சுற்றுலாத் துறையில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்!

Posted By: Kani

சுற்றுலா செல்வதையே வேலையாக பார்க்க வேண்டும் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? தற்போது சிறப்பாகச் செயல்பட்டுவரும் இந்தத் துறை நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சக்கணக்கான புதிய தொழில்வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

இந்தத்துறையில் வரும் 2025-க்குள் சுமார் 46 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டூரிஸம் என்பது மக்களுக்கு சந்தோஷத்தை அளிக்கக்கூடிய தொழில். இந்தத் தொழிலில் சாதிக்க அதிவேகமாகப் பணியாற்றக்கூடிய திறமை மட்டுமல்லாது, பேச்சுத்திறமை, நல்ல நிர்வாகத்திறமை போன்றவை இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.

இதன் மூலம் வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் 8.31 லட்சம் கோடி, அல்லது மொத்த ஜிடிபியில் 6.3 சதவிகிதம் நாடு வருமானம் ஈட்டும் என உலக டிராவல்ஸ் அண்ட் டூரிஸம் கவுன்சில் தெரிவித்துள்ளது.

படிப்பு

1. பி.ஏ - டூரிஸம்
2. பி.ஏ - டூரிஸம் ஸ்டடிஸ் (பி.டி.எஸ்)
3. பிபிஏ - டிராவல் அண்ட் டூரிஸம் மேனேஜ்மெண்ட்
4. டிப்ளோமா இன் டூரிஸம் பிஸினெஸ் மேனேஜ்மெண்ட்
5. பி.ஜி. டிப்ளோமா இன் டிராவல்ஸ் அண்ட் டூரிஸம் மேனேஜ்மெண்ட்
6. பி.ஜி. டிப்ளோமா இன் டிராவல்ஸ் மேனேஜ்மென்ட் (PGDTM), டூர் ஆபரேஷன், டிராவல் அண்ட் டூரிஸம்
7. எம்பிஏ (டிராவல் அண்ட் டூரிஸம்)

கல்வி நிறுவனங்கள்:

1. மதர் தெரஸா பெண்கள் பல்கலை., -கொடைக்கானல்,

2. காமராஜர் பல்கலைக்கழகம்-மதுரை 

3. யுனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ்- சென்னை

4. அண்ணாமலை பல்கலைக்கழகம்- சிதம்பரம்

5. ஜி.ஆர்.டி அகாடமி-கோவை

சுற்றுலாத்துறை படிப்புகள்

குவாலியர், புவனேஷ்வர், நொய்டா, கோவா, நெல்லூர் ஆகிய இடங்களில் உள்ள 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட்' (ஐ.ஐ.டி.டி.எம்.,) கல்வி நிறுவனங்களில் 2018 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படிப்புகள்: பி.பி.ஏ.,-டூரிசம் அண்ட் டிராவல், எம்.பி.ஏ.,-டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட்

சேர்க்கை முறை: ஐ.ஐ.டி.டி.எம்., கல்வி நிறுவனம் இந்திராகாந்தி நேஷனல் டிரைபல் யுனிவர்சிட்டியுடன் இணைந்து நடத்தும் ஐ.ஐ.ஏ.டி., எனும் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

எம்.பி.ஏ., படிப்பை பொறுத்தவரை, ஐ.ஐ.ஏ.டி.,, மேட் ,கேட் ,சிமேட் , சேட்,  ஜிமேட், ஏ.டி.எம்.ஏ., போன்ற ஏதேனும் ஒரு நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 15

விபரங்களுக்கு: இந்த லிங்கை கிளிக் செய்து அறியலாம்.

சுற்றலாத் துறையை பொருத்தமட்டில் நன்கு பழகும் தன்மை, சவால்களை எதிர்கொள்வது, பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் திறமை, ஆங்கில மொழி அறிவுடன் ஏதேனும் வெளிநாட்டு மொழி ஒன்றையும் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் மிக அவசியம்.

தனித் திறமைகள்:

 • கம்ப்யூட்டர் ரிசர்வேசன் சிஸ்டம்ஸ் (CRS- அமீடஸ், கலீலியோ, சபர் & அபாகஸ்) போன்ற சாப்ட்வேர்கள் மூலம் விமான டிக்கெட் புக் செய்யும் திறமை.
 • வெளிநாட்டுப் பணங்களை கையாளும் அனுபவம், திறமைான வாடிக்கையாளர் சேவை, சுற்றுலா நிறுவன மேலாண்மை, மற்றும் உலக வரைபடத்தை உள்ளங்கையில் வைத்திருக்க வேண்டும்.
 • உலகளாவிய கலாச்சாரம், விடுமுறை, சீசன் போன்றவைகளை அறிந்திருப்பது விரும்பந்தக்கது.
 • வரலாறு, புவியியல், என எல்லாத்துறையிலும் ஆழ்ந்த ஞானம் இருக்க வேண்டும்.
 • ஆங்கிலம் தவிர்த்தது பல வெளிநாட்டு மொழிகளை தெரிந்து வைத்திருப்பது மிக மிக அவசியம்.
 • டிக்கெட் முன்பதிவு, அபராதங்கள் குறித்த அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக அறிந்திருத்தல் வேண்டும்.

பணிவாய்ப்புகள்:

சுற்றலாத் துறையில் படிப்பை முடித்தவர்கள் கீழ் கண்ட துறைகளில் பணியாற்ற முடியும்.

 • விமானங்களில் டிராபிக் அசிஸ்டென்ட்
 • கவுன்டர் பணி
 • விமானப் பணிப்பெண்
 • விமான பயணிகள் நல அலுவலர் 
 • விற்பனை மற்றும் சந்தைப்பிரிவு
 • வாடிக்கையாளர் சேவை மையம்
 • சரக்கு கையாளுதல் பிரிவு
 • சுற்றுலா மைய அலுவலகம்
 • பயண ஏற்பாட்டாளர் மையம்
 • டிராவல்ஸ் அண்ட் டூரிஸம் ஏஜென்சீஸ்
 • டூரிஸ்ட் விசா- பாஸ்போர்ட்
 • டூரிஸ்ட் கைடு
 • மணி எக்ஸ்சேஞ்ச்
 • நினைவுப் பொருள் விற்பனையகங்கள்
 • சுற்றலா ஆசிரியர்

போன்ற பல்வேறு வகையான பணிவாய்ப்புகளை பெறுகின்றனர்.

சம்பளம்:

ஆரம்ப நிலையில் ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையும், இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றால் ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சம் வரை ஊதியமாக பெறலாம். 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பின் ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

இது தவிர மத்திய மாநில அரசுப்பணி, சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

தகுதிகள்:

இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களிடம் சென்று பயிற்சி பெறுவதோடு மட்டுமல்லாமல், அது சம்பந்தமான படிப்புகளையும் படித்தால் கூடுதல் அறிவும், திறமையும் கிட்டும். கைநிறைய சம்பாதிக்கலாம்.

English summary
A career in Travel and Tourism: Everything you wanted to know

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia