வாரன்டி, கேரன்டி ஓகே! லாஸுக்கும், லூஸுக்கும் வித்தியாசம் தெரியுமா?

Posted By: Kani

நாம் பேசும் வார்த்தைகளுக்கு வலிமை, நினைக்கும் எண்ணங்களுக்கு எழுச்சி இருக்கிறது என்பதை சில நேரங்களில் உணர்ந்திருப்போம். ஒரு ‌சில வா‌ர்‌த்தைக‌ள் இர‌ண்டு அ‌ர்‌த்த‌ங்களை‌க் கொடு‌க்கு‌ம். பய‌ன்படு‌த்து‌ம் இட‌த்‌தி‌ற்கே‌ற்ப அத‌ன் பொரு‌ள் அமையு‌ம்.

நல்லதை பேசினால் நல்லதும், கெட்டது பேசினால் கெட்டதும் நடக்கும் என்பது நூற்றுக்கு, நூறு உண்மை. உணர்ச்சி வேகத்தில் சில நேரம் வார்த்தைகள் தடுமாறும். அந்தசமயம், வார்த்தைகளின் தொடக்க எழுத்துகளை மாற்றிச் சொல்லிவிட்டால் அதன் அர்த்தமே மாறிவிடும். பல நேரம் இது அதுவா? இல்லை இதுவா? ஒரே கன்பியூஷன் என கேள்வி எழும். அந்த வகையில் சில ஆங்கில வார்த்தைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டின் விளக்கங்களை பார்க்கலாம்.

9. என்ன வித்தியாசம்?

இழப்பு: Lose-இதனை நஷ்டம் என்றும் அழைப்பார்கள்.

‘வரிச் சலுகையால் அரசுக்கு வருமான இழப்பு பல லட்சம்'
‘தலைவரின் மறைவு நாட்டுக்குப் பெரும் இழப்பாகும்'

தளர்வு: Loose-சோர்வு; களைப்பு. ‘காய்ச்சலுக்குப் பின் உடல் தளர்ச்சியாக இருக்கிறது'

‘முதுமைத் தளர்ச்சி காரணமாக அவர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார்'
‘ஒரு நீண்ட பயணத்திற்குப் பின் அவர் தளர்ச்சியும் அலுப்புமாக வீடு திரும்பினார்'

 

8. என்ன வித்தியாசம்?

விலகுதல்: Resign- (தொடர்பு, உறவு, பொறுப்பு முதலியவற்றிலிருந்து) நீங்குதல்.

‘இடைத்தேர்தலில் தோற்றால் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார்'
‘புதிய வேலையில் ஆறு மாதத்துக்குக்கூட அவரால் தாக்குப்பிடிக்க முடியாததால் பணியிலிருந்து விலக நேரிட்டது'
‘உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் பொறுப்பிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளலாம்'

மறுகையொப்பம்: Re-sign-‘அவருடைய கையொப்பம் சரியாக பதிவாகவில்லை எனவே மீண்டும் அவரிடம் மறு கையொப்பம் வாங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

7. என்ன வித்தியாசம்?

அறிவுரை: Advice-நன்மை விளைவிக்கும் நோக்குடன் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் கருத்து; ஆலோசனை; புத்திமதி.

‘என்னுடைய அறிவுரைப்படி நடப்பதோ அல்லது அதைப் புறக்கணிப்பதோ உன்னுடைய விருப்பம்' ‘எனக்கு அறிவுரை கூறும் அளவுக்கு நீ வளர்ந்துவிட்டாயா?'

அட்வைஸ்: Advise என் தந்தை பணத்தை கவனமாக முதலீடு செய்யும்படி எனக்கு அறிவுரை கூறினார். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், உச்சரிப்புகள் மட்டும் மாறுபடும்.

 

6. என்ன வித்தியாசம்?

பாதிப்பு: Affect (மனத்தில், பழக்கவழக்கங்களில், கலை, இலக்கியங்களில் ஒன்று பிறவற்றின் மேல் அல்லது பிறரின் மேல் ஏற்படுத்தும்) தாக்கம்.

‘மேலைநாட்டு நாகரிகத்தின் பாதிப்பை நகரங்களில் நன்றாகக் காண முடிகிறது'
‘சங்க இலக்கியத்தின் பாதிப்பைக் கவிஞர் சி. மணியிடம் காண்கிறோம்'
‘கண்ணெதிரில் நடந்த கொடூர விபத்து ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து விடுபட வெகு நேரம் ஆயிற்று'

விளைவு: Effect-ஒரு செயலின் காரணமாக உண்டாகும் பலன்.

‘வேலையை விடுவதற்கு முன் அதன் விளைவுகளை யோசித்துப்பார்த்தாயா?'
‘மக்கள்தொகை பெருகிக்கொண்டே போனால் நாம் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'
‘அவர் பதவி விலகுவதால் ஏற்படும் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்'

 

5. என்ன வித்தியாசம்?

பாராட்டு: Compliment-(பேச்சில் அல்லது எழுத்தில் ஒருவரை) பாராட்டும் செயல்; புகழ்ச்சி.

‘தேசிய விருது பெற்ற தலைமை ஆசிரியருக்குப் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது'
‘சர்வதேசத் திரைப்பட விழாவில் பலருடைய பாராட்டையும் பெற்ற இந்தியத் திரைப்படம் இது'
(ஒரு செயல், நிகழ்வு போன்றவை) முடிவடையும் நிலை.

நிறைவு: Complement-‘சென்னையில் ஒரு வார காலமாக நடைபெற்று வந்த திரைப்பட விழாவின் நிறைவில் ஒரு வங்காள மொழிப் படம் திரையிடப்பட்டது'
‘புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாள்'

 

4. என்ன வித்தியாசம்?

பாரபட்சமற்ற: Disinterested- சில நேரங்களில் ஒரு அந்நியன் குடும்ப உறுப்பினரைக் காட்டிலும் மிகவும் நியாயமான முடிவை எடுக்க முடியும்.

ஆர்வமின்மை: Uninterested- ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இல்லாத நிலை. ஈடுபாடு இல்லை.

‘நடனம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் அவளுக்கு இல்லை'
‘இந்தியாவுடன்அணுசக்தித் துறையில் கூட்டாகச் செயல்பட சீனாவுக்கு ஆர்வமில்லை'.

 

3. என்ன வித்தியாசம்?

தாங்கு: Bear-(பாரம், கனம்) சுமக்க முடிதல்.
‘இந்த வண்டி அதிக பாரம் தாங்காது'
உரு வழக்கு ‘கணவனும் மனைவியும்தான் குடும்ப பாரத்தைத் தாங்க வேண்டும்'

மூடப் படாத: Bare-(திறந்திருக்கும் பெட்டி, பை பாத்திரம் போன்றவற்றின் வாய்ப்பகுதி, முன்பகுதி அல்லது மேல்பகுதியை) அடைத்தல்
‘நான் பார்த்தபோது பெட்டி மூடவில்லை'
‘தண்ணீர்த் தவலையை மூட மறந்துவிட்டேன்'

 

2. என்ன வித்தியாசம்?

கூடுதல்: Further- (அரசு அலுவலகம், பதவி ஆகியவற்றைக் குறிக்கும்போது) (தேவை கருதி) ‘மேலும் ஏற்படுத்தப்பட்டது' என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல். ‘கலவரப் பகுதிக்குக் கூடுதல் படைகள் அனுப்பத் தீர்மானம்'

தூரம்: Farther-தொலைவு.
‘நீ போக வேண்டிய இடம் இங்கிருந்து எவ்வளவு தூரம்?'
‘கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வயல்வெளி'
‘எவ்வளவு தூரத்தில் உங்கள் வீடு உள்ளது?'

 

1. என்ன வித்தியாசம்?

தூக்கில் போடு: Hanged-(மரண தண்டனை பெற்றவரை) சுருக்குக் கயிற்றைக் கழுத்தில் இறுக்கி மரணம் அடையச் செய்தல்.

‘‘குற்றவாளியின் உயிர் பிரியும் வரை தூக்கில் போட வேண்டும்' என்று நீதிபதி தீர்ப்பளித்தார்'

தொங்கு: Hung-மேல் முனையில் மட்டும் பிடிப்புடன் இருந்து அல்லது ஒன்றில் மாட்டப்பட்டுக் கீழ்நோக்கியவாறு இருத்தல்.

‘கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்கினான்'
‘புளியங்காய்கள் கொத்துக்கொத்தாகக் காய்த்துத் தொங்கின'
‘தோளில் பை தொங்க நடந்து வந்தான்'

 

வாரன்டி, கேரன்டி... இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

English summary
9 English Word Pairs That Confuse Absolutely Everyone

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia