ஐபிபிஎஸ் கிளார்க் வங்கித் தேர்வை தமிழில் எழுதலாமா...?

ஐ.பி.பி.எஸ். (Institute of Banking Personnel Selection) எனப்படும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் நடத்தும் கிளார்க் தேர்வை தமிழ் உள்ளிட்ட இதர மொழிகளில் எழுதலாமா என்ற கேள்வி தேர்வர்களிடையே உள்ளது. இதற்கு பதில் என்னவென்று கேட்டால் ஆமாம். இந்தத் தேர்வை தமிழில் எழுதலாம் என்பதுதான்.

வங்கித் தேர்வுகளில் வெற்றி பெற்று வங்கி அதிகாரியாக பணியில் அமரவேண்டும் தற்போது இளைஞர்கள், இளைஞிகளின் கனவாகவும், லட்சியமாகவும் உள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆண்டுதோறும் வங்கித் தேர்வுகளை எழுதி வருகின்றனர். இதில் ஒரு சில ஆயிரம் இளைஞர்களே வங்கித் தேர்வுகளில் வெற்றி பெறும் நிலை உள்ளது.

நாட்டில் எஸ்பிஐ, இந்தியன் வங்கியன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என ஏராளமான பொதுத்துறை வங்கிகளும், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகளும் உள்ளன.

வங்கித் தேர்வுகள் என்பது இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் அரசாங்க வேலையாக உள்ளது.. இந்த விரும்பத்தக்க வேலைகளைப் பெறுவதற்கான நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் இந்தத் தேர்வுகளுக்கு ஆண்டுதோறும் தயாராகி வருகின்றனர்.

ஐபிபிஎஸ் கிளார்க் வங்கித் தேர்வை தமிழில் எழுதலாமா...?

பல வங்கித் தேர்வுகள் ஆண்டு முழுவதும் பல்வேறு வங்கிகள் மற்றும் ஐபிபிஎஸ் போன்ற முகமைகளால் நடத்தப்படுகின்றன. எஸ்பிஐ பிஓ, எஸ்பிஐ கிளார்க், ஐபிபிஎஸ் கிளார்க், ஐபிபிஎஸ் பிஓ, ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி, ஆர்பிஐ அசிஸ்டென்ட், ஆர்பிஐ கிரேடு பி மற்றும் நபார்டு கிரேடு ஏ ஆகிய வங்கித் தேர்வுகள், ஆர்வலர்கள் பங்கேற்கும் மிகவும் பிரபலமான வங்கித் தேர்வுகளாக உள்ளன.

இந்தியா முழுவதும் நடத்தப்படும் அனைத்து வங்கித் தேர்வுகளிலும், எளிதான வங்கித் தேர்வாக இருப்பது ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி - பிராந்திய கிராமப்புற வங்கித் தேர்வு மற்றும் ஐபிபிஎஸ் கிளார்க், எஸ்பிஐ கிளார்க் போன்ற எழுத்தர் தேர்வுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முயற்சியிலேயே இதுபோன்ற வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற விண்ணப்பதாரர்கள் முழுமையாக தயாராக வேண்டும். அதாவவது போதுமான பயிற்சி, பாடத்திட்டத்தை முழுமையாகப் படித்தல், பல்வேறு வினாத்தாள்களை படித்து மாதிரித் தேர்வுகள் எழுதுதல் போன்ற தயாரிப்பு உத்தியைக் கொண்டிருக்க வேண்டும், போதுமான முன் தயாரிப்பு மற்றும் ரிவிஷன் செய்வதன் மூலமும் இந்தத் தேர்வை முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக முடிக்க முடியும்.

சிறப்பானத் திட்டமிடல், முழுமையான பயிற்சி இருந்தால், அனைத்து எழுத்தர் தேர்வுகளிலும் எளிதில் வெற்றி பெறலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் காலியிடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வெவ்வேறு வங்கித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

இப்போதெல்லாம், தேர்வர்கள் வங்கித் துறையில் ஒரு வருங்கால வாழ்க்கையை எதிர்பார்த்து நுழைகின்றனர். தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் இறுதிப் பட்டியலில் இடம் பெற, வங்கித் தேர்வுக்கு எழுதுவோர் நன்கு தயாராக வேண்டும். இந்தத் துறையில் தங்கள் வாழ்க்கையை சிறப்பாகச் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு வங்கித் துறை ஒரு நல்ல தொழில் வாய்ப்பை வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

நாட்டில் பல்வேறு வங்கித் தேர்வுகள் மூலம், பல்வேறு பிராந்திய மற்றும் பொதுத்துறை வங்கிகளில் ப்ரோபேஷனரி ஆபீசர் (பிஓ), கிளார்க் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் (எஸ்ஓ) போன்ற பல்வேறு பதவிகளுக்கு லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுகிறார்கள். பல்வேறு வங்கித் தேர்வுகளின் சிரம நிலை பதவிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது. புரொபேஷனரி ஆபீஸர்/ செக்ஷன் ஆபீஸர்(PO/SO) பதவிகளில் உள்ள பல்வேறு வங்கிகளுக்கான தேர்வு பொதுவாக ப்ரீலிம்ஸ், மெயின்ஸ் மற்றும் நேர்காணலின் அடிப்படையில் செய்யப்படுகிறது. எழுத்தர் நிலை பதவிகளுக்கு, முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது.

ஐபிபிஎஸ் கிளார்க் வங்கித் தேர்வை தமிழில் எழுதலாமா...?

அனைத்து வங்கித் தேர்வுகளிலும், ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி-ரீஜினல் ரூரல் பேங்க் தேர்வுகள் வெற்றி பெற மிகவும் எளிதானது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

IBPS RRB அதிகாரிகள் அளவுகோல் I, II மற்றும் III மற்றும் அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) ஆட்சேர்ப்புக்காக நடத்தப்படுகிறது.

வங்கி பணியைப் பொறுத்தவரை பெரும்பான்மையான பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ஐ.பி.பி.எஸ். (Institute of Banking Personnel Selection) என்ற அமைப்பு மூலமாக எழுத்தர் (Clerk) மற்றும் வங்கி அலுவலர் (Probationary Officer) ஆகிய இரு பணிகளுக்குக்கான போட்டித் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் தேர்ந்தெடுக்கின்றன. இவை மட்டுமல்லாது இந்திய ரிசர்வ் வங்கியில் (Reserve Bank of India) உதவியாளர் மற்றும் Grade-B அலுவலர் பணிகளுக்கும் போட்டித் தேர்வு மூலமாகத் தேர்வுசெய்யப்படுகின்றனர். மேலும், வங்கி பணிகளில் பொறியியல், விவசாயம், சட்டம் மற்றும் கணினி பட்டதாரிகளுக்குப் பிரத்தியேகமாகச் சிறப்பு அலுவலர் (Specialist Officer) தேர்வும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகளுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மட்டும் தனக்கான பணியாளர்களைப் பிரத்தியேகமாகத் தனித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுந்து பணியில் அமர்த்துகிறது.

மேற்கண்ட அனைத்து அலுவலர் நிலை (Officer Rank) தேர்வுகளுக்கும் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம்(சிலபஸ்) ஏறத்தாழ ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்தர் தேர்வில் எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற இரு நிலைகளிலும், அலுவலர்களுக்கான தேர்வில் முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு, நேர்காணல் மற்றும் குழு விவாதம் என்ற நான்கு நிலைகளில் தேர்வு நடைபெறும்.

ரிசர்வ் வங்கி அலுவலர் தேர்வுக்கான தேர்வு முறை மட்டும் மேற்கண்ட தேர்வு முறைகளில் இருந்து சற்று வேறுபட்டு காணப்படுகிறது. எழுத்தர் மற்றும் வங்கி அலுவலர் ஆகிய இரண்டு தேர்வுகளுக்குமே குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக இளங்கலை பட்டப்படிப்பு அவசியம்.

வங்கித் தேர்வில் ஆங்கில மொழியறிவு, கணிதத் திறன், தர்க்கத் திறன் மற்றும் பொதுஅறிவு மற்றும் தற்கால நடப்புகள், கணினி அறிவியல் ஆகிய ஐந்து பகுதிகளில் கேள்விகள் கேட்கப்படும். வங்கித் தேர்வுக்குத் தயார் செய்ய பேங்கிங் சர்வீஸ் கிரானிக்கல் (www.bscacademy.com ), பேங்கிங் டுடே (www.bankexamstoday.com), பிரத்தியோகிதா தர்பன் ( www.pdgroup.upkar.in) உள்ளிட்ட மாத இதழ்கள் உறுதுணையாக அமையும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இவை மட்டுமல்லாமல் சென்ற ஆண்டில் கேட்கப்பட்ட வங்கித் தேர்வு கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் விளக்கங்களை உள்ளடக்கிய சிறந்த புத்தகங்களும் மார்க்கெட்டில் நமக்குக் கிடைக்கின்றன. எழுத்துத் தேர்வில் தேறியவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுப் பொருளாதாரம், வங்கித் துறை தொடர்பான கேள்விகள், பொது அறிவு மற்றும் ஆளுமைத்திறன் ஆகியவை தொடர்பான கேள்விகள் கேட்கப்படும் நேர்காணலால் சோதிக்கப்படுவார்கள். அதன் தொடர்ச்சியாகக் குழு விவாதத்தில் பங்கேற்கச் செய்து அவர்களின் ஆளுமை மற்றும் தகவல் தொடர்புத் திறன் சோதிக்கப்படுகிறது.

பிரதானத் தேர்வு, நேர்காணல் மற்றும் குழு விவாதம் ஆகிய மூன்று நிலைகளிலும் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையில் இறுதியான தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

பெரும்பான்மையான வங்கித் தேர்வுகள் கணினி (கம்ப்யூட்டர்கள்) வழியாகவே ஆன்லைன் தேர்வாக நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிபிஎஸ் கிளார்க் வங்கித் தேர்வை தமிழில் எழுதலாமா...?

வங்கித் தேர்வுக்கு நல்ல முறையில் தயாராவது அவசியம். புத்தகங்களைப் படிப்பது மட்டுமல்லாமல். புத்தகங்களில் உள்ள பயிற்சி வினாக்களுக்கு விடையளித்துப் பயிற்சி எடுப்பதுதான் மிகவும் முக்கியமானது.

ஏனெனில் தவறாக விடையளிக்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் மதிப்பெண் குறைக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு எழுதவேண்டும். மேலும் விவரங்களுக்கு www.ibps.in, www.sbi.co.in/portal/web/home/careers-with-us ஆகிய இணையதள முகவரிகளைக் கிளிக் செய்து அறியலாம்.

ஐபிபிஎஸ் (IBPS) எழுத்தர் (கிளார்க்) தேர்வை ஆங்கிலம் தவிர மற்ற தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் முயற்சிக்கலாமா? என்ற கேள்வி வங்கித் தேர்வுக்குத் தயாராகும் அனைத்துத் தேர்வர்களிடமும் உள்ளது.
இதற்கு பதில் என்னவென்றால் ஆம். அந்த ஐபிபிஎஸ் கிளார்க் தேர்வை ஆங்கிலம் தவிர மற்ற தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் முயற்சிக்கலாம்.

இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (IBPS) இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்குப் பல மொழிகளில் தேர்வை நடத்துகிறது.

ஐபிபிஎஸ்(IBPS) கிளார்க் தேர்வு தமிழ், இந்தி, பஞ்சாபி, குஜராத்தி, பெங்காலி, அசாமிஸ், ஒரியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி மற்றும் உருது உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மொழிகளில் நடத்தப்படுகிறது.

தேர்வர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும் போது உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுந்து விண்ணப்பிக்கலாம்.

நபார்டு வங்கி வேலைவாய்ப்பு

நபார்டு வங்கிகளில் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. நபார்டு வங்கியின் கிரேடு ஏ, பி மற்றும் குரூப் சி ஆகியவற்றுக்கான ஆட்சேர்ப்புக்கு தேர்வை நடத்துகிறது. குரூப் ஏ பதவிக்கு கிரேடு ஏ நடத்தப்படுகிறது. கிராமப்புற மேம்பாட்டு வங்கி சேவை (ஆர்டிபிஎஸ்), ப்ரோடோகால் & செக்யூரிட்டி சர்வீஸ் (பி&எஸ்எஸ்), ராஜ்பாஷா மற்றும் லீகல். வளர்ச்சி உதவியாளருக்கு கிரேடு பி செய்யப்படுகிறது. குரூப் சி ஆட்சேர்ப்பு அலுவலக உதவியாளருக்கு செய்யப்படுகிறது என்பதால் இந்தத் தேர்வுகளுக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Banking Exams aspirants can attempt the IBPS Clerk Exam in regional languages other than English. The Institute of Banking Personnel Selection (IBPS) conducts the exam in multiple languages to cater to candidates from different regions of India. Here are the details: Languages Offered The IBPS Clerk Exam is conducted in various regional languages, including Hindi, Punjabi, Gujarati, Bengali, Assamese, Oriya, Kannada, Tamil, Telugu, Malayalam, Marathi, and Urdu. You can choose your preferred language while filling out the application form.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+