இனி எல்லாம் 'அனிமேஷன்' செயல்! ஜாலியான வேலை... ஏகப்பட்ட சம்பளம்...

டெக்னாலஜிக்கு ஏற்ப அதிவேகமாக தன்னையும் தயார் படுத்திக்கொண்டு, எண்ணிப்பார்க்க இயலாத விஷயங்களை கண்முன்னே காட்டும் சிறப்பு, அனிமேஷன் துறையால் மட்டுமே சாத்தியப்படும் என்றால் மிகையாகது.

By Kani

டெக்னாலஜிக்கு ஏற்ப அதிவேகமாக தன்னையும் தயார் படுத்திக்கொண்டு, எண்ணிப்பார்க்க இயலாத விஷயங்களை கண்முன்னே காட்டும் சிறப்பு அனிமேஷன் துறையால் மட்டுமே சாத்தியப்படும் என்றால் மிகையாகது.

கம்யூட்டர் துறையை பொருத்தமட்டில் செல்வாக்கும், செருக்கும் பெற்ற துறையாக விளங்குகிறது. ஒரு நிழற் படத்தை திரையில் உயிரோட்டமாக நகரச் செய்வதே அனிமேஷன்.

இனி எல்லாம் 'அனிமேஷன்' செயல்! ஜாலியான வேலை... ஏகப்பட்ட சம்பளம்...

இது திரைப்படத்திற்கான ஒரு துறை என்றிருந்த காலம் மாறி கல்வி, ஆய்வு என பல்வேறு துறைகளை தன் கைவசமாக்கியுள்ளது.

சிறுவர் முதல் முதியவர் வரை, கல்வி முதல் சினிமா வரை அனிமேஷன் காட்சிகளை விரும்பாதவர் எவரும் இலர் என்றே கூறலாம். 3டி அனிமேஷன் செயலாக்கம் குழந்தைகள் மட்டுமல்லாது அனைவரிடமும் பிரசித்தி பெற்று வருகின்றன.

வேலை வாய்ப்புகள்:

இதில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறும் பட்சத்தில்,

  • மாடலர்
  • லே அவுட் ஆர்டிஸ்ட்
  • கிளீன் அப் ஆர்டிஸ்ட்
  • ஸ்கேனர் ஆபரேட்டர்
  • டிஜிட்டல் இங்க் அண்ட் பெயிண்ட் ஆர்டிஸ்ட்
  • கீ பிரேம் அனிமேட்டர்
  • பேக்கிரவுண்ட் ஆர்டிஸ்ட்
  • அனிமேட்டர்
  • அனிமேஷன் பிலிம் டிசைன்
  • பிலிம் மேக்கிங்
  • அனிமேஷன் கேம் டிசைன்
  • வீடியோ கேம் டிசைன்,
  • 2டி, 3டி,மாடலர்
  • விஷூவல் எபெக்ட்
  • ஸ்பெஷல் எப்.எக்ட். கிரியேட்டர்
  • கேரக்டர் டிசைனர்
  • இன்டராக்சன் டிசைனர்

போன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

தனித்திறன்:

பொதுவாக துருதுருவென அனைவரிடத்திலும் சகஜமாக பேசுவது, ஆடுவது, வித்தியாசமாக சிந்திப்பது போன்ற சாராம்சங்களை கொண்ட சிட்டி ரோபோவா நீங்கள்? உங்களுக்கான துறைதான் இது. சார்ப்பான கிரியேட்டிவிட்டி கொண்ட ஒருவரின் கற்பனை சக்திக்கான சவால் என்று கூட கூறலாம்.

இதற்கு ஓவியம் வரைவதில் அடிப்படைத் திறனும் ஆர்வமும் பெற்றிருப்பது அத்தியாசியத் தேவை. கம்ப்யூட்டரை கையாளும் திறன் பெற்றிருப்பது கூடுதல் பலம்.

எங்கு படிக்கலாம்:

+2 முடித்திருந்தால் இதில் டிகிரி, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளில் சேரலாம்.

இன்டஸ்ட்ரியல் டிசைன் சென்டர், ஐ.ஐ.டி., இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் போன்றவை இதில் பல்வேறு வகையான படிப்புகளை வழங்கி வருகின்றன.

கல்வி நிறுவனங்கள்:

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் (www.nid.edu.com)

ஜீ இன்ஸ்டிடியூட் ஆப் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் (www.zica.org)

இன்டெஸ்ட்ரியல் டிசைன் சென்டர் (IDC)

ஐஐடி மும்பை & குவஹாத்தி (http://www.iitb.ac.in/)

மாயா அகாடமி ஆப் அட்வான்ஸ்டு சினிமேடிக்ஸ் (www.maacindia.com)

டோன்ஷ் அனிமேஷன் இந்தியா பிரைவேட். லிமிடெட் (www.toonzanimationindia.com)

அகாடமி ஆஃப் டிஜிட்டல் ஆர்ட்ஸ் அண்ட் காமர்ஸ் (www.http://academyofdigitalarts.com)

ராய் பல்கலைக்கழகம் (www.raiuniversity.edu)

அனிமாஸ்டர் (www.animaster.com)

மருத்துவம், பொறியியல் என்ற காலகட்டம் மாறி அதிக வேலைவாய்ப்பும், கைநிறைய சம்பளமும் வழங்கும் துறையாக விளங்கி வருகிறது. இதில் ஒரு மாத படிப்பு முதல் டிகிரி வரை பல்வேறு வகையான பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

சம்பளம்: தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தால் ரூ.30ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரம் வரை ஊதியம் பெறலாம். ஆரம்பகட்டத்தில் ரூ.7ஆயிரம் முதல் ரூ.10,000 வரை பெற முடியும்.

'களவும் கற்று மற' கை நிறைய சம்பாதிக்க 'எத்திக்கல் ஹேக்கிங்' பெஸ்ட் சாய்ஸ்!'களவும் கற்று மற' கை நிறைய சம்பாதிக்க 'எத்திக்கல் ஹேக்கிங்' பெஸ்ட் சாய்ஸ்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Animation Industry: Scope & Career Opportunities
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X