இன்றைய காலகட்டத்தில் மேம்பட்ட கல்வி முறையும், பணியமர்த்துவதில் ஏற்பட்டுள்ள போட்டிகளும் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை மிகவும் குறைத்துள்ளது. வருடந்தோறும் கல்லூரி படிப்பை முடித்து வெளியேறும் இளைஞர்களில் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பின்றி இருப்பதாக அறிக்கை மூலம் அறியமுடிகிறது.
சரியான தகுதிகள் இருந்தும் முறையாக விண்ணப்பிக்காத காரணத்தினாலேயே இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை பறிபோய்விடுகிறது. சரி, ஐடி வேலைக்கு எந்த மாதிரி ரெசியூம் இருந்தா ஈசியா வேலை கிடைக்கும் என பார்க்கலாம் வாங்க.

விரைவாக ஈர்க்க வேண்டும்
உங்களுடைய சுயவிபரங்கள் அடங்கிய ரெசியூம் ஆனது 10 முதல் 15 வினாடிகளில் வேலையளிப்போரை கவர்ந்துவிட வேண்டும். பெரும்பாலும் எந்த வேலை அளிக்கும் நிறுவனமும் உங்களுடைய முழு விபரம் அடங்கிய விண்ணப்பத்தினை படிப்பது இல்லை. ஆனால், அவர்களை முழுமையாகப் படிக்க வைக்க வேண்டிய திறமையினை வளர்க்க வேண்டும். ரெசியூமில் உங்களுடைய இலக்குகளை முதலில் பட்டியலிடுங்கள்.

விரிவாகக் கூறுங்கள்
உங்களுடைய முந்தைய வேலை, அல்லது உங்களுடைய அனுபவங்களை வெறும் ஒற்றைச் சொல்லில் கூறுவதை விட ஓரிரு வரிகள் விரிவாகக் குறிப்பிடுங்கள். நீங்கள் மேற்கொண்ட பணியாளர் ஏற்பட்ட நன்மைகளைக் குறிப்பிடுங்கள்.

பிழைகளைத் தவிர்த்திடுங்கள்...
ஐடி வேலைக்கு விண்ணப்பிக்கும் போது முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்று பிழைகளைத் தவிர்த்து ஈர்க்கக்கூடிய வகையில் ரெசியூம் தயாரிப்பது. குறிப்பாக, ஐடியில் எக்ஷல் முறையிலேயே அதிக வேலை இருக்கும். ஆதலால் அவற்றினை பயன்படுத்தி ரெசியூம் தயாரியுங்கள். மேலும், வாங்கிகளில் இலக்கணப் பிழை வராமல் கவனித்துக் கொள்ளுங்கள்.

தனித்திறனைக் குறிப்பிடுங்கள்...
கல்வி, முன் அனுபவம் உள்ளிட்டவற்றை அடித்தளமிட்டுக் காட்டுவதை விட உங்களுடைய தனித் திறனை வித்தியாசப்படுத்தி காட்டுவது கட்டாயம். பலர் விண்ணப்பித்துள்ள ஒரு பணிக்கு இதுபோன்று கூடுதல் அலங்காரம் செய்த ரெசியூம் தனி ஈர்ப்பைப் பெறும். உதாரணத்திற்கு ஐடி-த்துறைக்கு என மேற்கொண்ட படிப்புகள், கணினி மொழி உள்ளிட்டவற்றை அடித்தளமிட்டுக் காட்டுவது சிறந்தது.

முறையான எழுத்துக்கள்
ரெசியூம் தயாரிக்கும் போது விதவிதமான எழுத்துக்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முறையான மேலும், தெளிவான எழுத்துக்களையே பயன்படுத்துவது சிறந்தது. மாறாக, கணினியில் உள்ள விதவிதமான எழுத்துக்களைப் பயன்படுத்தும் போது அது வேலையளிப்போருக்கு ஒருவித வெறுப்பை உண்டாக்கும்.

முன் உதாரணமாகும் ரெசியூம்
இணையத்தில் ஏராளமான ரெசியூம் வகைகள்நம் வசதிக்காக உள்ளன. ஆனால், அவற்றில் ஏதேனும் ஓர் ரெசியூமைப் பார்த்து அதே போல தயார் செய்வதைவிட அதை ஓர் மாதிரியாக மட்டுமே வைத்துக் கொண்டு உங்களுக்கான ரெசியூமை உருவாக்க வேண்டும். ஏனென்றால் இணையத்தில் நீங்கள் பயன்படுத்திய அதே ரெசியூமைத்தான் உங்கள் சக போட்டியாளரும் பயன்படுத்தியிருப்பார் என்பதை மறக்க வேண்டாம்.

குறிப்பிட்டு எழுதுங்கள்...
உங்களுடைய ரெசியூம் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என விரும்பினால் உங்களுடைய முந்தைய நிறுவனத்தின் பெயர், கல்வி நிறுவனம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு எழுதுங்கள்.

கூடுதலாக எழுதுங்கள்...
நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு உங்களுடைய ரெசியூமானது தோற்றமளிக்கவில்லை என்றால் நீங்கள் மேற்கொண்ட படிப்பில் தற்போதைய நிறுவனத்தின் இலக்கை எவ்வாறு அடைய முடியும், நிறுவனத்தை மேம்படுத்த உங்களிடம் உள்ள திட்டங்கள், வருமானம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிடுங்கள்.