ஸ்பாட்லே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வேணுமா? இந்த 9 விஷயத்தை மறக்காதீங்க!

Posted By:

வேலை தேடும் பலபேருக்கு நேர்முகத் தேர்வு என்றாலே இன்ஜினியரிங் மாணவர்கள் எம்3 பேப்பர் கிளியர் பண்றமாறிதான். பல தடைகளைத் தகர்தெறிந்து நேர்முகத் தேர்வில் இடறி விழுந்தவர்கள்தான் அதிகம்.

ஆனால், நாம நினைக்கிற மாதிரி இன்டெர்வியூவில் வெற்றிவாகை சூடுவது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயமில்லை.

9. ஸாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சி...

இன்டெர்வியூக்கு லேட் ஆயிடுச்சா கவலையை விடுங்க, உடனே ஸாரி கேளுங்க பாஸ். மீதி இன்டெர்வியூ பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்களோட பர்ஸ்ட் ஸாரியே உங்களை சரியான திறன்களை மதிப்பிட பயன்படலாம்.

ஆனால் இன்டெர்வியூக்கு வரும் போதே லேட்டா வந்த நல்லவா இருக்கும். இதுக்கு முதல் நாள் நேரமாக தூங்கி அதிகாலையில் எழுந்து ரெடியாவது அவசியம். டைம் கீப்பிங் ரொம்ப முக்கியம் பாஸ் மறந்துடாதீங்க.

இன்டெர்வியூக்கு அழைக்கப்பட்ட நேரத்துக்குச் சற்று முன்பே அங்கு இருப்பது நல்லது.

 

8. சேலரி எவ்வளவு கொடுப்பீங்க?

எந்த வேலையா இருந்தாலும் சம்பளம் ரொம்ப முக்கியம் என்பது நம் அனைவரும் அறிந்ததே, அதனால் இன்டெர்வியூவில் சில அடிப்படை விஷயங்களை கடைப்பிடித்தாலே பெரும்பாலான சமயங்களில் சம்பள விவகாரத்தை எளிதாகச் சமாளித்துவிடலாம். நமக்கான சம்பளத்தை நாமே எளிதாக தீர்மானிக்காலாம்.

உதரணமாக கல்வி கடன் மூலமாக கல்லூரி படிப்பை முடித்துள்ளேன் என்று உங்களை அறிமுகப்படுத்தும் போது அதற்காக உங்களது சம்பளத்தில் ஒரு பகுதியை ஒதுக்கவேண்டும் என்ற புரிதலை மறைமுகமாக ஏற்படுத்துகீறிர்கள். இதுதான் தாராக மந்திரம்.

 

7. லீவ் இருக்கா.... எவ்வளவு நாள்?

எப்போ ஸார் லீவு வரும்... எனக்கு அடுத்த மாசம் ஒரு ப்ளான் இருக்கு. இது அவ்வளோ நல்ல கேள்வியாக இல்லாவிட்டாலும் கூட, இது உங்களை அடுத்த கேள்விகான திட்டமிடலையும், அதே சமயம் உங்களுக்கு வேலையின் மீது உள்ள ஆர்வத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கும். விடுப்பு விவகாரங்களில் நிர்வாகம் கரராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு அளிக்கப்படும் விடுமுறைகளை முறையாக பயன்படுத்த தவறாதீர்கள்.

 

 

6. கொஞ்சமா தெரியும்?

பெரும்பாலான இன்டெர்வியூவில் கம்பெனி பத்தி என்ன தெரியும் கேட்டா கொஞ்சம் தெரியும் ஸார்னு சொல்பவர்கள்தான் அதிகம். இது உங்களை புத்திசாலியாக அடையாளப்படுத்தாது என்பதை நினைவில் கொள்க.

இப்போதை காலகட்டத்தில் உங்களது விரல் நுனியில் அலுவலக முகவரியில் இருந்து ஆடி கார் நம்பர் வரை அனைத்து விவரங்களையும் கூகுளில் பெறலாம். எனவே தேர்வுக்கு முந்தைய நாள் இன்டெர்வியூ செல்லவிருக்கும் அலுவலகம் தொடர்பான முழு விவரத்தையும் அறிவது உங்களது புத்திசாலிதனத்தை சரியாக மதிப்பிட பயன்படும்.

 

5. என்னோட மிகப் பெரிய வீக்னஸ் இதுதான்!

எல்லா இன்டெர்வியூவிலும் பெரும்பாலும் கேட்கப்படும் கேள்வி இது.

உங்களுடைய மிகப்பெரிய பலவீனமாக எதை நினைக்கிறீர்கள்? அப்டினு கேட்டா உங்களோட பதிலில் இருந்து அடுத்த கேள்வி கணைகள் வரலாம் என்பதை மறவாதீர்கள்.

அதே போல நான் எப்போதும் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவேன், ஹார்டு வொர்கர் போன்ற உப்பு சப்பு இல்லாத பதில்களை தவிர்ப்பது நலம்.

உங்களுடையை பலவீனத்தை சுட்டிக்காட்டும் போது மறைமுகமாக புதிய வேலைக்கான தாயாரிப்பை பிரதிபலிக்கும் விதமாக சுட்டி காட்டாலாம். அதில் இருந்து மீண்டுவர நீங்கள் எடுக்கும் பயிற்சியை பட்டியலிடுவது மிக அவசியம்.

 

 

4. முட்டாள் 'பாஸ்' திட்டுனா சந்தோஷப் படுங்க பாஸ்...

உங்கள எக்ஸ் பாஸ், வேலை பத்தி சொல்லுங்க... அப்படினா உடனே என்னுடைய கடைசி பாஸ் ஒரு முட்டாள் ஸார்னு பட்டுனு போட்டு உடைச்சிட கூடாது. வார்தைகளில் கவனம் தேவை.
எப்பவுமே உங்களுடைய முன்னாள் பாஸ் பத்தி தப்பா சுட்டிக்காட்டாதீர்கள். ஒரு வேலை உண்மையிலே அவரு அப்படிதான்னா கூட அதை ப்ரீய விடுங்க.

தற்போதைய பணியில் உங்களின் திறமைகளை எந்தவகையில் வளர்த்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை தெளிவு படுத்துங்கள். இது தற்போதைய கம்பெனியின் எதிர்கால திட்டங்களை உங்களிடம் பகிர ஒரு வாய்ப்பாக அமையும்.

 

 

3. சாவல்களை சந்திக்க நான் ரெடி... ஆனால் வாய்ப்பில்லை

ஏன் அங்கிருந்து வந்தீங்க, அல்லது இந்த நிறுவனத்தை தேர்ந்தேடுத்ததற்கான காரணம் என்ன? இது முந்தைய கேள்வியோடு தொடர்புடையது என்றாலும் கூட இதுவும் முக்கியம் என்பதை மறவாதீர்கள்.

முந்தைய அலுவலகத்தில் என்னை முழுமையாக பயன்படுத்தவில்லை என்பதால்தான் இந்த புதிய வாய்ப்பை பயன்படுத்த விரும்புகிறேன் என்று கூறினாலும் கூட நீங்கள் உங்களை முந்தைய அலுவலகத்தில் சரியாக எடுத்தாளவில்லையோ என்ற கேள்வி எழலாம்.

எது எப்படியே நீங்கள் பயன்படுத்தாத வித்தையை இங்கே மொத்தமாக இறக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.

 

2. போல்டான டெஸிஸன்

இதே போல நமக்கு பல்வேறு வகையான வேறு பணி வாய்ப்புகள் காத்திருக்கலாம் முடிவேடுப்பது நமது கையில்தான் உள்ளது.

உங்களை உடனே தேர்வு செய்யாவிட்டால் உடனே வேறு பணியை தேர்ந்தேடுப்பது உத்தமம். அதே சமயம் இந்த வேலையின் வருங்கால வளர்ச்சி குறித்தும், நமதுதனிப்பட்ட விருப்பம் குறித்தும் அறிவது அவசியம்.

இந்த வேலை ஓகேனு மனசுல பட்டா சிறிது காலம் காத்திருக்க நேரலாம் அது புதிய நிர்வாகத்தின் முடிவை பொறுத்த அமையலாம். ஆனால் முடிவு நாமதான் எடுக்கனும்.

 

 

1. வேலை மட்டும் தந்தால் போதும்; வேற எதுவுமே ...

ஏன் இந்த வேலைக்கு விண்ணப்பித்தீர்கள் என்று கேட்டால் சும்மா ஒரு வேலை இருந்த போதுன்னு மட்டும் கண்டிப்பா சொல்லாதீங்க. இது உங்களுடைய பொஷிஸன், சம்பளம் போன்றவைகளை பெரிதும் பாதிக்கும்.

எந்த வகையான நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருக்கோம் என்பதை அறிந்து அதற்கேற்றார் போல பதில் சொல்லுங்கள். அது உங்களின் தன்னம்பிக்கையை பிரதிபலிக்கும்.

 

 

சார்ந்த பதிவுகள்: 

ஆன்லைன் இண்டர்வ்யூ தேர்வுகளில் எளிதாக பாஸ் செய்ய இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

 

English summary
The article tells about tips of Interview

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia