வணிகவியல் துறை தேர்ந்தெடுத்து பத்தாம் வகுப்புக்கு பின் வாழ்கை பாதை மாற்றுங்கள்

Posted By:


" போகும் பாதை வெகுதூரமில்லை தொடர்ந்து பயணிப்பதே வாழ்வின் கடமை ,,,, தொடர்வோம் பயணத்தை நல்ல தேடலுடன் "

பத்தாம் வகுப்பு முடித்த வணிகவியல் பயில விருப்பமுள்ள மாணவர்களே உங்களது எதிர்காலம் எல்லாத்துறையைப் போன்றும் சிறந்து விளங்குகின்றது. நீங்களே எதிர்கால தொழிலதிபர்கள், சிறந்த கணக்காளர்கள் அக்கவுண்டண்டாக மற்றும் நிர்வாக அதிகாரி என்ற அட்மினாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு . இதனை மனதில் வைத்து எந்தவித சந்தேகமின்றி தேர்வு செய்யுங்கள் உங்கள் துறையில் நீங்களே ராஜா /ராணி என்ற துணிவுடன் செயல்படுங்கள் .

பத்தாம் வகுப்புக்கு பின் வணிகவியல் பாடம் எடுக்கப் போறிங்களா உங்களுக்கான வாய்ப்புகள் !


" எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும் ,,
திண்ணிய நெஞ்சம்
தெளிந்த நல்லறிவுடன் " தேடல் தொடருங்கள் . 

உலகம் முழுவதும் வணிக ஆதிக்கம் கொடிகட்டி பறக்கின்றன . 
உங்களுக்காகவே தணிக்கைத்துறை மற்றும் பங்கு வர்த்தகத் துறைகள் உள்ளன. வணிக மேலாண்மை, வணிக நிறுவனங்கள், சிறு, பெறு, தொழில் நிறுவனங்கள் போன்றவை உங்களுக்காகவே காத்திருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் வணிக நோக்கமற்ற எந்த துறையும் நிலைத்திருப்பது கடினமே இதனை மனதில் கொண்டு வணிகவியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்தி படியுங்கள். கணக்கியல் இன்றைய காலகட்டத்தில் அவசியமாக இருக்குகின்றது எந்தவொரு துறையும் கணக்கியலின் பற்று வரவின்றி இயங்குதல் கடினமாகும். வணிக மேலாண்மை வீடு முதல் நாடு வரை அதிக செல்வாக்கு கொண்ட துறையாகும் .

வணிக கணக்கியலின் முறையில்தான் வங்கி இயங்குகின்றது . வணிக நிறுவனங்களின் தந்தையாக வணிகவியல் பாடம் சிறந்து விளங்குவதுடன் பல வகையில் சிந்திக்க தூண்டுகிறது . ஆகையால் நன்று படியுங்கள் வருங்காலத்தில் சிறந்த தொழிலதிபராகவோ ,நிர்வாக இயக்குநராகவோ வர வாழ்த்துக்கள் !!!

English summary
here article tell about career opportunity after 10th for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia