பொறியியல் படிப்பிற்கான ஆலோசனை, கவுன்சிலிங் போறிங்களா!

Posted By:


பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களே பொறியியல் துறையில் இணைய விருப்பமா நிச்சயம் நீங்க தெரிந்து கொள்ள நிறைய இருக்கின்றன . உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம் .
பனிரெண்டாம் வகுப்பு முடித்தாகிவிட்டது ,பொது தேர்வு முடிவுகள் வெளிவந்து கையில் மதிபெண் மற்றும் கட் ஆஃப் வைத்து பல்வேறு வினாகளுக்கு விடை கிடைக்காமல் இருக்கின்றிர்களா உங்களுக்கான விடை தருகிறோம். நீங்கள் பொறியியல் படிப்பினை தேர்ந்தெடுத்துக்கும் முன் அடிப்படையாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொறியியல் துறை அவற்றின் எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் சில்லபஸ்க்கு அப்பாற்ப்பட்டு என்ன படிக்க இயலும் அதை நீங்கள் தேர்ந்தெடுக்கும் கல்லுரி கற்றுகொடுக்குமா என்பதை அறிந்து குறிப்பிட்ட   பொறியல் துறையை தேர்ந்தெடுங்கள் .


மாணவர்களே நீங்கள் பொறியியல் கவுன்சிலிங் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறிர்களா உங்களுக்கான சில ஆலோசனைகள் சில பொறியியல் கவுன்சிலிங்கிள் செல்வதற்க்கு முன்பு உங்கள் கட் ஆஃப் அதன் மதிப்பீடு அதற்கான கல்லுரி வாய்ப்பு தெரிந்து வைக்க வேண்டும .

மாணவர்களே நீங்கள் பொறியியல் கவுன்சிலிங் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறிர்களா உங்களுக்கான சில ஆலோசனைகள

 


உங்கள் மதிபெண்ணுக்கேற்ற கிடைக்கும்  கல்லுரியின்  விவரம் தெரிந்து கொள்ளுங்கள் அதன்படி ஐந்து தரமான கல்லுரியினை தேர்ந்தெடுங்கள் அவற்றின் கல்வித்தரம் மற்றும் கேம்பஸ் இண்டர்வியூவிற்க்கான வாய்ப்பு மற்றும் கேம்பஸ் இண்டர்வியூவில் பங்கேற்கும் நிறுவனங்கள் அறிந்துவைத்து கொள்ளுங்கள், உங்கள் கட் ஆஃப் மதிபெண்களுகேற்ப நீங்கள் தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட ஐந்து கல்லுரியின் நான்காம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களை விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். அந்த கல்லுரியில் இருந்து கண்டெஸ்ட என்ற பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசு நடத்தும் கணினி மொழி தேர்வுக்கு அழைத்து செல்லப்படுவீர்களா என்பதை அறிய வேண்டும். மேலும் கல்லுரிகளின் உள்கட்டமைப்பு தரம், ஆசிரியர்களின் கற்பிக்கும் ஆற்றல் கல்லுரியில் மிக   முக்கிய தகுதியாக கருதப்படுகிறது இத்தககைய தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின் கல்லுரி தேர்வை உறுதி செய்யுங்கள். சரியாக வழிகாட்டும் நபரை உடன் அழைத்து செல்லுங்கள் அதுவே சிறந்தது. இந்த ஐந்து கல்லுரியில் குறிப்பிட்ட தகுதிகள் சரியாக நடைமுறைப்படுத்துகின்ற கல்லுரியில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும் .


உங்களுக்கான கல்லுரி தேர்வை உறுதி செய்தவுடன் கவுன்சிலிங் செல்லுங்கள் ,கவுன்சிலிங்கில் குழப்ப நிலை அடையாதீர்கள் . 20க்கு மேற்ப்பட்ட பொறியியல் துறைகளின் எண்ணிக்கை உள்ளன அவற்றில் உங்க ஆர்வமும் அந்த பொறியியல் படிப்பிற்கு பின் அந்த குறிப்பிட்ட துறையில் எதிர்காலத்தில் கிடைக்கும் வாய்ப்பு மற்றும் அதன் தேவை சமுதாயத்தில் எந்த அளவு இருக்கும் என்பதை கணித்து செயல்படுங்கள் . சில்லபஸ் தாண்டி கல்லுரி கற்றுகொடுக்கின்றதா என்ற தகவலை உறுதிப்படுத்துங்கள் . குறிப்பிட்ட அந்த கல்லுரியை தேர்ந்தெடுங்கள் அதுவே உங்கள் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புக்கு உதவிகரமாக இருக்கும் .

கவுன்சிலிங்க்கு உங்கள் பத்தம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிபெண் சான்றிதல்  மற்றும் சாதிச்சான்றிதழ் போன்றவை சரியாக எடுத்து செல்லுங்கள். மேலும் சான்றித நகழ் மற்றும் புகைப்படம் அனைத்தும் சரியாக வைத்திருங்கள்.

மாணவர்கள் எதிர்காலத்தை நிர்மாணிக்கும் உங்களின் வாழ்கையை நீங்கள்தான் முடிவு செய்கிறிர்கள் சிந்தித்து செயலாற்றுங்கள் பெற்றோர்கள் உங்களுக்காக மெனக்கெடுவார்கள் . வாழ்த்துகள்

English summary
here article mentioned about counselling tips to students
Please Wait while comments are loading...