கொட்டிக் கிடக்கும் வங்கி வேலை வாய்ப்புகள்

Posted By:

தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதரணமாகதான் தோன்றும். அது போகட்டும் திறமைக்கு வேலையுண்டா என்றால்,, உண்டு ....

கொட்டிகிடக்கும் வங்கிப் பணிகள் குறித்து அறிந்து கொள்வோம்

வங்கிப் பணி என்பது பலருடைய வாழ்வில் விருப்பமான ஒன்றாகும். இந்தியாவில் லட்சகணக்கானோர் வங்கிப் பணிக்கு விண்ணப்பித்து படித்து கொண்டிருக்கின்றனர் அது குறித்து பலருக்கு தெரியும், பலருக்கு வங்கிப்பணி குறித்த பார்வை குறைவாக உள்ளது.

ஐபிபிஎஸ் என அழைக்கப்படும் இன்ஸ்டியூட் பேங்கிங் பர்சனல் செலக்ஸன் என்ற அமைப்பு வங்கி பணிகளுக்கான தேர்வினை நடத்தி வருகின்றது. ஐபிபிஎஸ் அமைப்பின் கீழ் மொத்தம் 20 வங்கிகள் அடங்கும் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கித் தேர்வினை எழுதுவோர்களுக்கு அனைத்து அறிவிப்புகளையும் பெற ஐபிபிஎஸ் தளத்தினை பின்ப்பற்ற வேண்டும்.

ஐபிபிஎஸ் தளத்தினை தொடர்ந்து பாலோ செய்து உங்களுக்கான வாய்ப்பினை பெற கேரியர் இந்தியா தமிழ் என்னும் கற்றல் தளத்தில் நாங்கள் உதவுகிறோம்.

ஸ்டேட் பேங் ஆப் இந்தியா :

இந்தியாவின் மிகபெரிய வங்கியான ஸ்டேட் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்புகளும் வருடம் தோறும் ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பணி, கிளாரிக்கல் பணி அத்துடன் துறை சார்ந்த பணிகளுக்கான வங்கி வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்படுகின்றது.

பிற வங்கிகள் :

இந்தியாவின் ஐபிபிஎஸ் அத்துடன் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவோடு ஆர்பிஐ எனப்படும் இந்திய தேசிய வங்கி பணியடங்கள் அத்துடன் ஆர்ஆர்பி போன்ற ரீஜினல் ரூரல் பேங்க், கோ ஆப்ரேட்டிவ் வங்கி என அழைக்கப்படும் கூட்டுறவு வங்கிகள் அத்துடன் சிறப்பு வங்கிகளான மகளிர்களுக்கான மகிளா வங்கி மற்றும் தனியார் வங்கிகள் என நாட்டில் வங்கிப் பணிக்களுக்கான வாய்ப்பு என்றும் பெருகிய வண்ணமே உள்ளது. மேலும் வங்கிப்பணிக்கு மணிப்பால் பல்கலைகழகத்தில் பயிற்சி அளித்தும் வேலை வாய்ப்பு வழங்கும் முறையும் உள்ளது

வங்கிப்பணி :

வங்கிப்பணி கனவு கொண்டவர்களின் அடிப்படைத் தகுதியாக ஒரு பட்டப்படிப்பை அதிகாரப்பூர்வ கல்வி நிறுவனங்களில் படித்து முடித்திருக்க வேண்டும்.

வங்கிப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமா நீங்கள் கணிதத்தில் புலியாக இருக்க வேண்டும் அதாங்க ஆப்ஸை நீங்கள் சார்டாக போட்த் தெரிந்தவராக இருக்க வேண்டும். இட் மீன்ஸ் டைமுக்கு முடிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். அடிப்படை கல்வியுடன் பொது அறிவு இருந்தால் போதுமானது நீங்கள் பயிற்சி செய்யும் பொழுது மற்ற அனைத்து ஸ்கில்லும் ஒட்டிக்கொள்ளும்.

ரீசனிங் மற்றும் சாப்ட் ஸ்கில் எனப்படும் ஆளுமை திறன் போன்றவை தொடர்ந்து படிக்கும் பொழுது உங்களுடன்  ஒட்டிக்கொள்ளும். 

வங்கிப் பணிக்கான  ஆன்லைன் தேர்வு:

வங்கிப்பணிகளுக்கான தேர்வுகள் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைனில் நடத்தப்படுகின்றது. ஆன்லைனில் வங்கி பணிக்கான முதண்மை தேர்வு முடிந்த பிறகு அந்த தேர்வில் வெற்றி பெறுபெற அடிப்படை கட் ஆப்களின் படி தேர்வு பெற்றவர்கள் அடுத்த நிலைக்கு ஆன்லைன் தேர்வு வைத்து தேர்வு செய்யப்படுவாகள் பின் குழு விவாதம் நேரடி தேர்வு என தேர்வர்களின் மூலம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தொடர்ந்து வங்கி பணிகளுக்கான அனைத்து வாய்ப்புகளையும் அந்த வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் பார்ப்போம்.

சார்ந்த பதிவுகள் :

ஐபிபிஎஸ் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சிண்டிகேட் வங்கி பிஒ பணிக்கான வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது

English summary
here article tells about Bank Exams tips

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia