ஆபிஸில் ஹானஸ்டாக இருங்க உங்களை ஹானராகும் உங்கள் ஆபிஸ்

Posted By:

வேலை செய்யும் இடத்தில் விஸ்வாசமா இருக்கலாம். ஆனால் வீனா விளைபோக கூடாது.

நீங்கள் எங்க வேண்டுமானாலும் வேலை செய்யுங்கள் ஆனால் உண்மையாக இருங்கள் நீங்கள் வாங்கும் சம்பளத்துக்கு உண்மையாக இருங்கள். இன்றைய காலகட்டத்திற்கேற்ப சுமார்டாக கற்றுகொள்ளுங்கள் தவறுகள் ஏதேனும் இருந்தால் திருத்திக் கொள்ளவும். வேலை செய்யும் இடத்தில் வாங்கும் சம்பளத்திற்கேற்ப உழையுங்கள் உங்களின் அந்த டெடிகேசன் உழைப்பில் உள்ள தெளிவு உங்களை உயரம் தூக்கிச் செல்லும்.

உங்கள் ஆபிசில் எப்பொழுதும்  கூலாக வேலை செய்ய தயாரக இருங்க சுதந்திரமாக சிந்தியுங்கள் புதுபுது ஐடியாக்களை  எப்பொழுதும் சேகரிக்க வேண்டும்.  நீங்கள் உங்கள் வேலையில் பர்பெக்சனிஸ்டாக இருக்கிறீர்கள் எனில் நீங்கள் எங்கே  போனாலும் எதை பார்த்தாலும் உங்கள் மனது ஐடியாக்களை உற்றெடுக்கும் அருவியாக இருக்கும். 

விஸ்வாசம் விலைபோதல் :

இந்த உலகில் மார்கெட்டிங், விலைபோதல் என்ற கொள்கையால் விஸ்வாசம் விற்றுப்போதல் நடக்கின்றது. நீங்கள் என்னதான் சரியான உழைப்பாளியாக இருந்தாலும் உங்கள் நிறுவனப் போட்டியாளர்கள் உங்களிடம் நிறுவனத் திட்டங்களை தெரிந்து கொள்ள உங்களை விலைப் பேசவோ அல்லது உங்களை விலைப் போக வைக்கவோ முயற்சி செய்வார்கள் அது குறித்து சிந்தித்து செயல்படவும். பணத்திற்க்காக உங்கள் அலுவலகத்திலேயே ஒரு டீமுக்கும் மற்ற டீமுக்கும் இடையே மோதல் உண்டாகி குழுவுக்கு நடுவில் நீங்கள் எரிந்து குளிர் காய வைக்காதிர்கள். எப்பொழுதும் அலுவலகத்தில் இருக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

வேலையிடத்தில் வேண்டாத வேலை:

உங்கள் பணியிடத்தில் உங்களுடன் பணியாற்றும் சக ஊழியர்களுக்கு மரியாதை கொடுங்கள் நீங்களும் அவரும் இணைந்து செயல்பட்டால் உங்கள் டீமின் செயல் வேகம் அதிகரிக்கும். ஒரே குழுவுக்குள் தேவையற்ற மன கசப்புகளை உருவாக்காதீர்கள் உண்மையாக இருக்க முடியவில்லையென்றால் உங்களால் அந்த குழுவுக்குள் ஒற்றுமை இருக்காது என்பதை தெளிவாக புரிந்து செயல்படவும். குழு உறுப்பினர்களை பற்றி அடுத்த குழுவில் பேசி தேவையற்ற பிரச்சனையை கிளப்ப வேண்டாம்.வேலை நேரத்தில் தூங்குவது ஆர்வமில்லமல் இருப்பது  சரியானது அனுகுமுறையில்லை. 

சீனியர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து பின்ப்பற்றவும்:

உங்கள் நிறுவனத்தில் உங்களேடு வேலை செய்யும் சீனியர்களுக்கு தேவையான மரியாதையை கொடுக்கவும். சீனியர்கள் என்றாலே தேவையற்ற சீன்கள் இருக்கத்தான் செய்யும் அதனை கவனிப்பது உங்கள் வேலையில்லை. அதற்கு பதிலாக சீனியர்களின் அனுபவங்களை கற்று கொண்டு செய்கின்ற வேலை சிறந்து செயல்படுங்கள்.

சீனியர்கள் நம்மைப் போல் அந்த துறையில் புதிதாக வந்து அடிப்பட்டு ஒவ்வொரு வேலையையும் எப்படி எளிதாக செய்வது என்று கற்று அதன்படி செய்து கொண்டிருப்பார்கள். அவர்களை பின்ப்பற்றுங்கள் தவறில்லை கற்றது எப்பவும் கையளவு என்று நினைக்கும் மனம் சீனியர் , ஜூனியர் என்ற பாகுபாடு பாக்காமல் கற்க தயாராகும்.

 

சீனியர்கள் கவனத்திற்கு :

பணியிடத்தில் நீங்கள் சிறப்பான பணியாற்றுபவராக இருக்கலாம் அந்த சிறப்பு என்றும் அழகானது. நீங்கள் சீனியாராக இருக்கும் பொழுது வேலை கற்று கொடுக்கவும், சில நுணுக்கங்களை கற்று கொடுக்கும் பொறுப்பு உங்களுடையதாக இருக்கும் பொழுது நீங்கள் கற்றதை உங்களுடன் பணியாற்றுவோர்க்கு கற்றுக் கொடுக்கவும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்குள்ள நல்ல அனுபவங்களை கற்றுக் கொடுக்கும் பொழுது அது உங்களுக்கு மேலும் பலம் அளிக்கும். உங்கள் மீது நல்ல மரியாதை வரும் ஆனால் சரியான புரிதல் இல்லாமல் ஆபிசில் உங்களுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உங்களை சக்தி வாய்ந்தவராக நீங்கள் காட்டும் பொழுது உங்களுடன் பணியாற்றும் சக ஊழியர்க்கு உங்கள் மீது பிடிப்பற்ற நிலை ஏற்படும் இதனை நன்கு புரிந்து செயல் பட வேண்டியது ஆபிஸ் சீனியர்களுக்கான அறிவுறுத்தலகளாகும்.

செய்யும் பணியில் சுத்தம் :

ஓடி உழைக்கும் உங்கள் வேலையில் என்றும் சுத்தம் இருக்க வேண்டும். கம்பிளிட்னஸ் இருக்க வேண்டும். செய்யும் வேலையில் முழுமை இருக்கும் பொழுது உங்கள் மேல் நிர்வாகத்தில் ஒரு மகிழ்ச்சியும் நல்ல நம்பிக்கை ஏற்படும். நீங்கள் புதிதாக என்ன ஐடியா கொடுத்தாலும் ஆபிஸ் உங்களுக்கு சப்போர்ட் செய்ய தயாராகும்.

சுமார்டாக எடை போடுங்கள்:

உங்கள் ஆபிசில் யாரையும் எளிதில் எடுத்துக்க வேண்டாம். எப்பொழுது வேலை, உடன் வேலை செய்யும் கொலிக், வேலையில் ஏற்பட போகும் சிக்கல்கள் குறித்த பார்வை அத்துடன் சிக்கல்கள் தீர்ப்பதில் இருக்க வேண்டிய தெளிவுடன் இருங்கள். வாயாடலை எப்பொழுதும் அளவோடு வைத்திருங்கள் தேவையற்ற கருத்துக்களையும், கோவங்களையும் பணியிடத்தில் காட்டாதீர்கள். எப்பொழுதும் ஆபிசில் உங்களது பர்சனல் குறித்து சிந்திக்காதிர்கள் அது சரியான போக்கு இல்லை. நீங்கள் செய்யும் வேலையில் சுமார்டாக இருந்தால் மட்டும் போதாது. பழகுவதிலும் சுமார்டாக இருங்கள்.

சார்ந்த பதிவுகள்:

ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட எத்தனை இலட்சம் சம்பளம் தருகிறார்கள் தெரியுமா?

English summary
Article tells about tips for workers

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia