வேலை இழந்த பிறகு சுலபமாக வேறு வேலை தேடுவது எப்படி?

வேலை இழக்கும் பொழுது மனதில் கோவம், எரிச்சல்,இயலாமை என பல உணர்வுகள் மேலோங்கும். அவற்றை விடவும், அடுத்து எங்கு வேலை பார்ப்பது என்ற மிகப்பெரிய கேள்வி நம் கண்முன் நிற்கும்.

By Gowtham Dhavamani

வேலை இழக்கும் பொழுது மனதில் கோவம், எரிச்சல், இயலாமை என பல உணர்வுகள் மேலோங்கும். அவற்றை விடவும், அடுத்து எங்கு வேலை பார்ப்பது என்ற மிகப்பெரிய கேள்வி நம் கண்முன் நிற்கும்.

எனவே அடுத்து எவ்வாறு துவங்குவது வேலை தேடும் படலத்தை என்பதை முடிவு செய்ய வேண்டும். அந்நேரத்தில், வேறு வேலை தேடும் பொழுது என்ன என்ன முயற்சிகள் எடுப்பீர்களோ அவற்றை செய்ய வேண்டும். இந்த கட்டுரையில் அந்த முயற்சிகள் பற்றி பார்ப்போம்.

1. ஒரு இடைவெளி எடுக்கவும்:

1. ஒரு இடைவெளி எடுக்கவும்:

உங்கள் கைகளில் எப்போதும் கிடைக்காத அளவு நேரம் இருக்கும். யாரும் கேள்விகள் கேட்க போவது இல்லை வேலைகள் கூறப்போவதும் இல்லை.

எனவே அந்த நேரத்தில் எவ்வாறு மனதை ஒருநிலைப்படுத்தி, வலுவாக்கலாம் என்பதை யோசிக்கவேண்டும். குடும்பத்தோடு சிறிது நாட்கள் செலவிடலாம்.

2. உங்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதை நிப்பாட்டுங்கள்:

2. உங்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதை நிப்பாட்டுங்கள்:

உங்கள் குறைகள் காரணமாக உங்களது வேலை பறிபோனது என்று யோசிக்க ஆரம்பிக்கும் முன்னர், கொஞ்சம் நிதானமாக சிந்திக்கவும். வேலை பறிபோக பல காரணங்கள் இருக்கலாம்.

3. புதிதாக என்ன திறமைகள் தேவை?

3. புதிதாக என்ன திறமைகள் தேவை?

மீண்டும் வேலை தேடும் படலம் துவங்க இருப்பதால், திறமைகள் எவ்வாறு மாறியுள்ளன. வேறு என்ன என்ன திறமைகள் அவசியம் என்பதை தேடிப்பார்க்கவும்.

ஆட்கள் தேவை என்பது போன்ற விளம்பரங்களில் அவர்கள் கூறும் வரையரைக்குள் தாங்கள் உள்ளீர்களா என்பதை கவனிக்கவும். காலத்திற்கு ஏற்ப மாறுவது அவசியம்.

4. திறமைகளை மேம்படுத்துங்கள்:

4. திறமைகளை மேம்படுத்துங்கள்:

வேலை இருக்கும் பொழுது என்ன தேவையோ அதனை மட்டும் செய்துவிட்டு விட்டுவிடுவோம். ஆனால் அப்படி இல்லாமல், தொடர்ந்து தேவையான திறமைகளை வளர்த்து வருவது அவசியம். எனவே இணையத்தில் உள்ள வலைதளங்கள் மூலம் கற்கலாம்.

 

5. ரெஸ்யூமில் மாற்றம் செய்யுங்கள்:

5. ரெஸ்யூமில் மாற்றம் செய்யுங்கள்:

கிடைக்கும் ஒவ்வொரு ரெஸ்யூமையும் வேலை தருபவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்கு வரும் 90% விண்ணப்பங்கள் சமந்தமில்லாமல் இருக்கும்.

விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்றவாறு தேவையான வார்த்தைகள் அதனில் இருத்தல் வேண்டும். முதல் பக்கத்தில் உங்கள் வேலைக்கு தொடர்பான வார்த்தைகளை எழுதவும்.

சுருக்கமாக உங்கள் வேலைகளை அதில் குறிப்பிடவும். அதில் தேர்வு பெற்றால்தான், அடுத்த பக்கத்திற்கு செல்லுவார்கள்.

 

6. நேர்மறையான எண்ணங்களை மனதில் கொள்ளவும்:

6. நேர்மறையான எண்ணங்களை மனதில் கொள்ளவும்:

வேலை இல்லை என்பதால், அடுத்த வேலை கிடைத்த உடன் அதில் சேருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டும். இது அடுத்த வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.

 

7. உங்கள் நட்பு வட்டத்தில் இயங்கவும்:

7. உங்கள் நட்பு வட்டத்தில் இயங்கவும்:

உங்களோடு வேலை செய்தவர்கள், நண்பர்கள், உங்கள் வேலைக்கு தொடர்புடையவர்கள் என பலரோடும் பேசி, சிபாரிசு கிடைக்குமா என்று பாருங்கள்.

 

8. அறிவுப்புகளை மட்டும் நம்பி இருக்காதீர்கள்:

8. அறிவுப்புகளை மட்டும் நம்பி இருக்காதீர்கள்:

உங்களுக்கு தெரிந்த வேலை தேடும் தளங்களை தாண்டி, தற்போது நிறுவனங்கள் சமூக வலைத்தளங்கள் மூலமும் ஆட்களை எடுக்கின்றனர்.

மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் சமந்தப்பட்ட நிறுவனத்தை நீங்கள் நேரடியாக அணுக இயலும். அவை மூலம், நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளோடு பேச முடிகிறதா என பார்க்கலாம். சரியான சந்தர்ப்பம் அவ்வாறும் அமையலாம்.

 

9. பொறுமையாக இருங்கள்:

9. பொறுமையாக இருங்கள்:

அதிக நாட்கள் பார்த்து பின்பு வேலையில் இருந்து நீக்கப்படுவது போன்று புதிதாக வேலையில் ஒருவரை நியமிக்கவும் நிறுவனங்கள் அதிக நாட்கள் எடுத்துக்கொள்வார்கள்.

குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் ஆகலாம். எனவே அது வரை பொறுமையாக காத்திருக்கவும். சில காலி இடங்கள் இருந்து, அதற்கு ஆல் சேர்க்க நீண்ட சோதனைகள் இருக்கலாம்.

எனவே சரியான கால அளவு கொண்டு வேலை தேடும் படலத்தை எதிர்கொள்ளுங்கள்.

 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
9 Quick Tips That Will Help You Get Hired Fast
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X