மத்திய பொதுப்பணியாளர் தேர்வாமையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு அதற்கென உருவாக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்கள் அவசியமா என்ற கேள்வியை ஏராளமானோர் எழுப்புகின்றனர். இந்தக் கேள்விக்கு பெரும்பாலான கல்வியாளர்கள், கல்வி நிபுணர்கள் கூறும் பதில் ஆம் என்பதுதான். மிகவும் அறிவுக்கூர்மை வாய்ந்த மாணவர்களுக்கு பயிற்சி மையங்களின் வழிகாட்டுதல் தேவையில்லை. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இந்த பயிற்சி மையங்கள் தேவையென்றே அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) அல்லது (UPSC), இந்திய அரசுப் பணிகளுக்கான தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு தனி அமைப்பாகும். இந்த அமைப்பானது மத்திய அரசின் பல அரசுத் துறைகளின் பணிகளுக்கான பணியாளர்களுக்கான விண்ணப்பங்களைப் பெற்று அவர்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேரடித் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்து கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.
இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வெளிநாட்டுப் பணி போன்ற பணிச்சேவைகளை ஒழுங்குபடுத்தி அப்பணியாளர்களின் பணிக்கால வாழ்வு, பயிற்சி மற்றும் சேவைவிதிகளை கட்டுப்படுத்தி வருகிறது. மத்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் கீழ் இந்த ஆணையம் செயல்படுகிறது.
உயர்நிலை அரசுப்பணிச்சேவைகளில் இந்தியர்களும் பங்கேற்க வேண்டும் என்ற இந்திய அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கிணங்க 1926-ம் ஆண்டு அப்போதைய பிரிட்டன் இந்திய அரசு முதல் தேர்வாணையத்தை அக்டோபர் முதல் நாளன்று நியமித்தது.இவ்வாணையத்தின் செயற்பாடுகள் பரிந்துரைகள் என்ற நிலையிலேயே இருந்தமையால் இந்திய அரசியல்வாதிகளுக்கு இது திருப்தி அளிக்கவில்லை. ஆகவே பிரிட்டன் அரசு கூட்டு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தை (Federal Public Service Commission) 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் அமைத்தது.

ச்சட்டம் மாநிலங்களிலும் மாநில அளவில் தேர்வாணையங்கள் அமைத்திட வழி செய்தது. விடுதலைக்குப் பிறகு, அரசுப்பணிகளுக்கு பாரபட்சமற்ற முறையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கவும் பணியாளர்களின் உரிமைகளைக் காத்திடவும் தன்னாட்சி நிலைபெற்ற காப்பான அமைப்பொன்றின் தேவையைக் கருத்தில் கொண்டு அரசியலமைப்புப் பேரவை கூட்டு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கி மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் உருவானது.
அப்போது முதல் தற்போது வரை இந்த தேர்வாணையம் குடிமைப் பணிகளுக்கான தகுதிவாய்ந்த நபர்களை தேர்வு செய்து வருகிறது.
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராவதற்கு சுமார் ஒரு வருடம் எடுக்கும் என்பதால், யுபிஎஸ்சி தயாரிப்பு என்பது ஒரு நீண்ட செயல்முறை என்பதை தேர்வர்கள் புரிந்துகொள்ளவேண்டும். UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு இந்தியாவில் உள்ள சில முக்கிய அரசு சேவைகளுக்கான நுழைவுவாயில் ஆகும். இதன் விளைவாக, இது இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் தேர்வுகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும், ஏறக்குறைய பத்து லட்சம் பேர் UPSC தேர்வை ஆயிரம் பதவிகளுக்கு மட்டுமே எழுதுகிறார்கள். இதன்மூலம் இந்தத் தேர்வின் முக்கியத்துவத்தையும், பதவியின் அதிகாரத்தையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.
ஏன் இது இவ்வளவு கடினமாக உள்ளது?
யுபிஎஸ்சி தேர்வுகள் ஏன் இவ்வளவு கடினமாக உள்ளது என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுகிறது.
காரணம், UPSC வினாத்தாள் மிகவும் சிக்கலானது. மேலும் ஆண்டுதோறும் மாறும் தன்மை கொண்டது . இது வருடா வருடம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒருவர் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின்படி பாடங்களைப் படித்துவிட்டு வினாத்தாளை பார்த்தால், சக தேர்வர்கள் திகைத்து விடுகிறார்கள். இந்தக் கேள்விகள் மிகவும் கடினமானவை என்றும் ஆம் மிகக் கடினமானவை என்றும் அவர்கள் உணர்கிறார்கள்.
பின்னர் அவர் பாடத்திட்டத்தைப் பார்த்து, சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்தும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதி என்பதை அந்தத் தேர்வர் உணர்ந்து கொள்கிறார். இது அவர்களுக்கு பதட்டத்தையும் குழப்பத்தையும் உருவாக்குகிறது. யுபிஎஸ்சி தேர்வில் நம்மால் வெற்றி பெற முடியாமல் போய்விடுமோ என்று அச்சம் கொள்கிார். இதன் பின்னரே அவர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதலைத் தேடத் தொடங்குகிறார்.
இப்போது வழிகாட்டுதலுக்கும் பயிற்சிக்கும் வித்தியாசம் உள்ளது. அனைவருக்கும் வழிகாட்டுதல் தேவை, ஆனால் பயிற்சிக்கு, அது தேர்வுக்குத் தயாராகும் நபரின் தனிப்பட்ட சூழ்நிலையைப் பொறுத்தது. தவறான வழிகாட்டுதலில் நிபுணர்களாக இருக்கும் பல பயிற்சி மையங்களும் உள்ளன. இதுவும் நிலைமையை சீர்குலைக்கிறது.
தற்போது ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி பெறுவது எப்படி என்று பார்ப்போம். சில அறிவுக் கூர்மைவாய்ந்த மாணவர்கள், இந்தத் தேர்வை, எந்தவித வழிகாட்டியின் உதவியும் இல்லாமல், பயிற்சி மையங்களின் ஆதரவு இல்லாமல் எழுதி வெற்றி பெற்று விடுகின்றனர். ஆனால் இவ்வாறு வெற்றி பெறுவது மிகச்சிலரே. பெரும்பாலானவர்கள் பயிற்சி மையங்களின் மிகச்சிறந்த பயிற்சி மூலம் வெற்றி காண்கின்றனர்.
யுபிஎஸ்சி தேர்வில் பெரும்பாலான டாப்பர்கள் என்று அழைக்கப்படும் பட்டியலில் முதல் இடங்களைப் பிடிப்பவர்கள் பல்வேறு பிரபலமான பயிற்சி மையங்களிலிருந்து பயிற்சி பெற்று வந்தவர்கள்தான்.
தங்களது சாதனைகளுக்கு இந்த மையங்கள்தான் காரணம் சுட்டிகாட்டுகின்றனர். ஆனால், சிலர் பயிற்சி மையங்களின் உதவியின்றி முதல் தரத்தை அடைந்ததாகக் கூறுகின்றனர்.
பயிற்சி இல்லாமலேயே நல்ல மதிப்பெண்களுடன் தேர்வில் தேர்ச்சி பெறுவது சாத்தியம்தான். மேலும் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களில் பலர் இதைச் செய்திருக்கிறார்கள், ஆனால் சரியான வழிகாட்டுதல் மற்றும் தேர்வு சார்ந்த ஆய்வுப் பொருள்கள் எளிதாகக் கிடைத்தால் தேர்வு எளிதாகவும் வேகமாகவும் முடிவடைகிறது என்பதும் உண்மை. தயாரிப்பின் தொடக்கத்தில் சரியான வழிகாட்டுதல், தேர்வர்கள் குறைந்தபட்ச முயற்சிகள் மற்றும் குறைந்த நேரத்தில் பட்டியலில் இடம் பெறுவதை எளிதாக்குகிறது. இங்கே, பயிற்சி நிறுவனங்கள் இந்த இடத்தை தேர்வர்களுக்கு வழங்க முடியும் என்பதுதானஅ நிதர்சனம்.
சிவில் சர்வீசஸ்களுக்குத் தயாராகும் அனைவரின் மனதையும் வேட்டையாடும் கேள்வி ஒன்று உள்ளது என்றால், அது தேர்வர்கள் பயிற்சி மையங்களில் சேரலாமா அல்லது சுயமாக படித்துத் தேர்வை எதிர்கொள்லலாமா என்பதுதான்.
பெரும்பாலான ஆர்வலர்களுக்கு இது ஒரு அடிப்படைக் கேள்வியாக இருந்தாலும், அவர்கள் UPSC பயிற்சியில் சேர வேண்டுமா இல்லையா என்று குழம்புகின்றனர். மேலும், அதற்கு சரியான பதிலைக் கண்டுபிடிக்க தேர்வர்கள் போராடுகிறார்கள்.
நீங்கள் யுபிஎஸ்சி டாப்பர்களை சந்தித்தால், பயிற்சி மையங்கள் தேவையில்லை என்று சொல்வார்கள், ஆனால் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் யுபிஎஸ்சி தேர்வு டாப்பர்களின் பெயர்களைக் காண முடியும். இதன்மூலம் யுபிஎஸ்சி தேர்வில் சுயமாகப் படித்து தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்கள் சிலர் என்றால், பயிற்சி மையங்கள் மூலம் வெற்றி பெறுபவர்கள் பலர் (பல மடங்கு) என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
பயிற்சி மையங்களின் உதவியின்றி யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவது அரிதாக இருந்தாலும், பயிற்சி மையங்களின் சில மாணவர்களுக்கு நிஜமாகவே உதவியாக இருக்கிறது. அவர்களின் வெற்றிக்கு அந்த மையங்களும், ஆசிரியர்களும் பாடுபடுகின்றனர்.
ஐஏஎஸ் (IAS) தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களில் சேருவது ஒரு நல்ல யோசனை என்று நிபுணர்கள் மற்றும் ஐஏஎஸ் (IAS) படிப்புகளுக்கான ஆசிரியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள், ஏனெனில் இது உங்கள் முயற்சிகளை சரியான திசையில் செலுத்த உதவும். உங்களது இலக்கை சரியான திசையில் சென்று எட்டுவதற்கு பயிற்சி மையங்கள் உதவும்.

சீரான வழிகாட்டுதல் தேவை
வெகு காலத்திற்கு முன்பு, சிவில் சர்வீஸ் என்பது உயர் அடுக்கில் உள்ளவர்களுக்காகவே என்ற நிலை இருந்தது. அரசுப் பள்ளிகள் மற்றும் சிறந்த கல்லூரிகளில் படித்தவர்கள் அடிப்படையில் நல்ல ஆங்கிலத்துடன் கூடிய பெருநகரங்களிலிருந்து வந்தவர்கள் என்று பலர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றனர்.ஆனால் தற்போதைய மாணவர்களுக்கு நல்ல தரமான வழிகாட்டுதல் தரும் பயிற்சி மையங்கள் தேவைப்படுகின்றன.
யுபிஎஸ்சி தேர்வு எழுதும் ஒரு மாணவர், ஒரு நல்ல கல்லூரி/பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவராக , உங்களுக்கு வழிகாட்டுதல் / பயிற்சி மையங்கள் தேவைப்படலாம், ஏனெனில் நீங்கள் அரசியலமைப்பு, பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பல பகுதிகளில் UPSC தேவைகளுக்கு ஏற்றவாறு கல்வி கற்கவில்லை. எனவே, அதற்கான சீரிய பயிற்சியை அந்த மையங்கள் வழங்குகின்றன என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
யுபிஎஸ்சி தேர்வு என்பது பிரிலிம்ஸ், மெயின்ஸ், நேர்காணல் என 3 நிலைகளைக் கொண்டதாகும். இந்த 3 தேர்வுகளிலும் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமானதாகும். அந்த கடினமான சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பதைத்தான் இந்த பயிற்சி மையங்கள் கற்றுத் தருகின்றன.
இவை அனைத்தையும் மிகக் குறுகிய காலத்தில் கற்றுக்கொள்வது? என்ற கேள்வி எழலாம். ஆனால் அதற்குத் தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு போதிய பயிற்சியை மையங்கள் அளிக்கின்றன.
மாணவர்கள் தேவையான செயல்முறைகளை வழிநடத்துவதற்கு இணையத்தில் ஏராளமான தீர்வுகள் இருந்தாலும், பயிற்சி மையங்களில் உள்ள அனுபவமிக்க வழிகாட்டிகள் மிகவும் நம்பகமானவர்களாக உள்ளனர். ஏனெனில் அவர்கள் முழு தேர்வுகளுக்கான அனைத்து செயல்முறையிலும் மாணவர்களை வழிநடத்துவார்கள். மேலும் மாணவர்கள், தேர்வில் செய்யும் வழக்கமான தவறுகளை அவர்கள் தடுப்பார்கள்.
இந்த பயிற்சி மையங்கள் மாணவர்களின் தேர்வுக்கான தயாரிப்பு கால அட்டவணையை புத்திசாலித்தனமாக ஒழுங்கமைக்க உதவுகின்றன
உந்துதல் மற்றும் போட்டி மனப்பான்மையை வளர்த்தல்
இந்த பயிற்சி மையங்கள்தான் பல்வேறு மாணவர்களுக்கு உந்துதலாக உள்ளன. பலதரப்பட்ட கல்விப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்களின் குழுவுடன் அமர்ந்து கற்கும் போது - சிலரின் சிறந்த சாதனைப் பதிவுடன், ஒரு புதிய அளவிலான நம்பிக்கை தோன்றும். அந்த நம்பிக்கையைஊட்டி உந்துதலாக யுபிஎஸ்சி தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படுகின்றனர்.
அந்த மாணவர்களைப் போன்றே நாமும் வரவேண்டும், சிறந்த மாணவர்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கி உந்துதல் செய்கின்றன இந்த பயிற்சி மையங்கள்.
மேலும் பயிற்சி மையங்களில் மாணவர்கள், தேர்வர்களின் சந்தேகங்கள் உடனடியாகத் தீர்க்கப்பட்டு அவர்களை செம்மைப்படுத்துகின்றன. ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட அதிகாரிகளை பல்வேறு பயிற்சி மையங்கள் உருவாக்கி இருக்கின்றன. இதற்கு பல்வேறு உதாரணங்களைக் கூற முடியும். எனவே, வசதி படைத்த நபர்கள், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று நாட்டுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற இளைஞர்கள் பயிற்சி மையங்களில் சேர்ந்து தங்களது கனவுகளை நனவாக்கிக் கொள்ளலாம்.
நல்ல பயிற்சி மையங்களாகச் சேர்ந்து அவர்களின் வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
சரியான வழிகாட்டுதல் அல்லது பயிற்சி மையத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது தேர்வர்களுக்கு மிகவும் சவாலான பணியாகும். ஒரு விண்ணப்பதாரர் அவர்/அவள் சேரப் போகும் பயிற்சி நிறுவனத்தை நன்கு அறிந்துகொண்டு, அதன் வரலாற்றைத் தெரிந்துகொண்டு தேர்வு செய்வது அவசியம்.
மனதை வேறு எங்கும் செலுத்தாமல் தேர்வில் வெற்றி ஒன்றே குறிக்கோள் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு மாணவர்கள், தேர்வர்கள் வெற்றி காணவேண்டும்.


Click it and Unblock the Notifications












