா நீங்கள் வேலை தொடர்பா அடித்தபடிக்கு போக தயார் நிலையில் உள்ளீர்கள் என்று அர்த்தம். இல்லையென்றால் போனால் போகட்டும் என்று உங்களை பத்தோடு பதின்ஒன்றாக அலுவலகத்தில் விட்டு வைத்திருக்க வேண்டும்.

நண்பர் வீட்டில் அழகானப் பெண் கதவைத் திறக்கிறார்! நீங்கள் என்ன செய்வீர்கள்? இன்டர்வியூ கேள்விகள்!நண்பர் வீட்டில் அழகானப் பெண் கதவைத் திறக்கிறார்! நீங்கள் என்ன செய்வீர்கள்? இன்டர்வியூ கேள்விகள்!

இந்த இரண்டில் ஏதாவது ஒரு காரணமாகத்தான் இருக்க வேண்டும். இதை தவிர்த்து சிலருக்கு தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகளில் இது போன்ற எண்ணங்கள் தோன்றலாம்.

வேற வேலை தேடுறீங்களா? அதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சுகோங்க ...

எது எப்படியோ... புடிக்காத வேலைய தினமும் செய்யறது ரொம்ப ரொம்ப கஷ்டம். அதுக்கு பேசாம அந்த வேலையை விட்டுட்டு வேற வேலையை தேடுவது உசிதம்.

இதெல்லாம் ஓகே. வேலைக்கு லட்டர் போட்டதும் என்ன பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியது வரும் என்று தெரியுமா?

ராஜினாமா:

ராஜினாமா:


ராஜினாமா கடிதம் கொடுக்கும் போது, எவ்வளவு முடியுமோ அவ்வளவு மரியாதையுடன் பணிவுடன், விடை பெறுவது நலம். நிர்வாக விதிமுறைகளின் படி இறுதி அறிக்கை கொடுங்கள். இதோடு அடுத்து வருபவர்களுக்கு வேலையை பற்றி கற்றுத் தருவதாகவும் உறுதியளியுங்கள்.

பணம்:

பணம்:


மணி என்றால் கோவிலில் கட்டுவார்களே.. அந்த மணி அல்ல. பணம். ஆம் நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், ஏதாவது ஒரு வேலையில் இருந்தால்தான் இந்த உலகம் உங்களை மதிக்கும் என்பதை மறவாதீர்கள்.

வீட்டில் எந்த வித பிரச்னை இல்லை என்றாலும், பக்கத்து வீடு, உறவினர்கள் என அனுதினமும் நீங்கள் சந்திக்கும் விதவிதமான கேள்விக்கு ஏதாவது ஒரு வேலைக்கே போய்விடலாம் என்று தோன்றும். இதை விட பணம் ஒரு முக்கியமான காரணி என்பதை மறக்காதீர்கள். இதை முன்னதாக திட்டமிட்ட பின்பு வேலையை விடலாம்.

 

ஸ்டேட்டஸ்:
 

ஸ்டேட்டஸ்:


இதுவும் நீங்க நினைக்கும் படி அதுவல்ல. இன்றைய இளைஞர்கள் தங்களை எண்ணங்களை நண்பர்களுக்கு தெரிவிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப், பேஸ் புக் போன்ற ஸ்டேட்டஸ் தான்...

நமக்கு ஒரு வேலை பிடிக்கவில்லை என்றதும், புடிக்கலைன்றத இணையத்துல ஊருக்கே தெரியற மாதிரி எழுதறது ரொம்ப தப்பு. நாம் நினைக்கும் படி ஒட்டு மொத்த நண்பர்களும் வேலையில் இருப்பதில்லை. விஐபி சங்கத்துக்கு புதுசா ஒரு ஆள் வருது என்று வரவேற்புகள்தான் அதிகமாக இருக்கும்.

இதையெல்லாம் விட அடுத்த வேலை தேடும் போது இந்த விவகாரங்களை எல்லாம் புதிய நிர்வாகம் அலசி ஆராயும் என்பதையும் மறக்க வேண்டாம்.

 

டைம்:

டைம்:


இது ரொம்ப, ரொம்ப முக்கியம் எப்போ வேலையை விட நினைக்கிறீர்களே, அந்த நிமிடத்தில் இருந்து சரியான நேரத்துக்கு எழுந்து ஆபிஸ் போகும் வழியை பாருங்க. நீங்கள் எப்போது வேலையை விட நினைக்கிறீர்களே அப்போதே நிர்வாகத்தின் நிழல் எதிரியாக சித்தரிக்கப்படுவீர்கள்.

பிடிக்காதவன் என்றால், "கை பட்டா குத்தம் கால்பட்டா குத்தம்" என்பார்கள். இதே வேலை செய்பவர் (பிடித்தவர்கள்) என்றால் எதைச்செய்தாலும் அமோகமான வரவேற்பு அளிப்பார்கள். இதுதான் உலகம் எனவே நேரத்தில் கவனமாக இருங்கள்.

 

பணியின் மீது கவனம்:

பணியின் மீது கவனம்:


உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை சரியான நேரத்திற்குள் முடிக்க திட்டமிடுங்கள். அப்படி இது வரை செய்ததே இல்லை என்றால்... தினம் தினம் தீபாவளிதான் என்பதை மறக்காதீர்கள். உங்களுக்கான வேலையை முடிக்கும்பட்சத்தில் உங்களை யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள்.

நடத்தையில் கவனம்:

நடத்தையில் கவனம்:


என்ன லைனா கவனம், கவனம் என்று வருகிறதே என்ற கேள்வி வருகிறதா... இது ரொம்ப முக்கியமான ஒன்று நீங்கள் வேலை விட நினைத்த மறு நிமிடம் ஒரு குரூப் இவனுக்கெல்லாம் எவன் வேலை கொடுக்கப்போறான் என்று எண்ணுவார்கள், மறுபுறம் என்ன பெரிய வேலை கெடச்சிருக்கோ இந்த வேலையை விடப்போறானாம் என்பார்கள்.

ஆக மொத்தம் "உரலுக்கு ஒருபக்கம் இடி உலக்கைக்கு இரண்டு பக்கமும் இடி" என்பது போல் இந்த இரு தரப்பினரையும் சமாளிக்க வேண்டும். இல்லை என்றால் வேலையை விட்டதும் மனநோய் மருத்துமனைக்குதான் போக வேண்டும்.

 

விட்டுக்கொடுங்கள்:

விட்டுக்கொடுங்கள்:


நட்புக்காக விட்டுக்கொடுங்கள், ஆனால் எந்த நேரத்திலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காதீர்கள், இருக்கா இல்லையானே தெரியவில்லை என்ற கேள்வி எழுந்தாலும் விட்டுக்கொடுக்காதீர்கள்.

முன்பை விட நண்பர்களிடம் நேரம் செலவழிக்க முற்படுங்கள். இல்லை என்றால் ஏதோ பெரிய வேலை கிடைத்துவிட்டது என்று மதிக்காமல் இருக்கிறான் என்ற பேச்சு எழ ஆரம்பிக்கும். இதை எல்லாம் முன்கூட்டியே தடுக்க யோசனை மேற்கொள்ளுங்கள்.

 

கனெக்ட்:

கனெக்ட்:


இறுதியாக வேலை தொடர்பான நண்பர்களின் வாட்டாரத்தை பலப்படுத்துங்கள். இது அடுத்ததாக எளிதாக வேலை தேட உதவும். மேலும் உங்களுக்கு வேலை இல்லையே என்ற கவலையில் இருந்து சிறிது நிம்மதியை கொடுக்கும் என்பதை மறக்காதீர்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Before You Quit, Consider These eight Things
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X