எதில், எவ்வளவு போதை..? கலக்கலாம் காக்டெயில் துறையில்!

மது பாட்டில்களை தூக்கிப் போட்டுப் பிடித்தும், கன்னாபின்னாவென சுழற்றியும் விருந்தினர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறவர்களே பார் டெண்டர்கள்.

By Kani

மது பாட்டில்களை தூக்கிப் போட்டுப் பிடித்தும், கன்னாபின்னாவென சுழற்றியும் விருந்தினர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறவர்களே பார் டெண்டர்கள். மனதை மயக்கும் வகையில் மதுவை மிக்ஸ் பண்ண தெரியுமா? உங்களுக்கான துறைதான் இது.

எதில், எவ்வளவு போதை..? கலக்கலாம் காக்டெயில் துறையில்!

இந்த துறையை பொருத்தமட்டில் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் புது அனுபவங்களை பெறலாம். ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடம். வாழ்க்கையின் கடைசி நொடி வரைக்கும் கத்துக்கிட்டே இருக்க ஏராளமான விஷயங்கள் கொட்டிக்கிடக்கும் துறை கூடவே வேலை வாய்ப்புகளும் உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை உண்டு.

கண்ணாடி பாட்டில்கள்...

கண்ணாடி பாட்டில்கள்...

நெருப்புனு பார் டெண்டருக்கு ஆபத்தான பொருட்களை ரொம்ப சாமர்த்தியமா கையாளத் தெரிஞ்சிருக்கணும். கொஞ்சம் கவனம் பிசகினாலும் ஆபத்து...

ஜிக்ளிங்னு சொல்லக்கூடிய சின்னச் சின்ன ஏமாற்று வித்தைகள் தெரிந்து வைத்திருப்பது கூடுதல் தகுதி.

இந்தத் துறையை பொருத்தமட்டில் ஸ்கூலிங் முடிச்சதும் புத்தகங்களைப் மட்டும் படிச்சுத் தெரிஞ்சுக்கிலாம் என நினைப்பதை விட அனுபவத்துல தெரிஞ்சுக்க வேண்டியது மிக அவசியம். தற்போது இதற்கான படிப்புகள் டிப்ளமோ, சான்றிதழ், போன்ற பல்வேறு முறைகளில் கற்பிக்கப்படுகின்றன.

 

தனித்திறமைகள்:

தனித்திறமைகள்:


  • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் நான் என்னை அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும்.
  • எப்போதும் ஆடியன்ஸூக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிற வகையில புது ட்ரிக்குகளை தயாரா வச்சிருக்கணும்.
  • புதுசு புதுசான ட்ரிக்ஸ் கற்றுக்கொள்ள வேண்டும். ஆடியன்ஸை போரடிக்காம பார்த்துக்கணும்.
  • ஆல்கஹால் இண்டஸ்ட்ரியை பத்தி முழுமையா தெரிஞ்சிருக்கணும்.
  • ஆல்கஹால் பிராண்டுகளை பத்தி... அதோட இன்க்ரீடியன்ட்ஸ் பத்தி... கலவையைப் பத்தியெல்லாம்கூட தெரிஞ்சு வச்சிருக்கணும்.
  • பல்வேறு நாடுகளில் பார் டெண்டிங் கலாசாரம் எப்படியிருக்கு?
  • லேட்டஸ்ட் டிரெண்ட் என்னனு விரல் நுனியில தகவல் இருக்கணும்.
  • கெஸ்ட் கிட்ட எப்படி பேசணும், பழகணும்கிறது ரொம்ப முக்கியம்.
  • வேலை நேரம்:

    வேலை நேரம்:


    இவ்வளவு நேரம்தான் வேலை பார்க்கணும்னு எங்களுக்கு எந்த விதியும் கிடையாது. பல நேரங்கள்ல தொடர்ச்சியா 20 மணி நேரம்கூட வேலை பார்க்க வேண்டியிருக்கும்.

    கோர்ஸ் பீஸ்:

    கோர்ஸ் பீஸ்:


    டிப்ளமோ படிப்புகள் ரூ.40,000 ஆயிரம் முதல் 70,000 வரை பயிற்றுவிக்கப்படுகின்றன. சர்டிபிகேட் கோர்ஸ் ரூ.9000 முதல் ரூ.20,000 ஆயிரம் வரை. வெளிநாடுகளில் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை பயிற்றுவிக்கப்படுகின்றன.

    வேலை வாய்ப்புகள்:

    வேலை வாய்ப்புகள்:


    பார்டெண்டிங்கில் செய்யப்படும் சாகசங்களுக்கு உலகம் முழுக்க உண்டு ரசிகர் பட்டாளம் உண்டு. மயக்கும் மது பாட்டில்களுடனும், மிரட்டும் தீப்பிழம்புகளுடனும் சர்வசாதாரணமாக ஹோட்டல், பார், ரெஸ்டரென்ட், கப்பல், என பல்வேறு இடங்களில் சாகசம் செய்யலாம். பார்டெண்டரின் சராசரி சம்பளம் ரூ.1 லட்சத்தில் இருந்து 2 லட்சம் வரை இருக்கும். இதுவே எக்ஸ்பேர்ட் ஆகும் போது ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை பெறலாம்.

இந்தியாவில் உள்ள சிறந்த நிறுவனங்களின் பட்டியல்:

நிறுவனம்கோர்ஸ்தகுதி நகரம் இணையதளம்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பார் டெண்டிங்டிப்ளோமா இன் பார் டெண்டிங்

கிராப்ட் மேன்ஷிப் கோர்ஸ் இன் பார் டெண்டிங்

சர்ட்டிபிகேட் கோர்ஸ் இன் வைன்ஸ் & ஸ்பிரிட்ஸ்

சர்ட்டிபிகேஷன் கோர்ஸ் இன் பார் பிளேயர்

பார் பிளேயரில் சான்றிதழ் படிப்பு

10 +2 சென்னை http://iibtindia.com/
துலேஹோ வைன் அகாடமிசர்ட்டிபிகேட் இன் புரபஷனல் பார்டெண்டிங் 10 +2 பெங்களூர் http://tulleeho.com/
லிக்வியூட் ஆர்ட் பார்டெண்டிங் ஸ்கூல்சர்ட்டிபிகேட் கோர்ஸ் இன் பார்டெண்டிங்

சர்ட்டிபிகேட் கோர்ஸ் இன் புரபஷனல் பார்டெண்டிங்

சர்ட்டிபிகேட் கோர்ஸ் இன் மிக்ஸாலஜி அண்ட் பேஸிக் புரபஷனல் ஃப்ளேர் பார்டெண்டிங்

அட்வான்ஸ் ஃப்ளேர் பார்டெண்டிங்
ஃப்ளேர் பார்டெண்டிங் சர்ட்டிபிகேட் கோர்ஸ் இன் பேஸிக் பார்டெண்டிங்

10 +2 ஹைதெராபாத் http://www.liquidartbarschool.com/
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் பார்டெண்டிங்புரபஷனல் பார்டெண்டிங் கோர்ஸ்
புரபஷனல் பார்டெண்டிங் டீம் லீடர் கோர்ஸ்
மாஸ்டர் பார் மேனேஜ்மென்ட் கோர்ஸ்
டிப்ளமோ ஹோட்டல் மேனேஜ்மென்ட் & கேட்டரிங்
10 +2 சென்னை http://www.liquidartbarschool.com/

பார் டெண்டராகறதுனு முடிவு பண்ணிட்ட நீங்களாகவே இந்தக் கலையில் திறமைகளை வளர்த்துக்கொள்ளலாம். யூடியுப், பல்வேறு வகையான இணையதளங்கள் மூலம் கற்றுக்கொள்ளலாம்.

வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்:

நிறுவனம்கோர்ஸ் சிட்டி
இணையதளம்
யுரோப்பியன் பார்டென்டர் ஸ்கூல்இன்டெர்நேஷனல் பார் டெண்டிங் கோர்ஸ் (4 வாரம்)

மிக்ஸாலஜி கோர்ஸ்(2 நாள்)
அட்வான்ஸ் பார் டெண்டிங் கோர்ஸ் (10 நாள்)

லாஸ் வேகாஸ், நியூயார்க், சிட்னி,பெர்லின், மிலன், ஃபூகெட் மற்றும் பல இடங்களில் http://www.barschool.net/
போல்ஸ் பார்டெரிங் அகாடமிகாக்டெய்ல் அறிமுகம், அடிப்படை பார்டெண்டிங், அட்வான்ஸ் பார் டெண்டிங், மாஸ்டர் பார்டெண்டிங், இன்டெர்நேஷனல் பார் மேனேஜ்மென்ட், குரூப் கோர்ஸ்ஆம்ஸ்டர்டம் http://bolsbartendingacademy.com/
இன்டெர்நேஷனல் பார் டெண்டிங் ஸ்கூல் பார் டெண்டிங் கோர்ஸ்/மிக்ஸாலஜி (40 மணி நேரம்)
பார் டெண்டிங் எஸ்ஷென்சியல் சர்ட்டிபிகேட் கோர்ஸ் (10 நாள்)
நியூ ஜெர்சி http://aaabartending.com/schedule/
எலிமெண்டல் மிக்ஸாலஜி, லாஸ் ஏஞ்சல்ஸ்அட்வான்ஸ்டு 24 மணி நேர புரபஷனல் பார்டெண்டிங் கோர்ஸ்போர்ட்லேண்ட், யுஎஸ் http://www.elementalmixology.com/
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Be a Mutlitasker: Be a 'Bartender'
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X