இது நீங்கள் அறியாத மன்மோகன் சிங்கின் 'சிங்க' முகம்!

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கடந்து வந்த வெற்றிப் பாதை குறித்த தொகுப்பு!

By Gowtham Dhavamani

டாக்டர். மன்மோகன் சிங், நம் நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாகும் மற்றும் இவர் உலகமெங்கும் உள்ள சிறந்த அறிவாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மன்மோகன் சிங், சர்வதேச அளவில் அரசியலில் பெயர் பெற்றவர். மிகச்சிறந்த மனிதர். குழந்தை பருவத்தில் இருந்தே சிறந்த மாணவராக விளங்கிய அவர் இந்திய பொருளாதாரத்தில் புரட்சி செய்து புகழ்பெற்றவர். நவீன இந்திய பொருளாதார இயக்கத்தின் தந்தையாக இருந்த அவர், உலக நடப்புகளை இந்தியாவுக்கு காண்பித்து உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றினார். இன்று, இந்தியா பொருளாதாரத்தில் ஒரு வல்லரசு நாடாக உருவாகி வருகிறது. இதற்கு பொருளாதார நிபுணரான டாக்டர். மன்மோகன் சிங் அவர்களுக்கு தான் நாம் நன்றி செலுத்த வேண்டும்.

கல்வி :

கல்வி :

1. எம்.ஏ- எக்கநாமிக்ஸ், பஞ்சாப் பல்கலைக்கழகம்
2. வ்ரென்பரி உதவித்தொகைப் பெற்றார்
3. டி. ப்ஹில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்

விருதுகள் :

விருதுகள் :

1. பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவனாக பி. ஏ ஹோன்ஸ் (எக்கநாமிக்ஸ்) படித்த போது பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்
2. உத்தர் சாந்த் கபூர் பட்டம், பஞ்சாப் பல்கலைக்கழகம்
3. ரைட்ஸ் பரிசு - சிறப்பாக செயல் புரிந்ததற்கு, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், ஐக்கிய நாடு
4. ஆடாம் ஸ்மித் பரிசு, காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், ஐக்கிய நாடு
5. பத்ம விபூஷன் விருது
6. ஆசிய மணி விருது, ஆண்டின் சிறந்த நிதி மந்திரி
7. ஐரோப்பியமணி விருது, ஆண்டின் சிறந்த நிதி மந்திரி
8. ஆசியமணி விருது, ஆண்டின் சிறந்த நிதி மந்திரி
9. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்சின் சிறந்த ஃபெல்லோ , ஆசியா எகானமி மையம், அரசியல் மற்றும் சொசைட்டி
10. ஹானரி ஃபெல்லோ , நப்பீல்ட் கல்லூரி, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்
11. ஜவஹர்லால் நேரு நூற்றாண்டு பிறந்தநாள் விருது, இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கம்
12. நீதிபதி கே. எஸ் ஹெக்டே பௌண்டேஷன் விருது

வேலை :

வேலை :

1. 1966-1969: டாக்டர். சிங், வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டில்(UNCTAD) பணிபுரிந்தார்
2. பிறகு, டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும், வெளிநாட்டு வர்த்தக அமைச்சரவையில் அப்போதைய அமைச்சர் லலித் நாராயண் மிஸ்ராவுடனும் மற்றும் 70களில் இந்திய நிதி அமைச்சரவையிலும் பணிபுரிந்தார்
3. 1982-1985: இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்
4. 1985-1987: அவர் இந்தியாவின் திட்டமிடல் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தார்
5. 1991 இல் பிரதம மந்திரியாக இருந்த பி.வி. நரசிம்ம ராவ், டாக்டர் மன்மோகன் சிங்கை இந்தியாவின் நிதி மந்திரியாக நியமித்தபோது அவரது பங்களிப்பு மிகச்சிறந்ததாக அமைந்தது. இந்திய பொருளாதாரம் தாராளமயமாக்கல் மூலம் புரட்சியை ஏற்படுத்தியதுடன், நாட்டிற்கு அதிக வெளிநாட்டு நேரடி முதலீட்டை கொண்டு வர உரிமத்தை அகற்றி, இன்று இந்தியாவின் உலகளாவிய பொருளாதார எழுச்சி நட்சத்திரமாக விளங்குகிறார்.
6. 1991 ல், டாக்டர் சிங் முதன்முதலாக ராஜ்யசபாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். 2001 மற்றும் 2007 ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
7. பாரதீய ஜனதா கட்சி 1998 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆட்சி புரிந்த இடைப்பட்ட காலப்பகுதியில் டாக்டர் சிங் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
8. 2004 ம் ஆண்டு, டாக்டர் மன்மோகன் சிங் இந்திய பிரதம மந்திரி ஆனார். இது இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய ஆச்சரியம்மிக்க நிகழ்வாக இப்பொழுதும் கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், அப்போதய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சக கட்சி ஊழியர்கள் ஆதரித்த போதிலும் பிரதம மந்திரி பதவியை ஏற்க மறுத்து விலகியதே.
9. 2009 ல், 15 வது மக்களவைக் கூட்டத்தில் இந்தியாவின் பிரதமராக மீண்டும் டாக்டர் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கல்வியே பெரும் சக்தி:

கல்வியே பெரும் சக்தி:

அவரது வெற்றியைப் பற்றி கேட்டபோது டாக்டர் சிங் "என்னுடைய கல்வியே நான் இப்பொழுது என்னவாக இருக்கிறேனோ அதற்கு காரணம்" என்று கூறினார். டாக்டர் சிங் பிறந்தது சாதாரண குடும்பமாக இருந்தாலும், வேறு எதையும் விட கல்வியையே பெரிதாக மதிக்கும் குடும்பமாக இருந்தது. டாக்டர் சிங் பள்ளிக்கு பல மைல் தூரம் நடந்து, ஒரு மண்ணெண்ணெய் விளக்கின் உதவியால் படித்தார். அந்த கல்வியின் அறிவைப் பற்றிக் கொண்டே இன்றும்கூட மிகத்தகுதி வாய்ந்த தலைவராய் இருக்கிறார். உலகின் மிகச் சிறந்த பள்ளிகளில் கௌரவப் பட்ட படிப்புகள் படித்தும் பட்டங்கள் வாங்கியும், டாக்டர் சிங் எப்போதும் கல்வியின் சக்தியை உணர்த்துபவராக விளங்குகிறார்.

கவனமிக்கவர்:

கவனமிக்கவர்:

மன்மோகன் சிங் விரிவாகவும் தன் குறிக்கோள்களில் இருந்து மாறுபடாமலும் தனது கவனத்தை செலுத்துவதில் சிறந்து விளங்கினார். அவர் செய்த எந்த வேலையிலும் சிறு விவரங்களைப் கூட விடாமல் பின்தொடர்ந்து மிகவும் கடினமாக உழைப்பார். அது அவரோடு சிறந்து விளங்கிய மாணவர்கலோடு போட்டியிட்டு, தான் வெற்றி பெறவும் பல்வேறு கல்வி உதவித்தொகை பெறவும் உதவியது. அங்கு அவர் எப்போதும் ஒரு உயர் வகுப்பு மாணவராக இருந்தார். அவர் தனது தொழிற்துறை வாழ்க்கையில் கூட ஒவ்வொரு நிலையிலும் இந்த தரத்தை கடைப்பிடித்தார். ஆசிரியராகவும், ரிசர்வ் வங்கி ஆளுநராகவும், நிதி அமைச்சராகவும் மற்றும் பிரதமராகவும் மன்மோகன் சிங் இருந்த ஒவ்வொரு பதிவிலும் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தது அவரது கவனமான சிந்தனை என்று சொல்லலாம்.

தன் கையே தனக்கு உதவி:

தன் கையே தனக்கு உதவி:

மன்மோகன் சிங், அவரது சொந்தத் தகுதி, கடின உழைப்பு, நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சியான முயற்சி மூலம் பெரும் சாதனை படைத்த சிலரில் ஒருவராக அறியப்படுகிறார். அவர் எப்போதும் தனக்கு சாதகமான முயற்சிகளை மேற்கொண்டு தனிப்பட்ட நலன்களுக்காக தனது பதவியை உபயோகித்துக்கொள்ள முயற்சிக்கவில்லை. அவரது மகள் பேராசிரியர் உபீந்தர் சிங், ரெடிஃப்ற்கு பேட்டி அளித்த போது, "நீங்கள் எப்பொழுதும் உங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும்; நீ உன்னுடையதை உன்னுடையதாக்கி கொள்ள வேண்டும். நாங்கள் எவரும் அவருடைய எவ்வித அதிகாரபூர்வமான அதிகாரத்தையும் உபயோகித்துக் கொள்ளவில்லை. பேருந்து நிறுத்தத்தில் எங்களை விடுவதற்கு அலுவலக கார் எங்களுக்கு தரப்படவில்லை; அவர் இதில் மிகவும் கவனமாக இருந்தார். தனிப்பட்ட மற்றும் உத்தியோகபூர்வ விஷயங்கள் இணைக்கப்படவில்லை. வளர்ந்து வரும் போது எனது தந்தை பல்வேறு கஷ்டங்களைக் சந்தித்தார், அவருடைய குழந்தைகளில் யாரும் ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கவில்லை. என் அம்மாவும் அப்பாவும் குழந்தைப்பருவத்திலிருந்து எங்களுடைய சொந்த தேவைகளுக்கு பொறுபேற்று இருப்பதை வலியுறுத்திக் கூறிக்கொண்டே இருப்பார்கள். பணம், பதவி மற்றும் நிலைப்பாடு, எங்களில் எவருக்கும் அவை முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. நாங்கள் அனைவரும் எங்கள் வேலைகளை நாங்களே செய்துக்கொள்ள கற்றுக்கொண்டோம், மற்றவர்களிடமிருந்து எந்த உதவியும் எதிர்ப் பாக்க மாட்டோம். "

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
An Inspirational Success Story of Former Indian Prime Minister Dr. Manmohan Singh!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X